1. {#1சோப்பாரின் வார்த்தைகள் } [PS]அப்பொழுது நாகமாத்தியனான சோப்பார் மறுமொழியாக: [PE]
2. [QS]“இதற்காக பதில் கொடுக்க என் சிந்தனைகள் என்னை ஏவுகிறதினால் [QE][QS]நான் விரைவாகச் சொல்லுகிறேன். [QE]
3. [QS]நிந்தித்தேன் என்று நான் கடிந்து கொள்ளப்பட்டதைக் கேட்டேன்; [QE][QS]ஆனாலும் உணர்வினால் என் ஆவி மறுமொழி சொல்ல என்னை ஏவுகிறது. [QE]
4. [QS]துன்மார்க்கனின் கெம்பீரம் குறுகினது என்பதையும், [QE][QS]மாயக்காரனின் சந்தோஷம் ஒரு நிமிடம்மாத்திரம் நிற்கும் என்பதையும், [QE]
5. [QS]அவர் மனிதனைப் பூமியில் வைத்த ஆதிகாலமுதல் [QE][QS]இப்படியிருக்கிறது என்பதையும் நீர் அறியீரோ? [QE]
6. [QS]அவனுடைய மேன்மை வானபரியந்தம் உயர்ந்தாலும், [QE][QS]அவனுடைய தலை மேகங்கள்வரை எட்டினாலும், [QE]
7. [QS]அவன் தன் மலத்தைப்போல என்றைக்கும் அழிந்துபோவான்; [QE][QS]அவனைக் கண்டவர்கள், [QE][QS]அவன் எங்கே? என்பார்கள். [QE]
8. [QS]அவன் ஒரு கனவைப்போல் பறந்துபோய்க் காணப்படாதவனாவான்; [QE][QS]இரவில் தோன்றும் தரிசனத்தைப்போல் பறக்கடிக்கப்படுவான். [QE]
9. [QS]அவனைப் பார்த்த கண் இனி அவனைப் பார்ப்பதில்லை; [QE][QS]அவன் இருந்த இடம் இனி அவனைக் காண்பதில்லை. [QE]
10. [QS]அவனுடைய பிள்ளைகள் எளிமையானவர்களின் சகாயத்தைத் தேடுவார்கள்; [QE][QS]அவன் பறித்ததை அவன்[* அவனுடைய பலத்த கை ] கைகள் திரும்பக் கொடுக்கவேண்டியதாகும். [QE]
11. [QS]அவனுடைய எலும்புகள் அவனுடைய இளவயதின் பாவங்களினால் நிறைந்திருந்து, [QE][QS]அவனுடன் மண்ணிலே படுத்துக்கொள்ளும். [QE]
12. [QS]பொல்லாப்பு அவனுடைய வாயிலே இனிமையாயிருப்பதால், [QE][QS]அவன் அதைத் தன் நாவின்கீழ் அடக்கி, [QE]
13. [QS]அதை விடாமல் அடக்கி, [QE][QS]தன் வாய்க்குள்ளே வைத்துக்கொண்டிருந்தாலும், [QE]
14. [QS]அவனுடைய ஆகாரம் அவன் குடல்களில் மாறி, [QE][QS]அவனுக்குள் விரியன்பாம்புகளின் விஷமாகப்போகும். [QE]
15. [QS]அவன் விழுங்கின செல்வத்தைக் கக்குவான்; [QE][QS]தேவன் அதை அவனுடைய வயிற்றிலிருந்து வெளியே தள்ளிவிடுவார். [QE]
16. [QS]அவன் விரியன்பாம்புகளின் விஷத்தை உறிஞ்சுவான்; [QE][QS]விரியனின் நாக்கு அவனைக் கொல்லும். [QE]
17. [QS]தேனும் நெய்யும் ஓடும் வாய்க்கால்களையும் ஆறுகளையும் அவன் காண்பதில்லை. [QE]
18. [QS]தான் பிரயாசப்பட்டுத் தேடினதை அவன் விழுங்காமல் திரும்பக் கொடுப்பான்; [QE][QS]அவன் திரும்பக் கொடுக்கிறது அவன் செல்வத்திற்குச் சரியாயிருக்கும்; [QE][QS]அவன் மகிழ்ச்சியில்லாதிருப்பான். [QE]
19. [QS]அவன் ஒடுக்கி, ஏழைகளைக் கைவிட்டு, [QE][QS]தான் கட்டாத வீட்டை அபகரித்தபடியினாலும், [QE]
20. [QS]தன் வயிறு திருப்தி அடையாமல் இருந்ததினாலும், [QE][QS]அவன் விரும்பின காரியங்களில் அவனுக்கு ஒன்றும் இருப்பதில்லை. [QE]
21. [QS]அவனுடைய ஆகாரத்தில் ஒன்றும் மீதியாவதில்லை; [QE][QS]ஆகையால் அவனுடைய செல்வம் நிலைநிற்பதில்லை. [QE]
22. [QS]அவன் வேண்டுமென்கிற பரிபூரணம் அவனுக்கு வந்தபின், [QE][QS]அவனுக்கு வேதனை உண்டாகும்; [QE][QS]சிறுமைப்படுகிற ஒவ்வொருவருடைய கையும் அவன்மேல் வரும். [QE]
23. [QS]தன் வயிற்றை நிரப்பத்தக்கது இன்னும் அவனுக்கு இருந்தாலும், [QE][QS]அவர் அவன்மேல் தமது கோபத்தின் கடுமையை வரவழைத்து, அவன் சாப்பிடும்போது, [QE][QS]அதை அவன்மேல் வரச்செய்வார். [QE]
24. [QS]இரும்பு ஆயுதத்திற்கு அவன் தப்பியோடினாலும் வெண்கல அம்பு அவனை உருவ எய்யும். [QE]
25. [QS]உருவின பட்டயம் அவன் சரீரத்தையும், [QE][QS]மின்னுகிற அம்பு அவன் ஈரலையும் உருவிப்போகும்; [QE][QS]பயங்கரங்கள் அவன்மேல் வரும். [QE]
26. [QS]அவன் ஒளிக்கும் இடங்களில் காரிருள் அடங்கியிருக்கும்; [QE][QS]அணையாத நெருப்பு அவனை எரிக்கும்; [QE][QS]அவன் கூடாரத்தில் மீதியாயிருக்கிறவன் பாடு அநுபவிப்பான். [QE]
27. [QS]வானங்கள் அவனுடைய குற்றத்தை வெளிப்படுத்தி, பூமி அவனுக்கு விரோதமாக எழும்பும். [QE]
28. [QS]வெள்ளத்தினால் அவனுடைய வீட்டின் சம்பத்துப் கரைந்து போய்விடும்; [QE][QS]தேவனுடைய கோபம் வெள்ளம் போல் அவைகள் மேல் ஊற்றப்படும் கரைந்து போகும். [QE]
29. [QS]இதுவே தேவனால் துன்மார்க்கனுக்குக் கிடைக்கும் பங்கும், [QE][QS]அவனுடைய செய்கைக்கு தேவனால் அவனுக்கு வரும் பங்காகும்” என்றான். [QE]