1. [QS]என் கண்களுடன் உடன்படிக்கைசெய்த நான் [QE][QS]ஒரு கன்னிகையின்மேல் நினைவாக இருப்பதெப்படி? [QE]
2. [QS]அப்பொழுது உன்னதங்களிலிருந்து தேவன் அளிக்கும் பங்கும், [QE][QS]உன்னதத்திலிருந்து சர்வவல்லமையுள்ள தேவன் கொடுக்கும் பங்கும் கிடைக்குமோ? [QE]
3. [QS]மாறுபாடானவனுக்கு ஆபத்தும், [QE][QS]அக்கிரமக்காரருக்கு தண்டனையுமல்லவோ கிடைக்கும். [QE]
4. [QS]அவர் என் வழிகளைப் பார்த்து, [QE][QS]என் நடைகளையெல்லாம் கணக்கிடுகிறார் அல்லவோ? [QE]
5. [QS]நான் மாயையிலே நடந்தேனோ, [QE][QS]என் கால் தவறுசெய்ய வேகமானதோ என்று, [QE]
6. [QS]சரியான தராசிலே தேவன் என்னை நிறுத்து, [QE][QS]என் உத்தமத்தை அறிவாராக. [QE]
7. [QS]என் நடைகள் வழியைவிட்டு விலகினதும், [QE][QS]என் இருதயம் என் கண்களைப் பின்தொடர்ந்ததும், [QE][QS]ஏதாகிலும் ஒரு குற்றம் என் கைகளில் ஒட்டிக்கொண்டதும் இருந்தால், [QE]
8. [QS]அப்பொழுது நான் விதைத்ததை வேறொருவன் சாப்பிடுவானாக; [QE][QS]என் பயிர்கள் வேர் இல்லாமல் போகக்கடவது. [QE]
9. [QS]என் மனம் எந்தப் பெண்ணின்மேல் மயங்கி, [QE][QS]அடுத்தவனுடைய வாசலை நான் எட்டிப் பார்த்திருந்தால், [QE]
10. [QS]அப்பொழுது என் மனைவி வேறொருவனுக்கு மாவரைப்பாளாக; [QE][QS]வேறு மனிதர் அவள்மேல் சாய்வார்களாக. [QE]
11. [QS]அது தவறு, அது நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படும் குற்றமாமே. [QE]
12. [QS]அது பாதாளம்வரை எரிக்கும் [QE][QS]நெருப்பாய் என் விளைச்சல்களையெல்லாம் அழிக்கும். [QE]
13. [QS]என் வேலைக்காரனோ, என் வேலைக்காரியோ, என்னுடன் வழக்காடும்போது, [QE][QS]அவர்கள் நியாயத்தை நான் அசட்டைசெய்திருந்தால், [QE]
14. [QS]தேவன் எழும்பும்போது, நான் என்ன செய்வேன்; [QE][QS]அவர் விசாரிக்கும்போது, நான் அவருக்கு திரும்ப என்ன பதில் சொல்லுவேன். [QE]
15. [QS]தாயின் கர்ப்பத்தில் என்னை உண்டாக்கியவர் [QE][QS]அவனையும் உண்டாக்கினார் அல்லவோ? [QE][QS]ஒரேவிதமான கர்ப்பத்தில் எங்களை உருவாக்கினார் அல்லவோ? [QE]
16. [QS]ஏழைகள் விரும்பியதை நான் கொடுக்காமலிருந்து, [QE][QS]விதவையின் கண்ணீரினால் கண்களைப் பூத்துப்போகவைத்து, [QE]
17. [QS]தாய் தகப்பனில்லாத பிள்ளை என் ஆகாரத்தில் சாப்பிடாமல், [QE][QS]நான் ஒருவனாய்ச் சாப்பிட்டதுண்டோ? [QE]
18. [QS]என் சிறுவயதுமுதல் அவனுடைய தகப்பனிடத்தில் வளர்வதுபோல என்னுடன் வளர்ந்தான்; [QE][QS]நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் அப்படிப்பட்டவர்களை கைபிடித்து நடத்தினேன். [QE]
19. [QS]ஒருவன் உடையில்லாததினால் மடிந்துபோகிறதையும், [QE][QS]ஏழைக்கு அணிய ஆடையில்லாதிருக்கிறதையும் நான் கண்டபோது, [QE]
20. [QS]அவன் என் ஆட்டுரோமக் கம்பளியினாலே அனல்கொண்டதினால், [QE][QS]அவனுடைய இருதயம் என்னைப் புகழாதிருந்ததும், [QE]
21. [QS]ஒலிமுகவாசலில் எனக்குச் செல்வாக்கு உண்டென்று நான் கண்டு, [QE][QS]திக்கற்றவனுக்கு விரோதமாக என் கையை நீட்டினதும் உண்டானால், [QE]
