1. {#1யோபுவின் வார்த்தைகள் } [PS]யோபு மறுமொழியாக: [PE]
2. [QS]“என் வசனத்தைக் கவனமாகக் கேளுங்கள்; [QE][QS]இது நீங்கள் என்னை ஆறுதல் செய்வதுபோல இருக்கும். [QE]
3. [QS]நான் பேசப்போகிறேன், சகித்திருங்கள்; [QE][QS]நான் பேசினபின்பு கேலிசெய்யுங்கள். [QE]
4. [QS]நான் மனிதனைப்பார்த்தா அங்கலாய்க்கிறேன்? [QE][QS]அப்படியானாலும் என் ஆவி வேதனைப்படாதிருக்குமா? [QE]
5. [QS]என்னைக் கவனித்துப்பாருங்கள், [QE][QS]அப்பொழுது நீங்கள் ஆச்சரியப்பட்டு, [QE][QS]உங்கள் வாயைக் கையால் பொத்திக்கொள்வீர்கள். [QE]
6. [QS]இதை நான் நினைக்கும்போது கலங்குகிறேன்; [QE][QS]நடுக்கம் என் சரீரத்தைப் பிடிக்கும். [QE]
7. [QS]துன்மார்க்கர் முதிர்வயதுவரை உயிருடனிருந்து, [QE][QS]ஏன் வல்லவராகவேண்டும்? [QE]
8. [QS]அவர்களுடன் அவர்கள் சந்ததியார் அவர்களுக்கு முன்பாகவும், [QE][QS]அவர்கள் பிள்ளைகள் அவர்கள் கண்களுக்கு முன்பாகவும் திடப்படுகிறார்கள். [QE]
9. [QS]அவர்கள் வீடுகள் பயமில்லாமல் பத்திரமாக இருக்கும்; [QE][QS]தேவனுடைய தண்டனை அவர்கள்மேல் வருகிறதில்லை. [QE]
10. [QS]அவர்களுடைய எருது பொலிந்தால், வீணாய்ப்போகாது; [QE][QS]அவர்களுடைய பசு சினை அழியாமல் ஈனுகிறது. [QE]
11. [QS]அவர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு மந்தையைப்போல வெளியே போகவிடுகிறார்கள்; [QE][QS]அவர்கள் பிள்ளைகள் குதித்து விளையாடுகிறார்கள். [QE]
12. [QS]அவர்கள் தம்புரையும் சுரமண்டலத்தையும் எடுத்துப் பாடி, [QE][QS]கின்னரத்தின் ஓசைக்குச் சந்தோஷப்படுகிறார்கள். [QE]
13. [QS]அவர்கள் சமாதானமாய் தங்கள் நாட்களைப் போக்கி, [QE][QS][* சமாதானம் ]ஒரு நொடிப்பொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள். [QE]
14. [QS]அவர்கள் தேவனை நோக்கி: எங்களைவிட்டு விலகியிரும், [QE][QS]உம்முடைய வழிகளை அறிய விரும்பவில்லை; [QE]
15. [QS]சர்வவல்லமையுள்ள தேவனை நாம் ஆராதிக்க அவர் யார்? [QE][QS]அவரை நோக்கி ஜெபம் செய்வதினால் நமக்கு பலன் என்ன என்கிறார்கள். [QE]
16. [QS]ஆனாலும் அவர்கள் வாழ்வு அவர்கள் கையிலிருக்காது; [QE][QS]துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக. [QE]
17. [QS]எத்தனை வேகமாக துன்மார்க்கரின் விளக்கு அணைந்துபோகும்; [QE][QS]அவர் தமது கோபத்தினால் வேதனைகளைப் பகிர்ந்துகொடுக்கும்போது, [QE][QS]அவர்கள் ஆபத்து அவர்கள்மேல் வரும். [QE]
