1. யோபு பின்னும் தன் பிரசங்கவாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது: [QBR]
2. “என் சுவாசம் என்னிலும், [QBR] தேவன் தந்த ஆவி என் மூக்கிலும் இருக்கும்வரை, [QBR]
3. என் உதடுகள் அநீதியைச் சொல்வதுமில்லை; [QBR] என் நாக்கு பொய் பேசுவதுமில்லையென்று, [QBR]
4. என் நியாயத்தைத் தள்ளிவிடுகிற தேவனும், [QBR] என் ஆத்துமாவைக் கசப்பாக்குகிற சர்வவல்லமையுள்ள தேவனுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். [QBR]
5. நீங்கள் பேசுகிறது நீதியென்று நான் ஒத்துக்கொள்வது எனக்குத் தூரமாயிருப்பதாக; [QBR] என் ஆவி பிரியும்வரை என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கமாட்டேன். [QBR]
6. என் நீதியை உறுதியாகப் பிடித்திருக்கிறேன்; [QBR] அதை நான் விட்டுவிடமாட்டேன்; நான் உயிரோடிருக்கும்வரை என் இருதயம் என்னை நிந்திக்காது. [QBR]
7. என் பகைவன் ஆகாதவனைப்போலவும், [QBR] எனக்கு விரோதமாக எழும்புகிறவன் அக்கிரமக்காரனைப்போலவும் இருப்பானாக. [QBR]
8. அக்கிரமக்காரன் பொருளைத் தேடி வைத்திருந்தாலும், [QBR] தேவன் அவனுடைய ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்போது [* அக்கிரமக்காரனுக்கும் தேவன் முடிவுண்டாக்குகிறார் ] , [QBR] அவனுடைய நம்பிக்கையினால் லாபம் என்ன? [QBR]
9. ஆபத்து அவன்மேல் வரும்போது, [QBR] தேவன் அவனுடைய கூப்பிடுதலைக் கேட்பாரோ? [QBR]
10. அவன் சர்வவல்லமையுள்ள தேவன் மேல் மனமகிழ்ச்சியாயிருப்பானோ? [QBR] அவன் எப்பொழுதும் தேவனைத் தொழுதுகொண்டிருப்பானோ? [QBR]
11. தேவனுடைய கரத்தின் கிரியையைக் குறித்து உங்களுக்கு போதிப்பேன்; [QBR] சர்வவல்லவரிடத்தில் இருக்கிறதை நான் மறைக்கமாட்டேன். [QBR]
12. இதோ, நீங்கள் எல்லோரும் அதைக் கண்டிருந்தும், நீங்கள் இத்தனை வீண் எண்ணங்கொண்டிருக்கிறது என்ன? [QBR]
13. பொல்லாத மனிதனுக்கு தேவனிடத்திலிருந்து வருகிற பங்கும், [QBR] கொடூரக்காரர் சர்வவல்லவரால் அடைகிற பங்கும் என்னவெனில், [QBR]
14. அவனுடைய மகன்கள் பெருகினால் பட்டயத்திற்கு இரையாவார்கள்; [QBR] அவனுடைய கர்ப்பப்பிறப்புகள் ஆகாரத்தினால் திருப்தியாவதில்லை. [QBR]
15. அவனுக்கு மீதியானவர்கள் செத்துப் புதைக்கப்படுவார்கள்; [QBR] அவர்களுடைய விதவைகளும் [† அவனுடைய விதவைகள் ] புலம்புவதில்லை. [QBR]
16. அவன் புழுதியைப்போலப் பணத்தைக் குவித்துக்கொண்டாலும், [QBR] மண்ணைப்போல ஆடைகளைச் சம்பாதித்தாலும், [QBR]
17. அவன் சம்பாதித்ததை நீதிமான் உடுத்திக்கொண்டு, [QBR] குற்றமில்லாதவன் அவன் பணத்தைப் பகிர்ந்துகொள்ளுவான். [QBR]
18. அவனுடைய வீடு சிலந்திப்பூச்சி கட்டின வீட்டைப்போலவும், [QBR] காவல்காக்கிறவன் போட்ட குடிசையைப் போலாகும். [QBR]
19. அவன் ஐசுவரியவானாகத் தூங்கிக் கிடந்து, [QBR] ஒன்றும் இழந்துவிடாமல் போனாலும், அவன் தன் கண்களைத் திறக்கும்போது ஒன்றுமில்லாதிருக்கும். [QBR]
20. வெள்ளத்தைப்போல பயங்கள் அவனை வாரிக்கொண்டுபோகும்; [QBR] இரவுநேரத்தில் பெருங்காற்று அவனை அடித்துக்கொண்டுபோகும். [QBR]
21. கிழக்குக்காற்று அவனைத் தூக்கிக்கொண்டுபோக, அவன் போய்விடுவான்; [QBR] அது அவனை அவனுடைய இடத்திலிருந்து தள்ளிக்கொண்டுபோகும். [QBR]
22. அவருடைய கைக்குத் தப்பியோடப் பார்ப்பான் [QBR] ஆனால் அதை அவன்மேல் வரச்செய்து அவனைத் தப்பவிடாதிருப்பார்;. [QBR]
23. மக்கள் அவனைப் பார்த்துக் கைகொட்டி நகைத்து, [QBR] அவனை அவனுடைய இடத்தை விட்டு விரட்டிவிடுவார்கள். [PE]