1. {#1பில்தாதின் வார்த்தைகள் } [PS]அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக: [PE]
2. [QS]“நீங்கள் எதுவரைக்கும் பேச்சுகளை முடிக்காதிருப்பீர்கள்? [QE][QS]புத்திமான்களாயிருங்கள்; நாங்களும் பேசட்டும். [QE]
3. [QS]நாங்கள் மிருகங்களைப்போல எண்ணப்பட்டு, [QE][QS]உங்கள் பார்வைக்குக் கீழானவர்களாக ஏன் இருக்கவேண்டும்? [QE]
4. [QS]கோபத்தினால் உன்னை நீயே காயப்படுத்துகிற உனக்காக பூமி அழிந்துபோகுமோ? [QE][QS]கன்மலை தன்னிடத்தைவிட்டுப் பெயருமோ? [QE]
5. [QS]துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோகும்; [QE][QS]அவனுடைய அடுப்பின் நெருப்பும் அவிந்துபோகும். [QE]
6. [QS]அவனுடைய கூடாரத்தில் வெளிச்சம் இருளாக்கப்படும்; [QE][QS]அவனுடைய விளக்கு அவனுடனே அணைந்துபோகும். [QE]
7. [QS]அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோகும் அவனுடைய ஆலோசனை அவனை விழவைக்கும். [QE]
8. [QS]அவன் தன் கால்களினால் வலையில் பிடிபட்டு, [QE][QS]வலையின் சிக்கலிலே நடக்கிறான். [QE]
9. [QS]கண்ணி அவனுடைய குதிகாலைப் பிடிக்கும்; [QE][QS]பறிகாரர் அவனை மேற்கொள்வார்கள்.[* அவர்கள் அவர்களை ஜெயித்தார்கள் ] [QE]
10. [QS]அவனுக்காகச் சுருக்கு தரையிலும், [QE][QS]அவனுக்காகக் கண்ணி [† ]வழியிலும் வைக்கப்பட்டிருக்கிறது. [QE]
11. [QS]சுற்றிலுமிருந்து உண்டாகும் பயங்கரங்கள் அவனை அதிர்ச்சியடையச்செய்து, [QE][QS]அவனுடைய கால்களைத் திசைதெரியாமல் அலையவைக்கும். [QE]
12. [QS]அவன் பசியினால் பெலனற்றுப்போவான்; [QE][QS]அவன் பக்கத்தில் ஆபத்து ஆயத்தமாக நிற்கும். [QE]
13. [QS]அது அவனுடைய அங்கத்தின் பலத்தை எரிக்கும்; [QE][QS]பயங்கரமான மரணமே அவனுடைய உறுப்புகளை எரிக்கும். [QE]
14. [QS]அவனுடைய நம்பிக்கை அவனுடைய கூடாரத்திலிருந்து வேருடன் பிடுங்கப்படும்; [QE][QS]அது அவனைப் பயங்கரமான ராஜாவினிடத்தில் துரத்தும். [QE]
15. [QS]அவனுக்கு ஒன்றுமில்லாமற் போனதினால், [QE][QS]பயங்கரம் அவனுடைய கூடாரத்தில் குடியிருக்கும்; [QE][QS]கந்தகம் அவனுடைய குடியிருப்பின்மேல் தெளிக்கப்படும். [QE]
16. [QS]கீழே இருக்கிற அவனுடைய வேர்கள் அழிந்துபோகும்; [QE][QS]மேலே இருக்கிற அவனுடைய கிளைகள் பட்டுப்போகும். [QE]
17. [QS]அவனை நினைக்கும் நினைவு பூமியிலிருந்து அழியும், [QE][QS]வீதிகளில் அவன் பெயரில்லாமற்போகும். [QE]
18. [QS]அவன் வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்பட்டு, [QE][QS]பூலோகத்திலிருந்து தள்ளுண்டுபோவான். [QE]
19. [QS]அவனுடைய மக்களுக்குள்ளே அவனுக்கு மகனும் இல்லை மகளும் இல்லை; [QE][QS]அவனுடைய வீட்டில் மீதியாயிருக்க வேண்டியவன் ஒருவனும் இல்லை. [QE]
20. [QS]அவனுடைய அழிவின் காலத்தில் மேற்கில் இருந்தவர்கள் [‡ ]அதிர்ச்சியடைந்ததுபோல, [QE][QS]கிழக்கில் உள்ள மக்களும் அதிர்ச்சியடைவார்கள். [§ மேற்கிலிருந்த மக்கள் ] [QE]
21. [QS]அக்கிரமக்காரன் குடியிருந்த இடங்கள் இவைகள்தான்; [QE][QS]தேவனை அறியாமற்போனவனுடைய இடம் இதுவே என்பார்கள்” என்றான். [QE]