தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (IRV) தமிழ் வெளியீடு
யோபு
1. சர்வவல்லமையுள்ள தேவனுக்குக் காலங்கள் மறைக்கப்படாதிருக்க, [QBR] அவரை அறிந்தவர்கள் அவர் நியமித்த நாட்களை அறியாதிருக்கிறதென்ன? [QBR]
2. சிலர் எல்லைக்குறிப்புகளை மாற்றி, [QBR] மந்தைகளைப் பலாத்காரமாகக் கொண்டுபோய் தங்கள் மந்தையில் சேர்க்கிறார்கள். [QBR]
3. தாய்தகப்பன் இல்லாதவர்களின் கழுதையை ஓட்டிக்கொண்டுபோய், [QBR] விதவையின் மாட்டை ஈடாக எடுத்துக்கொள்ளுகிறார்கள். [QBR]
4. தேசத்தில் சிறுமைப்பட்டவர்கள் எல்லோரும் ஒளித்துக்கொள்ளுமளவுக்கு, [QBR] எளிமையானவர்களை வழியை விட்டு விலக்குகிறார்கள். [QBR]
5. இதோ, அவர்கள் காட்டுக்கழுதைகளைப்போல இரைதேட அதிகாலமே தங்கள் வேலைக்குப் புறப்படுகிறார்கள்; [QBR] வனாந்திரப் பகுதிதான் அவர்களுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் ஆகாரம் கொடுக்கவேண்டும். [QBR]
6. துன்மார்க்கருடைய வயலில் அவர்கள் அவனுக்காக அறுவடைசெய்து, [QBR] அவனுடைய திராட்சைத்தோட்டத்தின் பழங்களைச் சேர்க்கிறார்கள். [QBR]
7. குளிரிலே போர்த்துக்கொள்ளுகிறதற்கு ஒன்றும் இல்லாததினால், [QBR] உடையில்லாமல் இரவுதங்கி, [QBR]
8. மலைகளிலிருந்துவரும் மழையில் நனைந்து, ஒதுங்க இடமில்லாததினால் கன்மலையிலே ஒதுங்கிக்கொள்ளுகிறார்கள். [QBR]
9. அவர்களோ தகப்பனில்லாத பிள்ளையை முலையைவிட்டுப்பறித்து, [QBR] தரித்திரன் போர்த்துக்கொண்டிருக்கிறதை அடகு வாங்குகிறார்கள். [QBR]
10. அவனை உடையில்லாமல் நடக்கவும், [QBR] பட்டினியாக அரிக்கட்டுகளைச் சுமக்கவும், [QBR]
11. தங்கள் மதில்களுக்குள்ளே செக்காட்டவும், [QBR] தாகமுள்ளவர்களாக ஆலையாட்டவும் செய்கிறார்கள். [QBR]
12. ஊரில் மனிதர் தவிக்கிறார்கள், [QBR] குற்றுயிராய்க்கிடக்கிறவர்களின் ஆத்துமா கூப்பிடுகிறது; [QBR] என்றாலும், தேவன் அவர்கள் விண்ணப்பத்தைக் கவனிக்கிறதில்லை. [QBR]
13. அவர்கள் வெளிச்சத்திற்கு விரோதமாக நடக்கிறவர்களின் கூட்டத்தார்; [QBR] அவர்கள் அவருடைய வழிகளை அறியாமலும், [QBR] அவருடைய பாதைகளில் தங்காமலும் இருக்கிறார்கள். [QBR]
14. கொலைபாதகன் பொழுது விடிகிறபோது எழுந்து, [QBR] ஏழையையும் தேவையுள்ளவனைக் கொன்று, [QBR] இரவுநேரத்திலே திருடனைப்போல் திரிகிறான். [QBR]
15. விபசாரனுடைய கண் மாலை மயங்குகிற நேரத்திற்குக் காத்திருந்து: [QBR] என்னை ஒருவரும் பார்க்கமாட்டார்கள் என்று முகத்தை மூடிக்கொள்ளுகிறான். [QBR]
16. அவர்கள் பகலில் அடையாளம் பார்த்த வீடுகளை இரவிலே கன்னமிடுகிறார்கள்; [QBR] அவர்கள் வெளிச்சத்தை அறியமாட்டார்கள். [QBR]
