தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (IRV) தமிழ் வெளியீடு
யோபு
1. {யோபுவின் வார்த்தைகள்} [PS] அதற்கு யோபு மறுமொழியாக: [QBR]
2. “இப்படிப்பட்ட அநேக காரியங்களை நான் கேட்டிருக்கிறேன்; [QBR] நீங்கள் எல்லோரும் வேதனையுண்டாக்குகிற தேற்றரவாளர். [QBR]
3. காற்றைப்போன்ற வார்த்தைகளுக்கு முடிவிராதோ? [QBR] இப்படி நீ பதில்சொல்ல உனக்குத் துணிவு உண்டானதென்ன? [QBR]
4. உங்களைப்போல நானும் பேசமுடியும்; [QBR] நான் இருக்கும் நிலைமையில் நீங்கள் இருந்தால், [QBR] நான் உங்களுக்கு விரோதமாக வார்த்தைகளைக் கோர்த்து, [QBR] உங்களுக்கு எதிரே என் தலையை ஆட்டவும் முடியும். [QBR]
5. ஆனாலும் நான் என் வாயினால் உங்களுக்கு தைரியம் சொல்லுவேன், [QBR] என் உதடுகளின் அசைவு உங்கள் துக்கத்தை ஆற்றும். [QBR]
6. நான் பேசினாலும் என் துக்கம் ஆறாது; [QBR] நான் பேசாமலிருந்தாலும் எனக்கு என்ன ஆறுதல்? [QBR]
7. இப்போது அவர் என்னை சோர்வடையச் செய்தார்; [QBR] என் குடும்பத்தையெல்லாம் அழித்தீர். [QBR]
8. நீர் என்னைச் குறுகிப்போகச் செய்தது அதற்குச் சாட்சி; [QBR] என் மெலிவு என்னில் அத்தாட்சியாக நின்று, [QBR] என் முகத்திற்கு முன்பாக பதில் சொல்லும். [QBR]
9. என்னைப் பகைக்கிறவனுடைய கோபம் என்னைக் காயப்படுத்துகிறது, [QBR] என் மேல் கோபப்படுகிறான்; [QBR] என் எதிரி தீய எண்ணத்தோடு என்னைப் பார்க்கிறான். [QBR]
10. எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாகத் திறந்தார்கள்; [QBR] இழிவாக என்னைக் கன்னத்தில் அடித்தார்கள்; [QBR] என்னைச் சுற்றிலும் கூட்டங்கூடினார்கள். [QBR]
11. தேவன் என்னை அநியாயக்காரரிடத்தில் ஒப்படைத்து, [QBR] துன்மார்க்கரின் கையில் என்னை பிடிபடச் செய்தார். [QBR]
12. நான் சுகமாக வாழ்ந்திருந்தேன்; [QBR] அவர் என்னை நெருக்கி, என் கழுத்தைப் பிடித்து, என்னை நொறுக்கி, [QBR] என்னைத் தமக்கு குறியாக நிறுத்தினார். [QBR]
13. அவருடைய வில்லாளர் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; [QBR] என் சிறுநீரகத்தை விட்டுவிடாமல் பிளந்தார்; [QBR] என் ஈரலைத் தரையில் ஊற்றிவிட்டார். [QBR]
14. நொறுக்குதலின்மேல் நொறுக்குதலை என்மேல் வரவைத்தார்; [QBR] பராக்கிரமசாலியைப்போல என்மேல் பாய்ந்தார். [QBR]
15. நான் சணல்சேலையைத் தைத்து, என் தோளின்மேல் போர்த்துக்கொண்டேன்; [QBR] என் மகிமையைப் புழுதியிலே போட்டுவிட்டேன். [QBR]
16. அழுகிறதினால் என் முகம் அழுக்கடைந்தது; [QBR] மரண இருள் என் கண் இமைகளின்மேல் உண்டாயிருக்கிறது. [QBR]
17. என் கைகளிலே கொடுமை இல்லாதிருக்கும்போதும், [QBR] என் ஜெபம் சுத்தமாயிருக்கும்போதும், அப்படியானது. [QBR]
18. பூமியே, என் இரத்தத்தை மூடிப்போடாதே; [QBR] என் அலறுதலுக்கு மறைவிடம் உண்டாகாதிருப்பதாக. [QBR]
19. இப்போதும் இதோ, என் சாட்சி பரலோகத்திலிருக்கிறது. [QBR] எனக்குச் சாட்சி சொல்லுகிறவர் உன்னதங்களில் இருக்கிறார். [QBR]
20. என் நண்பர்கள் என்னை கேலி செய்கிறார்கள்; [QBR] என் கண் தேவனை நோக்கிக் கண்ணீர் சொரிகிறது. [QBR]
21. ஒரு மனிதன் தன் நண்பனுக்காக வழக்காடுகிறதுபோல, [QBR] தேவனுடன் மனிதனுக்காக வழக்காடுகிறவர் ஒருவர் இருந்தால் நலமாயிருக்கும். [QBR]
