1. {#1யோபுவின் வார்த்தைகள் } [PS]யோபு மறுமொழியாக: [PE]
2. [QS]“பெலனில்லாதவனுக்கு நீ எப்படி உதவிசெய்தாய்? [QE][QS]பெலனற்ற கையை நீ எப்படி ஆதரித்தாய்? [QE]
3. [QS]நீ ஞானமில்லாதவனுக்கு எப்படி உறுதுணையாயிருந்து, [QE][QS]மெய்ப்பொருளைக் குறித்து அறிவித்தாய்? [QE]
4. [QS]யாருக்கு அறிவைப் போதித்தாய்? [QE][QS]உன்னிடத்திலிருந்து புறப்பட்ட ஆவி யாருடையது? [QE]
5. [QS]தண்ணீரின் கீழ் இறந்தவர்களுக்கும், [QE][QS]அவர்களுடன் தங்குகிறவர்களுக்கும் தத்தளிப்பு உண்டு. [QE]
6. [QS]அவருக்கு முன்பாகப் பாதாளம் தெரியும்விதத்தில் திறந்திருக்கிறது; [QE][QS]நரகம் மூடப்படாதிருக்கிறது. [QE]
7. [QS]அவர் வடக்குமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, [QE][QS]பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார். [QE]
8. [QS]அவர் தண்ணீர்களைத் தம்முடைய கார்மேகங்களில் கட்டிவைக்கிறார்; [QE][QS]அதின் பாரத்தினால் மேகம் கிழிகிறதில்லை. [QE]
9. [QS]அவர் தமது சிங்காசனம் நிற்கும் ஆகாயத்தை பலப்படுத்தி, [QE][QS]அதின்மேல் தமது மேகத்தை விரிக்கிறார். [QE]
10. [QS]அவர் தண்ணீர்கள்மேல் சுழற்சி வட்டம் அமைத்தார்; [QE][QS]வெளிச்சமும் இருளும் முடியும்வரை அப்படியே இருக்கும். [QE]
11. [QS]அவருடைய கண்டிப்பினால் வானத்தின் தூண்கள் அதிர்ந்து தத்தளிக்கும். [QE]
12. [QS]அவர் தமது வல்லமையினால் சமுத்திரக் கொந்தளிப்பை அமரச்செய்து, [QE][QS]தமது ஞானத்தினால் அதின் மூர்க்கத்தை அடக்குகிறார். [QE]
13. [QS]தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்; [QE][QS]அவருடைய கை நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உண்டாக்கியது. [QE]
14. [QS]இதோ, இவைகள் அவருடைய படைப்பில் கடைசியானவைகள், [QE][QS]அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்; [QE][QS]அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார்” என்றான். [QE]