4. அந்த நாள் இருளாக்கப்படுவதாக;
தேவன் உயரத்திலிருந்து அதை விசாரிக்காமலும், வெளிச்சம் அதின்மேல் பிரகாசிக்காமலும், |
5. கடுமையான இருளும்
மரண இருளும் அதைக் கறைப்படுத்தி, கருமேகம் அதை மூடி, மந்தாரநாளின் பயங்கரங்கள் அதை பயமுறுத்துவதாக. |
6. அந்த இரவை இருள் பிடிப்பதாக;
வருடத்தின் நாட்களில் அது சந்தோஷப்படுகிற நாளாக இராமலும் மாதக்கணக்கிலே அது வராமலும் போவதாக. |
9. அதின் மறையும் காலத்தில் தோன்றிய நட்சத்திரங்கள் இருண்டு,
அது எதிர்பார்த்திருந்த வெளிச்சம் தோன்றாமலும், விடியற்காலத்து வெளுப்பை அது பார்க்காமலும் இருப்பதாக. |
10. நான் இருந்த கர்ப்பத்தின் வாசலை அது அடைக்காமலும்,
என் கண்கள் காண்கிற வருத்தத்தை மறைத்துவிடாமலும் இருந்ததே. |
15. அல்லது, பொன்னை உடையவர்களும்,
தங்கள் வீடுகளை வெள்ளியினால் நிரப்பினவர்களுமான பிரபுக்களுடன் நான் இப்பொழுது தூங்கி இளைப்பாறுவேனே. |
16. அல்லது, வெளிப்படாத வளர்ச்சியடையாத கருவைப்போலவும்,
வெளிச்சத்தைப் பார்க்காத குழந்தைகளைப்போலவும் இருப்பேனே. |
17. துன்மார்க்கருடைய தொந்தரவு அங்கே ஓய்ந்திருக்கிறது;
பெலனற்று சோர்ந்து போனவர்கள் அங்கே இளைப்பாறுகிறார்கள். |
18. சிறைப்பட்டிருந்தவர்கள் அங்கே ஏகமாக அமர்ந்திருக்கிறார்கள்;
ஒடுக்குகிறவனுடைய சத்தம் அங்கே கேட்கப்படுகிறதில்லை. |
22. அதற்காகச் சந்தோஷப்படுகிற பாக்கியம் இல்லாதவராகிய இவர்களுக்கு வெளிச்சமும்,
மனவருத்தமும் உள்ள இவர்களுக்கு உயிர் கொடுக்கப்படுகிறதினால் பலன் என்ன? |
24. என் சாப்பாட்டுக்கு முன்னே எனக்குப் பெருமூச்சு உண்டாகிறது;
என் கதறுதல் வெள்ளம்போல் புரண்டுபோகிறது. |