22. குறுகின வருடங்களுக்கு முடிவு வருகிறது; [QBR] நான் திரும்பிவராதவழியே போவேன். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 16 / 42
யோபு 16:14
யோபுவின் வார்த்தைகள் 1 அதற்கு யோபு மறுமொழியாக: 2 “இப்படிப்பட்ட அநேக காரியங்களை நான் கேட்டிருக்கிறேன்; நீங்கள் எல்லோரும் வேதனையுண்டாக்குகிற தேற்றரவாளர். 3 காற்றைப்போன்ற வார்த்தைகளுக்கு முடிவிராதோ? இப்படி நீ பதில்சொல்ல உனக்குத் துணிவு உண்டானதென்ன? 4 உங்களைப்போல நானும் பேசமுடியும்; நான் இருக்கும் நிலைமையில் நீங்கள் இருந்தால், நான் உங்களுக்கு விரோதமாக வார்த்தைகளைக் கோர்த்து, உங்களுக்கு எதிரே என் தலையை ஆட்டவும் முடியும். 5 ஆனாலும் நான் என் வாயினால் உங்களுக்கு தைரியம் சொல்லுவேன், என் உதடுகளின் அசைவு உங்கள் துக்கத்தை ஆற்றும். 6 நான் பேசினாலும் என் துக்கம் ஆறாது; நான் பேசாமலிருந்தாலும் எனக்கு என்ன ஆறுதல்? 7 இப்போது அவர் என்னை சோர்வடையச் செய்தார்; என் குடும்பத்தையெல்லாம் அழித்தீர். 8 நீர் என்னைச் குறுகிப்போகச் செய்தது அதற்குச் சாட்சி; என் மெலிவு என்னில் அத்தாட்சியாக நின்று, என் முகத்திற்கு முன்பாக பதில் சொல்லும். 9 என்னைப் பகைக்கிறவனுடைய கோபம் என்னைக் காயப்படுத்துகிறது, என் மேல் கோபப்படுகிறான்; என் எதிரி தீய எண்ணத்தோடு என்னைப் பார்க்கிறான். 10 எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாகத் திறந்தார்கள்; இழிவாக என்னைக் கன்னத்தில் அடித்தார்கள்; என்னைச் சுற்றிலும் கூட்டங்கூடினார்கள். 11 தேவன் என்னை அநியாயக்காரரிடத்தில் ஒப்படைத்து, துன்மார்க்கரின் கையில் என்னை பிடிபடச் செய்தார். 12 நான் சுகமாக வாழ்ந்திருந்தேன்; அவர் என்னை நெருக்கி, என் கழுத்தைப் பிடித்து, என்னை நொறுக்கி, என்னைத் தமக்கு குறியாக நிறுத்தினார். 13 அவருடைய வில்லாளர் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; என் சிறுநீரகத்தை விட்டுவிடாமல் பிளந்தார்; என் ஈரலைத் தரையில் ஊற்றிவிட்டார். 14 நொறுக்குதலின்மேல் நொறுக்குதலை என்மேல் வரவைத்தார்; பராக்கிரமசாலியைப்போல என்மேல் பாய்ந்தார். 15 நான் சணல்சேலையைத் தைத்து, என் தோளின்மேல் போர்த்துக்கொண்டேன்; என் மகிமையைப் புழுதியிலே போட்டுவிட்டேன். 16 அழுகிறதினால் என் முகம் அழுக்கடைந்தது; மரண இருள் என் கண் இமைகளின்மேல் உண்டாயிருக்கிறது. 17 என் கைகளிலே கொடுமை இல்லாதிருக்கும்போதும், என் ஜெபம் சுத்தமாயிருக்கும்போதும், அப்படியானது. 18 பூமியே, என் இரத்தத்தை மூடிப்போடாதே; என் அலறுதலுக்கு மறைவிடம் உண்டாகாதிருப்பதாக. 19 இப்போதும் இதோ, என் சாட்சி பரலோகத்திலிருக்கிறது. எனக்குச் சாட்சி சொல்லுகிறவர் உன்னதங்களில் இருக்கிறார். 20 என் நண்பர்கள் என்னை கேலி செய்கிறார்கள்; என் கண் தேவனை நோக்கிக் கண்ணீர் சொரிகிறது. 21 ஒரு மனிதன் தன் நண்பனுக்காக வழக்காடுகிறதுபோல, தேவனுடன் மனிதனுக்காக வழக்காடுகிறவர் ஒருவர் இருந்தால் நலமாயிருக்கும். 22 குறுகின வருடங்களுக்கு முடிவு வருகிறது; நான் திரும்பிவராதவழியே போவேன்.
மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 16 / 42
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References