1. [QS]“பெண்ணிடத்தில் பிறந்த மனிதன் வாழ்நாள் குறுகினவனும் [QE][QS]வருத்தம் நிறைந்தவனுமாயிருக்கிறான். [QE]
2. [QS]அவன் பூவைப்போலப் பூத்துமறைந்து போகிறான்; [QE][QS]நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான். [QE]
3. [QS]ஆகிலும் இப்படிப்பட்டவன்மேல் நீர் உம்முடைய கண்களைத் திறந்துவைத்து, [QE][QS]உம்முடைய நியாயத்திற்கு என்னைக் கொண்டுபோவீரோ? [QE]
4. [QS]அசுத்தமானதிலிருந்து சுத்தமானதைப் பிறக்கவைப்பவன் உண்டோ? [QE][QS]ஒருவனுமில்லை. [QE]
5. [QS]அவனுடைய நாட்கள் இவ்வளவுதான் என்று குறிக்கப்பட்டிருப்பதால், [QE][QS]அவனுடைய மாதங்களின் எண்ணிக்கை உம்மிடத்தில் இருக்கிறது; [QE][QS]அவன் கடந்துபோகமுடியாத எல்லையை அவனுக்கு ஏற்படுத்தினீர். [QE]
6. [QS]அவன் ஒரு கூலிக்காரனைப்போல தன் நாளின் வேலை முடிந்தது என்று நிம்மதியடையும்வரை அவன் ஓய்ந்திருக்க உமது பார்வையை அவனைவிட்டு விலக்கும். [QE]
7. [QS]ஒரு மரத்தைக்குறித்தாவது நம்பிக்கையுண்டு; [QE][QS]அது வெட்டிப்போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும், [QE][QS]அதின் இளங்கிளைகள் துளிர்க்கும்; [QE]
8. [QS]அதின் வேர் தரையிலே பழையதாகி, [QE][QS]அதின் அடிக்கட்டை மண்ணிலே செத்தாலும், [QE]
9. [QS]தண்ணீரின் வாசனையினால் அது துளிர்த்து, [QE][QS]இளமரம்போலக் கிளைவிடும். [QE]
10. [QS]மனிதனோவென்றால் இறந்தபின் ஒழிந்துபோகிறான், [QE][QS]மனிதன் இறந்துபோனபின் அவன் எங்கே? [QE]
11. [QS]தண்ணீர் ஏரியிலிருந்து வடிந்து, [QE][QS]வெள்ளம் வற்றிக் காய்ந்துபோகிறதுபோல, [QE]
12. [QS]மனிதன் படுத்துக்கிடக்கிறான், [QE][QS]வானங்கள் ஒழிந்துபோகும்வரை எழுந்திருக்கிறதும் இல்லை, [QE][QS]தூக்கம் தெளிந்து விழிக்கிறதும் இல்லை. [QE]
13. [QS]நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, [QE][QS]உமது கோபம் தணியும்வரை என்னை மறைத்து, [QE][QS]என்னைத் திரும்ப நினைப்பதற்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும். [QE]
14. [QS]மனிதன் இறந்தபின் பிழைப்பானோ? [QE][QS]எனக்கு மாறுதல் எப்போது வருமென்று [QE][QS]எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன். [QE]
15. [QS]என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு பதில் சொல்லுவேன்; [QE][QS]உமது கைகளின் செயல்களின்மேல் விருப்பம் வைப்பீராக. [QE]
16. [QS]இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர்; [QE][QS]என் பாவத்தின்மேலல்லவோ கவனமாயிருக்கிறீர். [QE]
17. [QS]என் மீறுதல் ஒரே கட்டாகக் கட்டப்பட்டு [QE][QS]முத்திரைபோடப்பட்டிருக்கிறது, என் அக்கிரமத்தை ஒன்று சேர்த்தீர். [QE]
18. [QS]மலைகளெல்லாம் விழுந்து கரைந்துபோகும்; [QE][QS]கன்மலை தன் இடத்தைவிட்டுப் பெயர்ந்துபோகும். [QE]
19. [QS]தண்ணீர் கற்களைக் குடையும்; [QE][QS]பெருவெள்ளம் பூமியின் தூளில் முளைத்ததை மூடும்; [QE][QS]அப்படியே மனிதன் கொண்டிருக்கும் நம்பிக்கையை அழிக்கிறீர். [QE]
20. [QS]நீர் என்றைக்கும் அவனைப் பலமாக நெருக்குகிறதினால் அவன் போய்விடுகிறான்; [QE][QS]அவனுடைய முகரூபத்தை மாற்றி அவனை அனுப்பிவிடுகிறீர். [QE]
21. [QS]அவனுடைய பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரமாட்டான்; [QE][QS]அவர்கள் சிறுமைப்பட்டாலும் அவர்களைக் கவனிக்கமாட்டான். [QE]
22. [QS]அவனுடைய உடல் அவனிலிருக்கும்வரை அதற்கு வியாதியிருக்கும்; [QE][QS]அவனுடைய ஆத்துமா அவனுக்குள்ளிருக்கும்வரை அதற்குத் துக்கமுண்டு” என்றான். [QE]