தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (IRV) தமிழ் வெளியீடு
யோபு
1. {#1யோபுவின் வார்த்தைகள் } [PS]யோபு மறுமொழியாக: [PE]
2. [QS]“நீங்கள் எதுவரைக்கும் என் ஆத்துமாவை வருத்தப்படுத்தி, [QE][QS]வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்? [QE]
3. [QS]இப்போது பத்துமுறை என்னை நிந்தித்தீர்கள்; [QE][QS]நீங்கள் எனக்குக் கடினமுகம் காண்பிக்கிறதினால் உங்களுக்கு வெட்கமில்லை. [QE]
4. [QS]நான் தவறாக நடந்தது உண்மையானாலும், [QE][QS]என் தவறு என்னுடன்தான் இருக்கிறது. [QE]
5. [QS]நீங்கள் எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டி, [QE][QS]எனக்கு நிந்தையாக என்னைக் கடிந்துகொள்ளவேண்டும் என்று இருப்பீர்கள் என்றால், [QE]
6. [QS]தேவன் என்னைக் கவிழ்த்து, தம்முடைய வலையை என்மேல் வீசினார் என்று அறியுங்கள். [QE]
7. [QS]இதோ, கொடுமை என்று கூப்பிடுகிறேன், [QE][QS]கேட்பார் ஒருவரும் இல்லை; [QE][QS]கூக்குரலிடுகிறேன், நியாயவிசாரணை இல்லை. [QE]
8. [QS]நான் கடந்துபோக முடியாதபடி அவர் என் பாதையை வேலியடைத்து, [QE][QS]என் வழிகளை இருளாக்கிவிட்டார். [QE]
9. [QS]என்னிலிருந்த என் மகிமையை அவர் உரிந்துகொண்டு, [QE][QS]என் தலையின் கிரீடத்தை எடுத்துப்போட்டார். [QE]
10. [QS]அவர் என்னை நான்கு புறத்திலும் நாசமாக்கினார், [QE][QS]நான் அற்றுப்போகிறேன்; [QE][QS]என் நம்பிக்கையை ஒரு செடியைப்போலப் பிடுங்கிப்போட்டார். [QE]
11. [QS]அவர் தமது கோபத்தை என்மேல் எரியச் செய்தார்; [QE][QS]என்னைத் தம்முடைய சத்துருக்களில் ஒருவனாக எண்ணிக்கொள்ளுகிறார். [QE]
12. [QS]அவருடைய தண்டுப்படைகள் ஏகமாக வந்து, [QE][QS]எனக்கு விரோதமாகத் தங்கள் வழியை உயர்த்தி, [QE][QS]என் கூடாரத்தைச் சுற்றி முகாமிட்டார்கள். [QE]
13. [QS]என் சகோதரரை என்னைவிட்டுத் தூரப்படுத்தினார்; [QE][QS]எனக்கு அறிமுகமானவர்கள் எனக்கு அந்நியராய்ப் போனார்கள். [QE]
14. [QS]என் சொந்தமக்கள் விலகிப்போனார்கள். [QE][QS]என் நண்பர்கள் என்னை மறந்துவிட்டார்கள். [QE]
15. [QS]என் வீட்டு மக்களும், என் வேலைக்காரிகளும், [QE][QS]என்னை அந்நியனாக நினைக்கிறார்கள்; [QE][QS]அவர்கள் பார்வைக்கு நான் நிலையற்றவன். [QE]
16. [QS]நான் என் வேலைக்காரனைக் கூப்பிடுகிறபோது அவன் எனக்கு பதில் கொடுக்கமாட்டான்; [QE][QS]என் வாயினால் நான் அவனைக் கெஞ்சவேண்டியதாயிற்று. [QE]
17. [QS]என் மூச்சு என் மனைவிக்கு வேறுபட்டிருக்கிறது; [QE][QS]என் உடன் பிறந்தவர்களுக்காகப் பரிதபிக்கிறேன். [QE]
18. [QS]சிறுபிள்ளைகளும் என்னை அசட்டை செய்கிறார்கள்; [QE][QS]நான் எழுந்தால், அவர்கள் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள். [QE]
19. [QS]என் உயிர்நண்பர்கள் எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள்; [QE][QS]நான் நேசித்தவர்கள் எனக்கு விரோதிகளானார்கள். [QE]
20. [QS]என் எலும்புகள் என் தோலுடனும் என் சதையோடும் ஒட்டிக்கொண்டிருக்கிறது என் பற்களை மூடக் கொஞ்சம் தோல்மாத்திரம் தப்பினது. [QE]
