1. {#1யோபுவின் வார்த்தைகள் } [PS]அதற்கு யோபு மறுமொழியாக: [PE]
2. [QS]“இப்படிப்பட்ட அநேக காரியங்களை நான் கேட்டிருக்கிறேன்; [QE][QS]நீங்கள் எல்லோரும் வேதனையுண்டாக்குகிற தேற்றரவாளர். [QE]
3. [QS]காற்றைப்போன்ற வார்த்தைகளுக்கு முடிவிராதோ? [QE][QS]இப்படி நீ பதில்சொல்ல உனக்குத் துணிவு உண்டானதென்ன? [QE]
4. [QS]உங்களைப்போல நானும் பேசமுடியும்; [QE][QS]நான் இருக்கும் நிலைமையில் நீங்கள் இருந்தால், [QE][QS]நான் உங்களுக்கு விரோதமாக வார்த்தைகளைக் கோர்த்து, [QE][QS]உங்களுக்கு எதிரே என் தலையை ஆட்டவும் முடியும். [QE]
5. [QS]ஆனாலும் நான் என் வாயினால் உங்களுக்கு தைரியம் சொல்லுவேன், [QE][QS]என் உதடுகளின் அசைவு உங்கள் துக்கத்தை ஆற்றும். [QE]
6. [QS]நான் பேசினாலும் என் துக்கம் ஆறாது; [QE][QS]நான் பேசாமலிருந்தாலும் எனக்கு என்ன ஆறுதல்? [QE]
7. [QS]இப்போது அவர் என்னை சோர்வடையச் செய்தார்; [QE][QS]என் குடும்பத்தையெல்லாம் அழித்தீர். [QE]
8. [QS]நீர் என்னைச் குறுகிப்போகச் செய்தது அதற்குச் சாட்சி; [QE][QS]என் மெலிவு என்னில் அத்தாட்சியாக நின்று, [QE][QS]என் முகத்திற்கு முன்பாக பதில் சொல்லும். [QE]
9. [QS]என்னைப் பகைக்கிறவனுடைய கோபம் என்னைக் காயப்படுத்துகிறது, [QE][QS]என் மேல் கோபப்படுகிறான்; [QE][QS]என் எதிரி தீய எண்ணத்தோடு என்னைப் பார்க்கிறான். [QE]
10. [QS]எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாகத் திறந்தார்கள்; [QE][QS]இழிவாக என்னைக் கன்னத்தில் அடித்தார்கள்; [QE][QS]என்னைச் சுற்றிலும் கூட்டங்கூடினார்கள். [QE]
11. [QS]தேவன் என்னை அநியாயக்காரரிடத்தில் ஒப்படைத்து, [QE][QS]துன்மார்க்கரின் கையில் என்னை பிடிபடச் செய்தார். [QE]
12. [QS]நான் சுகமாக வாழ்ந்திருந்தேன்; [QE][QS]அவர் என்னை நெருக்கி, என் கழுத்தைப் பிடித்து, என்னை நொறுக்கி, [QE][QS]என்னைத் தமக்கு குறியாக நிறுத்தினார். [QE]
13. [QS]அவருடைய வில்லாளர் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; [QE][QS]என் சிறுநீரகத்தை விட்டுவிடாமல் பிளந்தார்; [QE][QS]என் ஈரலைத் தரையில் ஊற்றிவிட்டார். [QE]
14. [QS]நொறுக்குதலின்மேல் நொறுக்குதலை என்மேல் வரவைத்தார்; [QE][QS]பராக்கிரமசாலியைப்போல என்மேல் பாய்ந்தார். [QE]
15. [QS]நான் சணல்சேலையைத் தைத்து, என் தோளின்மேல் போர்த்துக்கொண்டேன்; [QE][QS]என் மகிமையைப் புழுதியிலே போட்டுவிட்டேன். [QE]
16. [QS]அழுகிறதினால் என் முகம் அழுக்கடைந்தது; [QE][QS]மரண இருள் என் கண் இமைகளின்மேல் உண்டாயிருக்கிறது. [QE]
17. [QS]என் கைகளிலே கொடுமை இல்லாதிருக்கும்போதும், [QE][QS]என் ஜெபம் சுத்தமாயிருக்கும்போதும், அப்படியானது. [QE]
18. [QS]பூமியே, என் இரத்தத்தை மூடிப்போடாதே; [QE][QS]என் அலறுதலுக்கு மறைவிடம் உண்டாகாதிருப்பதாக. [QE]
19. [QS]இப்போதும் இதோ, என் சாட்சி பரலோகத்திலிருக்கிறது. [QE][QS]எனக்குச் சாட்சி சொல்லுகிறவர் உன்னதங்களில் இருக்கிறார். [QE]
20. [QS]என் நண்பர்கள் என்னை கேலி செய்கிறார்கள்; [QE][QS]என் கண் தேவனை நோக்கிக் கண்ணீர் சொரிகிறது. [QE]
21. [QS]ஒரு மனிதன் தன் நண்பனுக்காக வழக்காடுகிறதுபோல, [QE][QS]தேவனுடன் மனிதனுக்காக வழக்காடுகிறவர் ஒருவர் இருந்தால் நலமாயிருக்கும். [QE]
22. [QS]குறுகின வருடங்களுக்கு முடிவு வருகிறது; [QE][QS]நான் திரும்பிவராதவழியே போவேன். [QE]