1. {#1எலிப்பாஸின் வார்த்தைகள் } [PS]அப்பொழுது தேமானியனான எலிப்பாஸ் மறுமொழியாக: [PE]
2. [QS]“ஒரு மனிதன் விவேகியாயிருந்து, [QE][QS]தனக்குத்தான் நன்மையாக இருக்கிறதினால் தேவனுக்கு நன்மையாக இருப்பானோ? [QE]
3. [QS]நீர் நீதிமானாயிருப்பதினால் சர்வவல்லவருக்கு நன்மையுண்டாகுமோ? [QE][QS]நீர் உம்முடைய வழிகளை உத்தமமாக்குகிறது [QE][QS]அவருக்கு ஆதாயமாயிருக்குமோ? [QE]
4. [QS]அவர் உமக்குப் பயந்து உம்முடன் வழக்காடி, [QE][QS]உம்முடன் நியாயத்திற்கு வருவாரோ? [QE]
5. [QS]உம்முடைய பொல்லாப்பு பெரியதும், [QE][QS]உம்முடைய அக்கிரமங்கள் முடிவில்லாதவைகளுமாக இருக்கிறதல்லவோ? [QE]
6. [QS]காரணமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகு வாங்கி, [QE][QS]ஏழைகளின் ஆடைகளைப் பறித்துக்கொண்டீர். [QE]
7. [QS]மிகுந்த தாகமுள்ளவனுக்கு தண்ணீர் கொடுக்காமலும், [QE][QS]பசித்தவனுக்கு ஆகாரம் கொடுக்காமலும் போனீர். [QE]
8. [QS]பலவானுக்கே தேசத்தில் இடமுண்டாயிருக்கிறது; [QE][QS]கனவான் அதில் குடியேறினான். [QE]
9. [QS]விதவைகளை வெறுமையாக அனுப்பிவிட்டீர்; [QE][QS]தாய்தகப்பன் இல்லாதவர்களின் கைகள் முறிக்கப்பட்டது. [QE]
10. [QS]ஆகையால் கண்ணிகள் உம்மைச் சூழ்ந்திருக்கிறது; [QE][QS]திடீரென்று உமக்கு வந்த பயங்கரம் உம்மைக் கலங்கச் செய்கிறது. [QE]
11. [QS]நீர் பார்க்க முடியாமலிருக்க இருள் வந்தது, [QE][QS]பெருவெள்ளம் உம்மை மூடுகிறது. [QE]
12. [QS]தேவன் பரலோகத்தின் உன்னதங்களிலிருக்கிறார் அல்லவோ? [QE][QS]நட்சத்திரங்களின் உயரத்தைப் பாரும், அவைகள் எத்தனை உயரமாயிருக்கிறது. [QE]
13. [QS]நீர்: தேவன் எப்படி அறிவார், [QE][QS]இருளுக்கு அப்புறத்திலிருக்கிறவர் நியாயம் விசாரிக்கக்கூடுமோ? [QE]
14. [QS]அவர் பார்க்காமலிருக்க மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது; [QE][QS]வானமண்டலங்களின் சக்கரத்திலே அவர் உலாவுகிறார் என்று சொல்லுகிறீர். [QE]
15. [QS]அக்கிரம மனிதர்கள் ஆரம்பகாலத்தில் நடந்த பாதையை கவனித்துப் பார்த்தீரோ? [QE]
16. [QS]காலம் வருமுன்னே அவர்கள் இறந்துபோனார்கள்; [QE][QS]அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது. [QE]
17. [QS]தேவன் அவர்கள் வீடுகளை நன்மையால் நிரப்பியிருந்தாலும், [QE][QS]அவர்கள் அவரை நோக்கி: எங்களைவிட்டு விலகும், [QE][QS]சர்வவல்லவராலே எங்களுக்கு என்ன ஆகும் என்றார்கள். [QE]
18. [QS]ஆகையால் துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக. [QE]
19. [QS]எங்கள் நிலைமை அழியாமல், [QE][QS]அவர்களுக்கு மீதியானதையோ நெருப்பு எரித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள். [QE]
20. [QS]குற்றமில்லாதவன் அவர்களைப் பார்த்து சிரிக்கிறான். [QE]
21. [QS]நீர் அவருடன் பழகி சமாதானமாயிரும்; [QE][QS]அதினால் உமக்கு நன்மைவரும். [QE]
22. [QS]அவர் வாயிலிருந்து பிறந்த வேதப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, [QE][QS]அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டுகிறேன். [QE]
23. [QS]நீர் சர்வவல்லமையுள்ள தேவனிடத்தில் மனந்திரும்பினால், [QE][QS]திரும்பக் கட்டப்படுவீர்; அநீதியை உமது கூடாரத்திற்குத் தூரமாக்குவீர். [QE]
24. [QS]அப்பொழுது தூளைப்போல் பொன்னையும், [QE][QS]ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் சேர்த்துவைப்பீர். [QE]
25. [QS]அப்பொழுது சர்வவல்லவர் தாமே உமக்குப் பசும்பொன்னும், உமக்குச் சுத்தவெள்ளியுமாயிருப்பார். [QE]
26. [QS]அப்பொழுது சர்வவல்லமையுள்ள தேவன் மேல் மனமகிழ்ச்சியாயிருந்து, தேவனுக்கு நேராக உம்முடைய முகத்தை ஏறெடுப்பீர். [QE]
27. [QS]நீர் அவரை நோக்கி விண்ணப்பம்செய்ய, அவர் உமக்குச் செவிகொடுப்பார்; [QE][QS]அப்பொழுது நீர் உம்முடைய பொருத்தனைகளைச் செலுத்துவீர். [QE]
28. [QS]நீர் ஒரு காரியத்தை தீர்மானித்தால், அது உமக்கு நிலைவரப்படும்; [QE][QS]உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும். [QE]
29. [QS]மனிதர் ஒடுக்கப்படும்போது திடப்படக்கடவர்கள் என்று நீர் சொல்ல, [QE][QS]தாழ்ந்தோர் காப்பாற்றப்படுவார்கள். [QE]
30. [QS]குற்றமில்லாதவனையுங்கூட விடுவிப்பார்; [QE][QS]உம்முடைய கைகளின் சுத்தத்தினால் அவன் விடுவிக்கப்படுவான்” என்றான். [QE]