1. [QS]“யோபே, என் நியாயங்களைக் கேளும்; [QE][QS]என் வார்த்தைகளுக்கெல்லாம் செவிகொடும். [QE]
2. [QS]இதோ, என் வாயை இப்போது திறந்தேன்; [QE][QS]என் வாயிலிருக்கிற என் நாவானது பேசும். [QE]
3. [QS]என் வார்த்தைகள் என் இருதயத்தின் உண்மைக்கு ஒத்திருக்கும்; [QE][QS]நான் அறிந்ததை என் உதடுகள் சுத்தமாக பேசும். [QE]
4. [QS]தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்; [QE][QS]சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர்கொடுத்தது. [QE]
5. [QS]உம்மால் முடிந்தால் எனக்கு மறுமொழி கொடும்; [QE][QS]நீர் ஆயத்தப்பட்டு எனக்கு முன்பாக நில்லும். [QE]
6. [QS]இதோ, உம்மைப்போல நானும் தேவனால் உண்டானவன்; [QE][QS]நானும் மண்ணினால் உருவாக்கப்பட்டவன். [QE]
7. [QS]இதோ, நீர் எனக்குப் பயப்பட்டுக் கலங்கத் தேவையில்லை; [QE][QS]என் கை உம்மேல் பாரமாயிருக்காது. [QE]
8. [QS]நான் என் காதாலே கேட்க நீர் சொன்னதும், [QE][QS]நான் கேள்விப்பட்ட உம்முடைய வார்த்தைகளின் சத்தமும் என்னவென்றால்: [QE]
9. [QS]நான் மீறுதல் இல்லாத சுத்தமுள்ளவன், [QE][QS]நான் குற்றமற்றவன், என்னில் பாவமில்லை. [QE]
10. [QS]இதோ, என்னில் அவர் குற்றம் கண்டுபிடிக்கப்பார்க்கிறார், [QE][QS]என்னைத் தமக்கு எதிரியாக நினைத்துக்கொள்ளுகிறார். [QE]
11. [QS]அவர் என் கால்களைத் தொழுவத்திலே அடைத்து, [QE][QS]என் நடைகளையெல்லாம் காவல் வைக்கிறார் என்று சொன்னீர். [QE]
12. [QS]இதிலே நீர் நீதியுள்ளவர் அல்லவென்று உமக்கு மறுமொழியாகச் சொல்லுகிறேன்; [QE][QS]மனிதனைவிட தேவன் பெரியவராயிருக்கிறார். [QE]
13. [QS]அவர் தம்முடைய செயல்கள் எல்லாவற்றையும் குறித்துக் [QE][QS]பதில் [* தேவன் மனிதர்களின் காரியத்தில் பதில் தருவதில்லை ] சொல்லவில்லையென்று நீர் அவருடன் ஏன் வழக்காடுகிறீர்? [QE]
14. [QS]தேவன் ஒரு முறை சொல்லியிருக்கிற காரியத்தை [QE][QS]இரண்டாம் முறை பார்த்து மாற்றுகிறவரல்லவே. [QE]
15. [QS]ஆழ்ந்த தூக்கம் மனிதர்மேல் இறங்கி, [QE][QS]அவர்கள் படுக்கையின்மேல் படுத்திருக்கும்போது, [QE]
16. [QS]அவர் இரவு நேரத்துத் தரிசனமான சொப்பனத்திலே மனிதருடைய காதுகளுக்குத் தாம் செய்யும் காரியத்தை வெளிப்படுத்தி, [QE][QS]அதை அவர்களுக்கு வரும் தண்டனையினாலே பயமுறுத்தி, [QE]
17. [QS]மனிதன் தன்னுடைய செயலைவிட்டு நீங்கவும், [QE][QS]மனிதருடைய பெருமை அடங்கவும் செய்கிறார். [QE]
