1. [PS]யோபு பின்னும் தன் பிரசங்கவாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது: [PE]
2. [QS]“என் சுவாசம் என்னிலும், [QE][QS]தேவன் தந்த ஆவி என் மூக்கிலும் இருக்கும்வரை, [QE]
3. [QS]என் உதடுகள் அநீதியைச் சொல்வதுமில்லை; [QE][QS]என் நாக்கு பொய் பேசுவதுமில்லையென்று, [QE]
4. [QS]என் நியாயத்தைத் தள்ளிவிடுகிற தேவனும், [QE][QS]என் ஆத்துமாவைக் கசப்பாக்குகிற சர்வவல்லமையுள்ள தேவனுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். [QE]
5. [QS]நீங்கள் பேசுகிறது நீதியென்று நான் ஒத்துக்கொள்வது எனக்குத் தூரமாயிருப்பதாக; [QE][QS]என் ஆவி பிரியும்வரை என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கமாட்டேன். [QE]
6. [QS]என் நீதியை உறுதியாகப் பிடித்திருக்கிறேன்; [QE][QS]அதை நான் விட்டுவிடமாட்டேன்; நான் உயிரோடிருக்கும்வரை என் இருதயம் என்னை நிந்திக்காது. [QE]
7. [QS]என் பகைவன் ஆகாதவனைப்போலவும், [QE][QS]எனக்கு விரோதமாக எழும்புகிறவன் அக்கிரமக்காரனைப்போலவும் இருப்பானாக. [QE]
8. [QS]அக்கிரமக்காரன் பொருளைத் தேடி வைத்திருந்தாலும், [QE][QS]தேவன் அவனுடைய ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்போது[* அக்கிரமக்காரனுக்கும் தேவன் முடிவுண்டாக்குகிறார் ], [QE][QS]அவனுடைய நம்பிக்கையினால் லாபம் என்ன? [QE]
9. [QS]ஆபத்து அவன்மேல் வரும்போது, [QE][QS]தேவன் அவனுடைய கூப்பிடுதலைக் கேட்பாரோ? [QE]
10. [QS]அவன் சர்வவல்லமையுள்ள தேவன் மேல் மனமகிழ்ச்சியாயிருப்பானோ? [QE][QS]அவன் எப்பொழுதும் தேவனைத் தொழுதுகொண்டிருப்பானோ? [QE]
11. [QS]தேவனுடைய கரத்தின் கிரியையைக் குறித்து உங்களுக்கு போதிப்பேன்; [QE][QS]சர்வவல்லவரிடத்தில் இருக்கிறதை நான் மறைக்கமாட்டேன். [QE]
12. [QS]இதோ, நீங்கள் எல்லோரும் அதைக் கண்டிருந்தும், நீங்கள் இத்தனை வீண் எண்ணங்கொண்டிருக்கிறது என்ன? [QE]
13. [QS]பொல்லாத மனிதனுக்கு தேவனிடத்திலிருந்து வருகிற பங்கும், [QE][QS]கொடூரக்காரர் சர்வவல்லவரால் அடைகிற பங்கும் என்னவெனில், [QE]
14. [QS]அவனுடைய மகன்கள் பெருகினால் பட்டயத்திற்கு இரையாவார்கள்; [QE][QS]அவனுடைய கர்ப்பப்பிறப்புகள் ஆகாரத்தினால் திருப்தியாவதில்லை. [QE]
15. [QS]அவனுக்கு மீதியானவர்கள் செத்துப் புதைக்கப்படுவார்கள்; [QE][QS]அவர்களுடைய விதவைகளும்[† அவனுடைய விதவைகள் ] புலம்புவதில்லை. [QE]
16. [QS]அவன் புழுதியைப்போலப் பணத்தைக் குவித்துக்கொண்டாலும், [QE][QS]மண்ணைப்போல ஆடைகளைச் சம்பாதித்தாலும், [QE]
17. [QS]அவன் சம்பாதித்ததை நீதிமான் உடுத்திக்கொண்டு, [QE][QS]குற்றமில்லாதவன் அவன் பணத்தைப் பகிர்ந்துகொள்ளுவான். [QE]
18. [QS]அவனுடைய வீடு சிலந்திப்பூச்சி கட்டின வீட்டைப்போலவும், [QE][QS]காவல்காக்கிறவன் போட்ட குடிசையைப் போலாகும். [QE]
19. [QS]அவன் ஐசுவரியவானாகத் தூங்கிக் கிடந்து, [QE][QS]ஒன்றும் இழந்துவிடாமல் போனாலும், அவன் தன் கண்களைத் திறக்கும்போது ஒன்றுமில்லாதிருக்கும். [QE]
20. [QS]வெள்ளத்தைப்போல பயங்கள் அவனை வாரிக்கொண்டுபோகும்; [QE][QS]இரவுநேரத்தில் பெருங்காற்று அவனை அடித்துக்கொண்டுபோகும். [QE]
21. [QS]கிழக்குக்காற்று அவனைத் தூக்கிக்கொண்டுபோக, அவன் போய்விடுவான்; [QE][QS]அது அவனை அவனுடைய இடத்திலிருந்து தள்ளிக்கொண்டுபோகும். [QE]
22. [QS]அவருடைய கைக்குத் தப்பியோடப் பார்ப்பான் [QE][QS]ஆனால் அதை அவன்மேல் வரச்செய்து அவனைத் தப்பவிடாதிருப்பார்;. [QE]
23. [QS]மக்கள் அவனைப் பார்த்துக் கைகொட்டி நகைத்து, [QE][QS]அவனை அவனுடைய இடத்தை விட்டு விரட்டிவிடுவார்கள். [QE]