தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (IRV) தமிழ் வெளியீடு
யோபு
1. {யோபுவின் வார்த்தைகள்} [PS] யோபு மறுமொழியாக: [QBR]
2. “பெலனில்லாதவனுக்கு நீ எப்படி உதவிசெய்தாய்? [QBR] பெலனற்ற கையை நீ எப்படி ஆதரித்தாய்? [QBR]
3. நீ ஞானமில்லாதவனுக்கு எப்படி உறுதுணையாயிருந்து, [QBR] மெய்ப்பொருளைக் குறித்து அறிவித்தாய்? [QBR]
4. யாருக்கு அறிவைப் போதித்தாய்? [QBR] உன்னிடத்திலிருந்து புறப்பட்ட ஆவி யாருடையது? [QBR]
5. தண்ணீரின் கீழ் இறந்தவர்களுக்கும், [QBR] அவர்களுடன் தங்குகிறவர்களுக்கும் தத்தளிப்பு உண்டு. [QBR]
6. அவருக்கு முன்பாகப் பாதாளம் தெரியும்விதத்தில் திறந்திருக்கிறது; [QBR] நரகம் மூடப்படாதிருக்கிறது. [QBR]
7. அவர் வடக்குமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, [QBR] பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார். [QBR]
8. அவர் தண்ணீர்களைத் தம்முடைய கார்மேகங்களில் கட்டிவைக்கிறார்; [QBR] அதின் பாரத்தினால் மேகம் கிழிகிறதில்லை. [QBR]
9. அவர் தமது சிங்காசனம் நிற்கும் ஆகாயத்தை பலப்படுத்தி, [QBR] அதின்மேல் தமது மேகத்தை விரிக்கிறார். [QBR]
10. அவர் தண்ணீர்கள்மேல் சுழற்சி வட்டம் அமைத்தார்; [QBR] வெளிச்சமும் இருளும் முடியும்வரை அப்படியே இருக்கும். [QBR]
11. அவருடைய கண்டிப்பினால் வானத்தின் தூண்கள் அதிர்ந்து தத்தளிக்கும். [QBR]
12. அவர் தமது வல்லமையினால் சமுத்திரக் கொந்தளிப்பை அமரச்செய்து, [QBR] தமது ஞானத்தினால் அதின் மூர்க்கத்தை அடக்குகிறார். [QBR]
13. தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்; [QBR] அவருடைய கை நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உண்டாக்கியது. [QBR]
14. இதோ, இவைகள் அவருடைய படைப்பில் கடைசியானவைகள், [QBR] அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்; [QBR] அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார்” என்றான். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 26 / 42
யோபு 26:7
யோபுவின் வார்த்தைகள் 1 யோபு மறுமொழியாக: 2 “பெலனில்லாதவனுக்கு நீ எப்படி உதவிசெய்தாய்? பெலனற்ற கையை நீ எப்படி ஆதரித்தாய்? 3 நீ ஞானமில்லாதவனுக்கு எப்படி உறுதுணையாயிருந்து, மெய்ப்பொருளைக் குறித்து அறிவித்தாய்? 4 யாருக்கு அறிவைப் போதித்தாய்? உன்னிடத்திலிருந்து புறப்பட்ட ஆவி யாருடையது? 5 தண்ணீரின் கீழ் இறந்தவர்களுக்கும், அவர்களுடன் தங்குகிறவர்களுக்கும் தத்தளிப்பு உண்டு. 6 அவருக்கு முன்பாகப் பாதாளம் தெரியும்விதத்தில் திறந்திருக்கிறது; நரகம் மூடப்படாதிருக்கிறது. 7 அவர் வடக்குமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார். 8 அவர் தண்ணீர்களைத் தம்முடைய கார்மேகங்களில் கட்டிவைக்கிறார்; அதின் பாரத்தினால் மேகம் கிழிகிறதில்லை. 9 அவர் தமது சிங்காசனம் நிற்கும் ஆகாயத்தை பலப்படுத்தி, அதின்மேல் தமது மேகத்தை விரிக்கிறார். 10 அவர் தண்ணீர்கள்மேல் சுழற்சி வட்டம் அமைத்தார்; வெளிச்சமும் இருளும் முடியும்வரை அப்படியே இருக்கும். 11 அவருடைய கண்டிப்பினால் வானத்தின் தூண்கள் அதிர்ந்து தத்தளிக்கும். 12 அவர் தமது வல்லமையினால் சமுத்திரக் கொந்தளிப்பை அமரச்செய்து, தமது ஞானத்தினால் அதின் மூர்க்கத்தை அடக்குகிறார். 13 தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்; அவருடைய கை நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உண்டாக்கியது. 14 இதோ, இவைகள் அவருடைய படைப்பில் கடைசியானவைகள், அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்; அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார்” என்றான்.
மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 26 / 42
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References