22. [QS]என் கை தோள்பட்டையிலிருந்து விலகி, [QE][QS]என் கையின் எலும்பு முறிந்துபோவதாக. [QE]
23. [QS]தேவன் தண்டிப்பார் என்றும், [QE][QS]அவருடைய மகிமைக்கு முன் நிற்கமுடியாது என்றும், [QE][QS]எனக்குப் பயங்கரமாயிருந்தது. [QE]
24. [QS]நான் பொன்னின்மேல் என் நம்பிக்கையை வைத்து, [QE][QS]தங்கத்தைப்பார்த்து: [QE][QS]நீ என் ஆதரவு என்று நான் சொன்னதும், [QE]
25. [QS]என் செல்வம் அதிகமென்றும், [QE][QS]என் கைக்கு அதிகமாக கிடைத்ததென்றும் நான் மகிழ்ந்ததும், [QE]
26. [QS]சூரியன் பிரகாசிக்கும்போதும், அல்லது சந்திரன் மகிமையாகச் செல்லும்போதும், [QE][QS]நான் அதை நோக்கி: [QE]
27. [QS]என் மனம் இரகசியமாக மயங்கி, [QE][QS]என் வாய் என் கையை முத்தம் செய்ததுண்டானால், [QE]
28. [QS]இதுவும் நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படத்தக்க அக்கிரமமாயிருக்கும்; [QE][QS]அதினால் உன்னதத்திலிருக்கிற தேவனை மறுதலிப்பேனே. [QE]
29. [QS]என் பகைவனுடைய ஆபத்திலே நான் மகிழ்ந்து, [QE][QS]பொல்லாப்பு அவனுக்கு நடந்தபோது மகிழ்ந்திருந்தேனோ? [QE]
30. [QS]அவன் உயிருக்குச் சாபத்தைக் கொடுக்க விரும்பி, [QE][QS]வாயினால் பாவம் செய்ய நான் இடங்கொடுக்கவில்லை. [QE]
31. [QS]அவனுடைய இனத்தார்களில் திருப்தியாகாதவனைக் காண்பிப்பவன் யாரென்று [QE][QS]என் கூடாரத்தின் மனிதர் சொல்லமாட்டார்களோ? [QE]
32. [QS]அந்நியர் வீதியிலே இரவு தங்கினதில்லை; [QE][QS]வழிப்போக்கனுக்கு என் வாசல்களைத் திறந்தேன். [QE]
33. [QS]நான் ஆதாமைப்போல என் மீறுதல்களை மூடி, [QE][QS]என் அக்கிரமத்தை என் மடியிலே ஒளித்துவைத்தேனோ? [QE]
34. [QS]மிகுதியான என் மக்கள் கூட்டத்திற்கு நான் பயந்ததினாலாவது, [QE][QS]மக்கள் செய்யும் இகழ்ச்சி என்னை அதிர்ச்சியடையச் செய்ததினாலாவது, [QE][QS]நான் பேசாதிருந்து, வாசற்படியைவிட்டுப் புறப்படாதிருந்தேனோ? [QE]
35. [QS]ஆ, என் வழக்கைக் கேட்கிறவன் ஒருவன் இருந்தால் நலமாயிருக்கும்; [QE][QS]இதோ, சர்வவல்லவர் எனக்கு பதில் அருளிச்செய்யவும், [QE][QS]என் எதிராளி தன் வழக்கை எழுதிக்கொடுக்கவும் எனக்கு விருப்பமுண்டு. [QE]
36. [QS]அதை நான் என் தோளின்மேல் வைத்து, [QE][QS]எனக்குக் கிரீடமாக அணிந்துகொள்வேனே. [QE]
37. [QS]அவனுக்கு நான் என் நடைகளைத் தொகை தொகையாகக் காண்பித்து, [QE][QS]ஒரு பிரபுவைப்போல அவனிடத்தில் போவேன். [QE]
38. [QS]எனக்கு விரோதமாக என் சொந்த பூமி கூப்பிடுகிறதும், [QE][QS]அதின் வரப்புகள்கூட அழுகிறதும், [QE]
39. [QS]கூலிகொடுக்காமல் நான் அதின் பலனைச் சாப்பிட்டு, [QE][QS]பயிரிட்டவர்களின் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினதும் உண்டானால், [QE]
40. [QS]அதில் கோதுமைக்குப் பதிலாக முள்ளும், [QE][QS]வாற்கோதுமைக்குப் பதிலாகக் களையும் முளைக்கட்டும்” என்றான். யோபின் வார்த்தைகள் முடிந்தது. [QE]