17. விடியுங்காலமும் அவர்களுக்கு மரண இருள்போல் இருக்கிறது; [QBR] அப்படிப்பட்டவன் மரண இருளின் பயங்கரத்துடன் பழகியிருக்கிறான். [QBR]
18. நீரோட்டத்தைப்போல வேகமாகப் போவான்; [QBR] தேசத்தில் அவனுடைய பங்கு சபிக்கப்பட்டுப் போகிறதினால், [QBR] அவனுடைய திராட்சைத்தோட்டங்களின் வழியை இனிக்காண்பதில்லை. [QBR]
19. வறட்சியும் வெப்பமும் உறைந்த மழையை எரிக்கும்; [QBR] அப்படியே பாதாளமானது பாவிகளை எரிக்கும். [QBR]
20. அவனைப் பெற்ற கர்ப்பம் அவனை மறக்கும்; [QBR] புழு திருப்தியாக அவனைத் தின்னும்; [QBR] அவன் அதன்பின்பு நினைக்கப்படுவதில்லை; [QBR] அக்கிரமமானது பட்டமரத்தைப்போல முறிந்துவிழும். [QBR]
21. பிள்ளைபெறாத மலடியின் செல்வத்தை அழித்துவிட்டு, [QBR] விதவைக்கு நன்மை செய்யாமல்போகிறான். [QBR]
22. தன் பலத்தினாலே வல்லவர்களைத் தன் பலமாக்குகிறான்; [QBR] அவன் எழும்புகிறபோது ஒருவனுக்கும் உயிரைப்பற்றி நிச்சயமில்லை. [QBR]
23. தேவன் அவனுக்குச் சுகவாழ்வைக் கட்டளையிட்டால், [QBR] அதின்மேல் உறுதியாக நம்பிக்கை வைக்கிறான்; [QBR] ஆனாலும் அவருடைய கண்கள் அப்படிப்பட்டவர்களின் வழிகளுக்கு விரோதமாயிருக்கிறது. [QBR]
24. அவர்கள் கொஞ்சக்காலம் உயர்ந்திருந்து, [QBR] பார்க்காமற்போய், தாழ்த்தப்பட்டு, [QBR] மற்ற எல்லோரைப்போலும் அடக்கப்படுகிறார்கள்; [QBR] கதிர்களின் நுனியைப்போல அறுக்கப்படுகிறார்கள். [QBR]
25. அப்படியில்லையென்று என்னைப் பொய்யனாக்கி, [QBR] என் வார்த்தைகளைப் பொய்யாக்கக்கூடியவன் யார்” என்றான். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 24 / 42
யோபு 24:3
1 சர்வவல்லமையுள்ள தேவனுக்குக் காலங்கள் மறைக்கப்படாதிருக்க, அவரை அறிந்தவர்கள் அவர் நியமித்த நாட்களை அறியாதிருக்கிறதென்ன? 2 சிலர் எல்லைக்குறிப்புகளை மாற்றி, மந்தைகளைப் பலாத்காரமாகக் கொண்டுபோய் தங்கள் மந்தையில் சேர்க்கிறார்கள். 3 தாய்தகப்பன் இல்லாதவர்களின் கழுதையை ஓட்டிக்கொண்டுபோய், விதவையின் மாட்டை ஈடாக எடுத்துக்கொள்ளுகிறார்கள். 4 தேசத்தில் சிறுமைப்பட்டவர்கள் எல்லோரும் ஒளித்துக்கொள்ளுமளவுக்கு, எளிமையானவர்களை வழியை விட்டு விலக்குகிறார்கள். 5 இதோ, அவர்கள் காட்டுக்கழுதைகளைப்போல இரைதேட அதிகாலமே தங்கள் வேலைக்குப் புறப்படுகிறார்கள்; வனாந்திரப் பகுதிதான் அவர்களுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் ஆகாரம் கொடுக்கவேண்டும். 6 துன்மார்க்கருடைய வயலில் அவர்கள் அவனுக்காக அறுவடைசெய்து, அவனுடைய திராட்சைத்தோட்டத்தின் பழங்களைச் சேர்க்கிறார்கள். 7 குளிரிலே போர்த்துக்கொள்ளுகிறதற்கு ஒன்றும் இல்லாததினால், உடையில்லாமல் இரவுதங்கி, 8 மலைகளிலிருந்துவரும் மழையில் நனைந்து, ஒதுங்க இடமில்லாததினால் கன்மலையிலே ஒதுங்கிக்கொள்ளுகிறார்கள். 