18. [QS]அவர்கள் காற்றின் திசையிலிருக்கிற துரும்பைப்போலவும், [QE][QS]பெருங்காற்று பறக்கடிக்கிற பதரைப்போலவும் இருக்கிறார்கள். [QE]
19. [QS]தேவன் அவனுடைய அக்கிரமத்தை அவனுடைய பிள்ளைகளுக்கு வைத்து வைக்கிறார்; [QE][QS]அவன் உணர்வடையும்விதத்தில் அதை அவனுக்குப் பலிக்கச் செய்கிறார். [QE]
20. [QS]அவனுடைய அழிவை அவனுடைய கண்கள் காணும், [QE][QS]சர்வவல்லமையுள்ள தேவனை கடுங்கோபத்தை குடிப்பான். [QE]
21. [QS]அவனுடைய மாதங்களின் தொகை குறைக்கப்படும்போது, [QE][QS]அவனுக்குப் பிறகு அவனுடைய வீட்டைப்பற்றி அவனுக்கு இருக்கும் விருப்பமென்ன? [QE]
22. [QS]உயர்ந்தோரை நியாயந்தீர்க்கிற தேவனுக்கு அறிவை உணர்த்த யாராலாகும்? [QE]
23. [QS]ஒருவன் நிர்வாகத்துடனும் சுகத்துடனும் வாழ்ந்து குறையற்ற பெலனுள்ளவனாய் இறக்கிறான். [QE]
24. [QS]அவனுடைய உடல் கொழுப்பால் நிறைந்திருக்கிறது, [QE][QS]அவனுடைய எலும்புகளில் ஊன் உறுதியாயிருக்கிறது. [QE]
25. [QS]வேறொருவன் ஒரு நாளாவது சந்தோஷத்துடன் சாப்பிடாமல், [QE][QS]மனவேதனையுடன் இறக்கிறான். [QE]
26. [QS]இருவரும் சமமாக மண்ணிலே படுத்துக்கொள்ளுகிறார்கள்; [QE][QS]புழுக்கள் அவர்களை மூடும். [QE]
27. [QS]இதோ, நான் உங்கள் நினைவுகளையும், [QE][QS]நீங்கள் என்னைப்பற்றி அநியாயமாகக் கொண்டிருக்கும் ஆலோசனைகளையும் அறிவேன். [QE]
28. [QS]பிரபுவின் வீடு எங்கே? துன்மார்க்கருடைய கூடாரம் எங்கே? [QE][QS]என்று சொல்லுகிறீர்கள். [QE]
29. [QS]வழியிலே நடந்து போகிறவர்களை நீங்கள் கேட்கவில்லையா, [QE][QS]அவர்கள் சொல்லும் குறிப்புகளை நீங்கள் அறியவில்லையா? [QE]
30. [QS]துன்மார்க்கன் ஆபத்து நாளுக்காக வைக்கப்படுகிறான்; [QE][QS]அவனுடைய கோபாக்கினையின் நாளுக்காக கொண்டுவரப்படுகிறான். [QE]
31. [QS]அவனுடைய வழியை அவனுடைய முகத்திற்கு முன்பாக எடுத்துக் காட்டுகிறவன் யார்? [QE][QS]அவனுடைய செய்கைக்குத் தக்க பலனை அவனுக்கு ஈடுகட்டுகிறவன் யார்? [QE]
32. [QS]அவன் கல்லறைக்குக் கொண்டுவரப்படுகிறான்; [QE][QS]அவனுடைய கல்லறை காக்கப்பட்டிருக்கும். [QE]
33. [QS]பள்ளத்தாக்கின் புழுதி மண்கள் அவனுக்கு இன்பமாயிருக்கும்; [QE][QS]அவனுக்கு முன்னாக அனேக மக்கள் போனதுபோல, [QE][QS]அவனுக்குப் பின்னாக ஒவ்வொருவரும் அவ்விடத்திற்குச் செல்லுவார்கள். [QE]
34. [QS]நீங்கள் வீணாக எனக்கு ஆறுதலை சொல்லுகிறது என்ன? [QE][QS]உங்கள் மறுமொழிகளில் முழுவதும் பொய் இருக்கிறது” என்றான். [QE]