21. [QS]என் நண்பர்களே, எனக்கு இரங்குங்கள், [QE][QS]எனக்கு இரங்குங்கள்; தேவனுடைய கை என்னைத் தொட்டது. [QE]
22. [QS]தேவனைப்போல நீங்களும் என்னை ஏன் துன்பப்படுத்தவேண்டும்? [QE][QS]என் உடல் எரிக்கப்பட்டாலும் நீங்கள் திருப்தியில்லாமல் இருக்கிறதென்ன? [QE]
23. [QS]ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்; [QE][QS]அவைகள் ஒரு புத்தகத்தில் வரையப்பட்டு, [QE]
24. [QS]அல்லது என்றைக்கும் நிலைக்க அவைகள் கருங்கல்லிலே உளிவெட்டாகவும், [QE][QS]ஈய எழுத்தாகவும் பதிந்தால் நலமாயிருக்கும். [QE]
25. [QS]என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், [QE][QS]அவர் கடைசி நாளில் பூமியின்மேல்[* அல்லது, என்னுடைய கல்லறை மேல், பூமியில் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல நிற்பது போல், 31:14, உபாகமம் 19:16, சங்கீதம். 12:5, ஏசாயா 19:21 ] நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். [QE]
26. [QS]இந்த என்னுடைய தோல்முதலானவை அழுகிப்போனபின்பு, [QE][QS]நான் என் உடலுடன் இருந்து தேவனைப் பார்ப்பேன். [QE]
27. [QS]அவரை நானே பார்ப்பேன்; [QE][QS]வேறே கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்; [QE][QS]இந்த ஏக்கத்தினால் என் உள்ளிருக்கும் உறுப்புகள் எனக்குள் சோர்ந்துபோகிறது. [QE]
28. [QS]காரியத்தின் காரணம் எனக்குள் கண்டுபிடிக்கப்படும்போது, [QE][QS]நாம் ஏன் அவனைத் துன்பப்படுத்துகிறோம் என்று நீங்கள் சொல்லவேண்டியதாமே. [QE]
29. [QS]பட்டயத்திற்குப் பயப்படுங்கள்; [QE][QS]நியாயத்தீர்ப்பு உண்டென்கிறதை நீங்கள் அறியவேண்டுமேன்று, [QE][QS]கோபமானது பட்டயத்தினால் உண்டாகும் தண்டனையை வரவழைக்கும்” என்றான். [QE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 19 / 42
யோபு 19:39
#1யோபுவின் வார்த்தைகள் 1 யோபு மறுமொழியாக: 2 “நீங்கள் எதுவரைக்கும் என் ஆத்துமாவை வருத்தப்படுத்தி, வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்? 3 இப்போது பத்துமுறை என்னை நிந்தித்தீர்கள்; நீங்கள் எனக்குக் கடினமுகம் காண்பிக்கிறதினால் உங்களுக்கு வெட்கமில்லை. 4 நான் தவறாக நடந்தது உண்மையானாலும், என் தவறு என்னுடன்தான் இருக்கிறது. 5 நீங்கள் எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டி, எனக்கு நிந்தையாக என்னைக் கடிந்துகொள்ளவேண்டும் என்று இருப்பீர்கள் என்றால், 6 தேவன் என்னைக் கவிழ்த்து, தம்முடைய வலையை என்மேல் வீசினார் என்று அறியுங்கள். 7 இதோ, கொடுமை என்று கூப்பிடுகிறேன், கேட்பார் ஒருவரும் இல்லை; கூக்குரலிடுகிறேன், நியாயவிசாரணை இல்லை. 8 நான் கடந்துபோக முடியாதபடி அவர் என் பாதையை வேலியடைத்து, என் வழிகளை இருளாக்கிவிட்டார். 9 என்னிலிருந்த என் மகிமையை அவர் உரிந்துகொண்டு, என் தலையின் கிரீடத்தை எடுத்துப்போட்டார். 10 அவர் என்னை நான்கு புறத்திலும் நாசமாக்கினார், நான் அற்றுப்போகிறேன்; என் நம்பிக்கையை ஒரு செடியைப்போலப் பிடுங்கிப்போட்டார். 