தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
யோபு
1. [QS]என் ஆவி உடைகிறது[* என் ஆவி நொறுங்கி விட்டது. ], என் ஆயுசு நாட்கள் முடிகிறது; [QE][QS]கல்லறை எனக்கு ஆயத்தமாயிருக்கிறது. [QE]
2. [QS]கேலி செய்கிறவர்கள் என்னிடத்தில் இல்லையோ? [QE][QS]அவர்கள் செய்யும் அநியாயங்களை என் கண் பார்த்துக்கொண்டிருக்கிறது. [QE]
3. [QS]தேவரீர் என் காரியத்தை உம்மேல் போட்டுக்கொண்டு, [QE][QS]எனக்காகப் பிணைக்கப்படுவீராக; [QE][QS]வேறே யார் எனக்குக் கைகொடுக்கத்தக்கவர்? [QE]
4. [QS]நீர் அவர்கள் இருதயத்திற்கு ஞானத்தை மறைத்தீர்; [QE][QS]ஆகையால் அவர்களை உயர்த்தாதிருப்பீர். [QE]
5. [QS]எவன் தன் நண்பனுக்குக் கேடாகத் துரோகம் பேசுகிறானோ, [QE][QS]அவனுடைய பிள்ளைகளின் கண்களும் பூத்துப்போகும். [QE]
6. [QS]மக்களுக்குள்ளே அவர் என்னைப் பழமொழியாக வைத்தார்; [QE][QS]அவர்கள் முகத்திற்குமுன் நான் விரும்பத்தகாதவனானேன். [QE]
7. [QS]இதற்காக என் கண்கள் வருத்தத்தினால் இருளடைந்தது; [QE][QS]என் உறுப்புகளெல்லாம் நிழலைப்போலிருக்கிறது. [QE]
8. [QS]சன்மார்க்கர் இதற்காக அதிர்ச்சியடைவார்கள்; [QE][QS]குற்றமில்லாதவன் மாயக்காரனுக்கு விரோதமாக எழும்புவான். [QE]
9. [QS]நீதிமான் தன் வழியை உறுதியாகப் பிடிப்பான்; [QE][QS]சுத்தமான கைகள் உள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான். [QE]
10. [QS]இப்போதும் நீங்கள் எல்லோரும் போய்வாருங்கள்; [QE][QS]உங்களில் ஞானமுள்ள ஒருவனையும் காணவில்லை. [QE]
11. [QS]என் நாட்கள் முடிந்தது; [QE][QS]என் இருதயத்தில் எனக்கு உண்டாயிருந்த சிந்தனைகள் இல்லாமல் போனது. [QE]
12. [QS]அவைகள் இரவைப் பகலாக்கியது; [QE][QS]இருளை வெளிச்சம் தொடர்ந்துவரும் என்று நினைக்கத்தோன்றியது. [QE]
13. [QS]அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும், [QE][QS]பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்; [QE][QS]இருளில் என் படுக்கையைப் போடுவேன். [QE]
14. [QS]அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்; [QE][QS]புழுக்களைப் பார்த்து, நீங்கள் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரியும் என்கிறேன். [QE]
15. [QS]என் நம்பிக்கை இப்போது எங்கே? [QE][QS]நான் நம்பியிருந்ததைக் காண்பவன் யார்? [QE]
16. [QS]அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்; [QE][QS]அப்போது தூளில் எங்கும் இளைப்பாறுவோம்” என்றான். [QE]
மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 17 / 42
1 என் ஆவி உடைகிறது* என் ஆவி நொறுங்கி விட்டது. , என் ஆயுசு நாட்கள் முடிகிறது; கல்லறை எனக்கு ஆயத்தமாயிருக்கிறது. 2 கேலி செய்கிறவர்கள் என்னிடத்தில் இல்லையோ? அவர்கள் செய்யும் அநியாயங்களை என் கண் பார்த்துக்கொண்டிருக்கிறது. 3 தேவரீர் என் காரியத்தை உம்மேல் போட்டுக்கொண்டு, எனக்காகப் பிணைக்கப்படுவீராக; வேறே யார் எனக்குக் கைகொடுக்கத்தக்கவர்? 4 நீர் அவர்கள் இருதயத்திற்கு ஞானத்தை மறைத்தீர்; ஆகையால் அவர்களை உயர்த்தாதிருப்பீர். 5 எவன் தன் நண்பனுக்குக் கேடாகத் துரோகம் பேசுகிறானோ, அவனுடைய பிள்ளைகளின் கண்களும் பூத்துப்போகும். 6 மக்களுக்குள்ளே அவர் என்னைப் பழமொழியாக வைத்தார்; அவர்கள் முகத்திற்குமுன் நான் விரும்பத்தகாதவனானேன். 7 இதற்காக என் கண்கள் வருத்தத்தினால் இருளடைந்தது; என் உறுப்புகளெல்லாம் நிழலைப்போலிருக்கிறது. 8 சன்மார்க்கர் இதற்காக அதிர்ச்சியடைவார்கள்; குற்றமில்லாதவன் மாயக்காரனுக்கு விரோதமாக எழும்புவான். 9 நீதிமான் தன் வழியை உறுதியாகப் பிடிப்பான்; சுத்தமான கைகள் உள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான். 10 இப்போதும் நீங்கள் எல்லோரும் போய்வாருங்கள்; உங்களில் ஞானமுள்ள ஒருவனையும் காணவில்லை. 11 என் நாட்கள் முடிந்தது; என் இருதயத்தில் எனக்கு உண்டாயிருந்த சிந்தனைகள் இல்லாமல் போனது. 12 அவைகள் இரவைப் பகலாக்கியது; இருளை வெளிச்சம் தொடர்ந்துவரும் என்று நினைக்கத்தோன்றியது. 13 அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும், பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்; இருளில் என் படுக்கையைப் போடுவேன். 14 அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்; புழுக்களைப் பார்த்து, நீங்கள் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரியும் என்கிறேன். 15 என் நம்பிக்கை இப்போது எங்கே? நான் நம்பியிருந்ததைக் காண்பவன் யார்? 16 அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்; அப்போது தூளில் எங்கும் இளைப்பாறுவோம்” என்றான்.
மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 17 / 42
×

Alert

×

Tamil Letters Keypad References