தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
யோபு
1. {#1யோபுவின் வார்த்தைகள் } [PS]யோபு மறுமொழியாக: [PE]
2. [QS]“இன்றையதினமும் என் அங்கலாய்ப்பு முரட்டுத்தனமாக எண்ணப்படுகிறது; [QE][QS]என் தவிப்பைவிட என் வாதை கடினமானது. [QE]
3. [QS]நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும்; [QE][QS]அப்பொழுது நான் அவர் இருக்கைக்கு முன்பாக வந்து சேர்ந்து, [QE]
4. [QS]என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாக வைத்து, [QE][QS]காரியத்தை நிரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன். [QE]
5. [QS]அவருடைய மறுமொழிகளை நான் அறிந்து, [QE][QS]அவர் எனக்குச் சொல்வதை உணர்ந்துகொள்ளுவேன். [QE]
6. [QS]அவர் தம்முடைய மகா வல்லமையினால் என்னுடன் வழக்காடுவாரோ? [QE][QS]அவர் அப்படிச் செய்யாமல் என்மேல் தயை வைப்பார். [QE]
7. [QS]அங்கே சன்மார்க்கன் அவருடன் வழக்காடலாம்; [QE][QS]அப்பொழுது என்னை நியாயந்தீர்க்கிறவரின் கைக்கு என்றைக்கும் விலக்கிக் காப்பாற்றிக்கொள்வேன். [QE]
8. [QS]இதோ, நான் முன்னேபோனாலும் அவர் இல்லை; [QE][QS]பின்னேபோனாலும் அவரைக் காணவில்லை. [QE]
9. [QS]இடதுபுறத்தில் அவர் செயல்பட்டும் அவரைப் பார்க்கவில்லை; [QE][QS]வலது புறத்திலும் நான் அவரைக் பார்க்காமலிருக்க மறைந்திருக்கிறார். [QE]
10. [QS]ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; [QE][QS]அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன். [QE]
11. [QS]என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது; [QE][QS]அவருடைய கட்டளையை விட்டு நான் விலகாமல் அதைக் கைக்கொண்டேன். [QE]
12. [QS]அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; [QE][QS]அவருடைய வாயின் வார்த்தைகளை [QE][QS]எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாகக் காத்துக்கொண்டேன். [QE]
13. [QS]அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; [QE][QS]அவரைத் திருப்பத்தக்கவர் யார்? [QE][QS]அவருடைய விருப்பத்தின்படியெல்லாம் செய்வார். [QE]
14. [QS]எனக்கு திட்டமிட்டிருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்; [QE][QS]இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு. [QE]
15. [QS]ஆகையால் அவருக்கு முன்பாகக் கலங்குகிறேன்; [QE][QS]நான் சிந்திக்கிறபோது, அவருக்குப் பயப்படுகிறேன். [QE]
16. [QS]தேவன் என் இருதயத்தை சோர்வடையச் செய்தார்; [QE][QS]சர்வவல்லமையுள்ள தேவன் என்னைக் கலங்கச் செய்தார். [QE]
17. [QS]இருள் வராததற்கு முன்னே நான் அழிக்கப்படாமலும், [QE][QS]இருளை அவர் எனக்கு மறைக்காமலும் போனதினால் இப்படியிருக்கிறேன். [QE]
மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 23 / 42
யோபுவின் வார்த்தைகள் 1 யோபு மறுமொழியாக: 2 “இன்றையதினமும் என் அங்கலாய்ப்பு முரட்டுத்தனமாக எண்ணப்படுகிறது; என் தவிப்பைவிட என் வாதை கடினமானது. 3 நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் அவர் இருக்கைக்கு முன்பாக வந்து சேர்ந்து, 4 என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாக வைத்து, காரியத்தை நிரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன். 5 அவருடைய மறுமொழிகளை நான் அறிந்து, அவர் எனக்குச் சொல்வதை உணர்ந்துகொள்ளுவேன். 6 அவர் தம்முடைய மகா வல்லமையினால் என்னுடன் வழக்காடுவாரோ? அவர் அப்படிச் செய்யாமல் என்மேல் தயை வைப்பார். 7 அங்கே சன்மார்க்கன் அவருடன் வழக்காடலாம்; அப்பொழுது என்னை நியாயந்தீர்க்கிறவரின் கைக்கு என்றைக்கும் விலக்கிக் காப்பாற்றிக்கொள்வேன். 8 இதோ, நான் முன்னேபோனாலும் அவர் இல்லை; பின்னேபோனாலும் அவரைக் காணவில்லை. 9 இடதுபுறத்தில் அவர் செயல்பட்டும் அவரைப் பார்க்கவில்லை; வலது புறத்திலும் நான் அவரைக் பார்க்காமலிருக்க மறைந்திருக்கிறார். 10 ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன். 11 என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது; அவருடைய கட்டளையை விட்டு நான் விலகாமல் அதைக் கைக்கொண்டேன். 12 அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாகக் காத்துக்கொண்டேன். 13 அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; அவரைத் திருப்பத்தக்கவர் யார்? அவருடைய விருப்பத்தின்படியெல்லாம் செய்வார். 14 எனக்கு திட்டமிட்டிருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்; இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு. 15 ஆகையால் அவருக்கு முன்பாகக் கலங்குகிறேன்; நான் சிந்திக்கிறபோது, அவருக்குப் பயப்படுகிறேன். 16 தேவன் என் இருதயத்தை சோர்வடையச் செய்தார்; சர்வவல்லமையுள்ள தேவன் என்னைக் கலங்கச் செய்தார். 17 இருள் வராததற்கு முன்னே நான் அழிக்கப்படாமலும், இருளை அவர் எனக்கு மறைக்காமலும் போனதினால் இப்படியிருக்கிறேன்.
மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 23 / 42
×

Alert

×

Tamil Letters Keypad References