11 அவர் தமது கோபத்தை என்மேல் எரியச் செய்தார்; என்னைத் தம்முடைய சத்துருக்களில் ஒருவனாக எண்ணிக்கொள்ளுகிறார். 12 அவருடைய தண்டுப்படைகள் ஏகமாக வந்து, எனக்கு விரோதமாகத் தங்கள் வழியை உயர்த்தி, என் கூடாரத்தைச் சுற்றி முகாமிட்டார்கள். 13 என் சகோதரரை என்னைவிட்டுத் தூரப்படுத்தினார்; எனக்கு அறிமுகமானவர்கள் எனக்கு அந்நியராய்ப் போனார்கள். 14 என் சொந்தமக்கள் விலகிப்போனார்கள். என் நண்பர்கள் என்னை மறந்துவிட்டார்கள். 15 என் வீட்டு மக்களும், என் வேலைக்காரிகளும், என்னை அந்நியனாக நினைக்கிறார்கள்; அவர்கள் பார்வைக்கு நான் நிலையற்றவன். 16 நான் என் வேலைக்காரனைக் கூப்பிடுகிறபோது அவன் எனக்கு பதில் கொடுக்கமாட்டான்; என் வாயினால் நான் அவனைக் கெஞ்சவேண்டியதாயிற்று. 17 என் மூச்சு என் மனைவிக்கு வேறுபட்டிருக்கிறது; என் உடன் பிறந்தவர்களுக்காகப் பரிதபிக்கிறேன். 18 சிறுபிள்ளைகளும் என்னை அசட்டை செய்கிறார்கள்; நான் எழுந்தால், அவர்கள் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள். 19 என் உயிர்நண்பர்கள் எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள்; நான் நேசித்தவர்கள் எனக்கு விரோதிகளானார்கள். 20 என் எலும்புகள் என் தோலுடனும் என் சதையோடும் ஒட்டிக்கொண்டிருக்கிறது என் பற்களை மூடக் கொஞ்சம் தோல்மாத்திரம் தப்பினது. 21 என் நண்பர்களே, எனக்கு இரங்குங்கள், எனக்கு இரங்குங்கள்; தேவனுடைய கை என்னைத் தொட்டது. 22 தேவனைப்போல நீங்களும் என்னை ஏன் துன்பப்படுத்தவேண்டும்? என் உடல் எரிக்கப்பட்டாலும் நீங்கள் திருப்தியில்லாமல் இருக்கிறதென்ன? 23 ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்; அவைகள் ஒரு புத்தகத்தில் வரையப்பட்டு, 24 அல்லது என்றைக்கும் நிலைக்க அவைகள் கருங்கல்லிலே உளிவெட்டாகவும், ஈய எழுத்தாகவும் பதிந்தால் நலமாயிருக்கும். 25 என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின்மேல்* அல்லது, என்னுடைய கல்லறை மேல், பூமியில் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல நிற்பது போல், 31:14, உபாகமம் 19:16, சங்கீதம். 12:5, ஏசாயா 19:21 நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். 26 இந்த என்னுடைய தோல்முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் உடலுடன் இருந்து தேவனைப் பார்ப்பேன். 27 அவரை நானே பார்ப்பேன்; வேறே கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்; இந்த ஏக்கத்தினால் என் உள்ளிருக்கும் உறுப்புகள் எனக்குள் சோர்ந்துபோகிறது. 28 காரியத்தின் காரணம் எனக்குள் கண்டுபிடிக்கப்படும்போது, நாம் ஏன் அவனைத் துன்பப்படுத்துகிறோம் என்று நீங்கள் சொல்லவேண்டியதாமே. 29 பட்டயத்திற்குப் பயப்படுங்கள்; நியாயத்தீர்ப்பு உண்டென்கிறதை நீங்கள் அறியவேண்டுமேன்று, கோபமானது பட்டயத்தினால் உண்டாகும் தண்டனையை வரவழைக்கும்” என்றான்.
மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 19 / 42
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References