9 அவர்களோ தகப்பனில்லாத பிள்ளையை முலையைவிட்டுப்பறித்து, தரித்திரன் போர்த்துக்கொண்டிருக்கிறதை அடகு வாங்குகிறார்கள். 10 அவனை உடையில்லாமல் நடக்கவும், பட்டினியாக அரிக்கட்டுகளைச் சுமக்கவும், 11 தங்கள் மதில்களுக்குள்ளே செக்காட்டவும், தாகமுள்ளவர்களாக ஆலையாட்டவும் செய்கிறார்கள். 12 ஊரில் மனிதர் தவிக்கிறார்கள், குற்றுயிராய்க்கிடக்கிறவர்களின் ஆத்துமா கூப்பிடுகிறது; என்றாலும், தேவன் அவர்கள் விண்ணப்பத்தைக் கவனிக்கிறதில்லை. 13 அவர்கள் வெளிச்சத்திற்கு விரோதமாக நடக்கிறவர்களின் கூட்டத்தார்; அவர்கள் அவருடைய வழிகளை அறியாமலும், அவருடைய பாதைகளில் தங்காமலும் இருக்கிறார்கள். 14 கொலைபாதகன் பொழுது விடிகிறபோது எழுந்து, ஏழையையும் தேவையுள்ளவனைக் கொன்று, இரவுநேரத்திலே திருடனைப்போல் திரிகிறான். 15 விபசாரனுடைய கண் மாலை மயங்குகிற நேரத்திற்குக் காத்திருந்து: என்னை ஒருவரும் பார்க்கமாட்டார்கள் என்று முகத்தை மூடிக்கொள்ளுகிறான். 16 அவர்கள் பகலில் அடையாளம் பார்த்த வீடுகளை இரவிலே கன்னமிடுகிறார்கள்; அவர்கள் வெளிச்சத்தை அறியமாட்டார்கள். 17 விடியுங்காலமும் அவர்களுக்கு மரண இருள்போல் இருக்கிறது; அப்படிப்பட்டவன் மரண இருளின் பயங்கரத்துடன் பழகியிருக்கிறான். 18 நீரோட்டத்தைப்போல வேகமாகப் போவான்; தேசத்தில் அவனுடைய பங்கு சபிக்கப்பட்டுப் போகிறதினால், அவனுடைய திராட்சைத்தோட்டங்களின் வழியை இனிக்காண்பதில்லை. 19 வறட்சியும் வெப்பமும் உறைந்த மழையை எரிக்கும்; அப்படியே பாதாளமானது பாவிகளை எரிக்கும். 20 அவனைப் பெற்ற கர்ப்பம் அவனை மறக்கும்; புழு திருப்தியாக அவனைத் தின்னும்; அவன் அதன்பின்பு நினைக்கப்படுவதில்லை; அக்கிரமமானது பட்டமரத்தைப்போல முறிந்துவிழும். 21 பிள்ளைபெறாத மலடியின் செல்வத்தை அழித்துவிட்டு, விதவைக்கு நன்மை செய்யாமல்போகிறான். 22 தன் பலத்தினாலே வல்லவர்களைத் தன் பலமாக்குகிறான்; அவன் எழும்புகிறபோது ஒருவனுக்கும் உயிரைப்பற்றி நிச்சயமில்லை. 23 தேவன் அவனுக்குச் சுகவாழ்வைக் கட்டளையிட்டால், அதின்மேல் உறுதியாக நம்பிக்கை வைக்கிறான்; ஆனாலும் அவருடைய கண்கள் அப்படிப்பட்டவர்களின் வழிகளுக்கு விரோதமாயிருக்கிறது. 24 அவர்கள் கொஞ்சக்காலம் உயர்ந்திருந்து, பார்க்காமற்போய், தாழ்த்தப்பட்டு, மற்ற எல்லோரைப்போலும் அடக்கப்படுகிறார்கள்; கதிர்களின் நுனியைப்போல அறுக்கப்படுகிறார்கள். 25 அப்படியில்லையென்று என்னைப் பொய்யனாக்கி, என் வார்த்தைகளைப் பொய்யாக்கக்கூடியவன் யார்” என்றான்.
மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 24 / 42
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References