1. {பில்தாதின் வார்த்தைகள்} [PS] அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக: [QBR]
2. “நீங்கள் எதுவரைக்கும் பேச்சுகளை முடிக்காதிருப்பீர்கள்? [QBR] புத்திமான்களாயிருங்கள்; நாங்களும் பேசட்டும். [QBR]
3. நாங்கள் மிருகங்களைப்போல எண்ணப்பட்டு, [QBR] உங்கள் பார்வைக்குக் கீழானவர்களாக ஏன் இருக்கவேண்டும்? [QBR]
4. கோபத்தினால் உன்னை நீயே காயப்படுத்துகிற உனக்காக பூமி அழிந்துபோகுமோ? [QBR] கன்மலை தன்னிடத்தைவிட்டுப் பெயருமோ? [QBR]
5. துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோகும்; [QBR] அவனுடைய அடுப்பின் நெருப்பும் அவிந்துபோகும். [QBR]
6. அவனுடைய கூடாரத்தில் வெளிச்சம் இருளாக்கப்படும்; [QBR] அவனுடைய விளக்கு அவனுடனே அணைந்துபோகும். [QBR]
7. அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோகும் அவனுடைய ஆலோசனை அவனை விழவைக்கும். [QBR]
8. அவன் தன் கால்களினால் வலையில் பிடிபட்டு, [QBR] வலையின் சிக்கலிலே நடக்கிறான். [QBR]
9. கண்ணி அவனுடைய குதிகாலைப் பிடிக்கும்; [QBR] பறிகாரர் அவனை மேற்கொள்வார்கள். [* அவர்கள் அவர்களை ஜெயித்தார்கள் ] [QBR]
10. அவனுக்காகச் சுருக்கு தரையிலும், [QBR] அவனுக்காகக் கண்ணி [† ] வழியிலும் வைக்கப்பட்டிருக்கிறது. [QBR]
11. சுற்றிலுமிருந்து உண்டாகும் பயங்கரங்கள் அவனை அதிர்ச்சியடையச்செய்து, [QBR] அவனுடைய கால்களைத் திசைதெரியாமல் அலையவைக்கும். [QBR]
12. அவன் பசியினால் பெலனற்றுப்போவான்; [QBR] அவன் பக்கத்தில் ஆபத்து ஆயத்தமாக நிற்கும். [QBR]
13. அது அவனுடைய அங்கத்தின் பலத்தை எரிக்கும்; [QBR] பயங்கரமான மரணமே அவனுடைய உறுப்புகளை எரிக்கும். [QBR]
14. அவனுடைய நம்பிக்கை அவனுடைய கூடாரத்திலிருந்து வேருடன் பிடுங்கப்படும்; [QBR] அது அவனைப் பயங்கரமான ராஜாவினிடத்தில் துரத்தும். [QBR]
15. அவனுக்கு ஒன்றுமில்லாமற் போனதினால், [QBR] பயங்கரம் அவனுடைய கூடாரத்தில் குடியிருக்கும்; [QBR] கந்தகம் அவனுடைய குடியிருப்பின்மேல் தெளிக்கப்படும். [QBR]
16. கீழே இருக்கிற அவனுடைய வேர்கள் அழிந்துபோகும்; [QBR] மேலே இருக்கிற அவனுடைய கிளைகள் பட்டுப்போகும். [QBR]
17. அவனை நினைக்கும் நினைவு பூமியிலிருந்து அழியும், [QBR] வீதிகளில் அவன் பெயரில்லாமற்போகும். [QBR]
18. அவன் வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்பட்டு, [QBR] பூலோகத்திலிருந்து தள்ளுண்டுபோவான். [QBR]
19. அவனுடைய மக்களுக்குள்ளே அவனுக்கு மகனும் இல்லை மகளும் இல்லை; [QBR] அவனுடைய வீட்டில் மீதியாயிருக்க வேண்டியவன் ஒருவனும் இல்லை. [QBR]
20. அவனுடைய அழிவின் காலத்தில் மேற்கில் இருந்தவர்கள் [‡ ] அதிர்ச்சியடைந்ததுபோல, [QBR] கிழக்கில் உள்ள மக்களும் அதிர்ச்சியடைவார்கள். [§ மேற்கிலிருந்த மக்கள்] [QBR]
21. அக்கிரமக்காரன் குடியிருந்த இடங்கள் இவைகள்தான்; [QBR] தேவனை அறியாமற்போனவனுடைய இடம் இதுவே என்பார்கள்” என்றான். [PE]