18. [QS]இவ்விதமாக அவனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கும், [QE][QS]அவன் உயிரைப் பட்டய வெட்டுக்கும் தப்புவிக்கிறார். [QE]
19. [QS]அவன் தன் படுக்கையிலே வாதையினாலும், [QE][QS]தன் எல்லா எலும்புகளிலும் கடுமையான வியாதியினாலும் தண்டிக்கப்படுகிறான். [QE]
20. [QS]அவன் உயிர் அப்பத்தையும், [QE][QS]அவனுடைய ஆத்துமா ருசிகரமான ஆகாரத்தையும் வெறுக்கும். [QE]
21. [QS]அவனுடைய உடல் காணப்படாமல் அழிந்து, [QE][QS]மூடப்பட்டிருந்த அவனுடைய எலும்புகள் வெளிப்படுகிறது. [QE]
22. [QS]அவனுடைய ஆத்துமா பாதாளத்திற்கும், அவனுடைய உயிர் மரணத்திற்கும் நெருங்குகிறது. [QE]
23. [QS]ஆயிரத்தில் ஒருவராகிய பரிந்துபேசுகிற தேவ தூதனானவர் மனிதனுக்குத் தம்முடைய நிதானத்தை அறிவிப்பதற்கு, [QE][QS]அவனுக்கு சாதகமாக இருந்தாரென்றால், [QE]
24. [QS]அவர் அவனுக்கு இரங்கி, அவன் படுகுழியில் இறங்காமல் இருக்க: [QE][QS]நீர் அவனைக் காப்பாற்றும்; [QE][QS]மீட்கும் பொருளை நான் கண்டுபிடித்தேன் என்பார். [QE]
25. [QS]அப்பொழுது அவனுடைய உடல் வாலிபத்தில் இருந்ததைவிட ஆரோக்கியமடையும்; [QE][QS]தன் இளவயது நாட்களுக்குத் திரும்புவான். [QE]
26. [QS]அவன் தேவனை நோக்கி விண்ணப்பம் செய்யும்போது, [QE][QS]அவன் அவருடைய சமுகத்தைக் கெம்பீரத்துடன் பார்க்கும்படி அவர் அவன்மேல் பிரியமாகி, [QE][QS]அந்த மனிதனுக்கு அவனுடைய நீதியின் பலனைக் கொடுப்பார். [QE]
27. [QS]அவன் மனிதரை நோக்கிப் பார்த்து: [QE][QS]நான் பாவம் செய்து செம்மையானதைப் புரட்டினேன், [QE][QS]அது எனக்குப் பலன் கொடுக்கவில்லை. [QE]
28. [QS]என் ஆத்துமா படுகுழியில் இறங்காமல் இருக்க, [QE][QS]அவர் அதை காப்பாற்றுவார் [QE][QS]ஆகையால் என் உயிர் வெளிச்சத்தைக் காணும் என்று சொல்லுவான். [QE]
29. [QS]இதோ, தேவன் மனிதனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கு விலக்குகிறதற்கும், [QE][QS]அவனை உயிருள்ளோரின் வெளிச்சத்தினாலே பிரகாசிப்பதற்கும், [QE]
30. [QS]அவர் இவைகளையெல்லாம் அவனிடத்தில் பலமுறை நடப்பிக்கிறார். [QE]
31. [QS]யோபே, நீர் கவனித்து என் சொல்லைக் கேளும்; [QE][QS]நான் பேசப்போகிறேன், நீர் மவுனமாயிரும். [QE]
32. [QS]சொல்லவேண்டிய நியாயங்கள் இருந்ததென்றால், [QE][QS]எனக்குப் பதில் கொடும்; [QE][QS]நீர் பேசும், உம்மை நீதிமானாக நிரூபிக்க எனக்கு ஆசையுண்டு. [QE]
33. [QS]ஒன்றும் இல்லாதிருந்ததென்றால் நீர் என் சொல்லைக் கேளும், [QE][QS]மவுனமாயிரும், நான் உமக்கு ஞானத்தைப் போதிப்பேன்” என்றான். [QE]