1. {#1யோபுவின் வார்த்தைகள் } [PS]யோபு மறுமொழியாக: [PE]
2. [QS]“ஆம், நீங்களே ஞானமுள்ள மக்கள்; [QE][QS]உங்களுடனே ஞானம் சாகும். [QE]
3. [QS]உங்களைப்போல எனக்கும் புத்தியுண்டு; [QE][QS]உங்களைவிட நான் தாழ்ந்தவன் அல்ல; [QE][QS]இப்படிப்பட்டவைகளை அறியாதவன் யார்? [QE]
4. [QS]என் நண்பர்களால் நான் நிந்திக்கப்பட்டு, [QE][QS]தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; அவர் எனக்குத் திரும்ப பதில் அருளுவார்; [QE][QS]உத்தமனாகிய நீதிமான் கேலிசெய்யப்படுகிறான். [QE]
5. [QS]ஆபத்திற்குள்ளானவன் சுகமாயிருக்கிறவனுடைய நினைவில் இகழ்ச்சியடைகிறான்; [QE][QS]கால் தடுமாறினவர்களுக்கு இது சம்பவிக்கும். [QE]
6. [QS]திருடர்களுடைய கூடாரங்களில் செல்வமுண்டு; [QE][QS]தேவனைக் கோபப்படுத்துகிறவர்களுக்கு பாதுகாப்புண்டு; [QE][QS]அவர்கள் கையிலே தேவன் கொண்டுவந்து கொடுக்கிறார். [QE]
7. [QS]இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார், [QE][QS]அவைகள் உனக்குப் போதிக்கும் ஆகாயத்துப் பறவைகளைக் கேள், [QE][QS]அவைகள் உனக்கு அறிவிக்கும். [QE]
8. [QS]அல்லது பூமியை விசாரித்துக் கேள், [QE][QS]அது உனக்குப் போதிக்கும்; [QE][QS]சமுத்திரத்தின் மீன்களைக் கேள், அவைகள் உனக்கு விவரிக்கும். [QE]
9. [QS]யெகோவாவுடைய கரம் இதைச் செய்ததென்று இவைகள் எல்லாவற்றினாலும் அறியாதவன் யார்? [QE]
10. [QS]எல்லா உயிரினங்களின் உயிரும், [QE][QS]மாம்சமான எல்லா மனிதரின் ஆவியும் அவர் கையிலிருக்கிறது. [QE]
11. [QS]வாயானது ஆகாரத்தை ருசிபார்க்கிறதுபோல, [QE][QS]காதானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கிறதல்லவா? [QE]
12. [QS]முதியோரிடத்தில் ஞானமும் வயது சென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே. [QE]
13. [QS]அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாக இருக்கும்? [QE][QS]அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு. [QE]
14. [QS]இதோ, அவர் இடித்தால் கட்டமுடியாது; [QE][QS]அவர் மனிதனை அடைத்தால் விடுவிக்கமுடியாது. [QE]
15. [QS]இதோ, அவர் தண்ணீர்களை அடக்கினால் எல்லாம் உலர்ந்துபோகும்; [QE][QS]அவர் அவைகளை வரவிட்டால், பூமியைத் தலைகீழாக மாற்றும். [QE]
16. [QS]அவரிடத்தில் பெலனும் ஞானமுமுண்டு; [QE][QS]மோசம் போகிறவனும் மோசம் போக்குகிறவனும், [QE][QS]அவர் கையின் கீழிருக்கிறார்கள். [QE]
17. [QS]அவர் ஆலோசனைக்காரரைச் சிறைபிடித்து, [QE][QS]நியாயாதிபதிகளின் புத்தியை மயக்குகிறார். [QE]
18. [QS]அவர் ராஜாக்களுடைய கட்டுகளை அவிழ்த்து, [QE][QS]அவர்கள் இடுப்புகளில் துணியைக்கட்டுகிறார். [QE]
19. [QS]அவர் மந்திரிகளைச் சிறைபிடித்துக் கொண்டுபோய், [QE][QS]பெலவான்களைக் கவிழ்த்துப்போடுகிறார். [QE]
20. [QS]அவர் நம்பிக்கையுள்ளவர்களுடைய வார்த்தையை அகற்றி, [QE][QS]முதிர்வயதுள்ளவர்களின் ஆலோசனையைத் தள்ளிப்போடுகிறார். [QE]
21. [QS]அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரச்செய்கிறார்; [QE][QS]பலவான்களின் வார்க்கச்சையைத் தளர்ந்துபோகச் செய்கிறார். [QE]
22. [QS]அவர் மறைவிடத்திலிருக்கிற ஆழங்களை வெளியரங்கமாக்கி, [QE][QS]மரண இருளை வெளிச்சத்தில் கொண்டுவருகிறார். [QE]
23. [QS]அவர் தேசங்களைப் பெருகவும் அழியவும் செய்கிறார்; [QE][QS]அவர் தேசங்களைப் பரவவும் குறுகவும் செய்கிறார். [QE]
24. [QS]அவர் பூமியிலுள்ள தேசத்தின் அதிபதிகளின் நெஞ்சை அகற்றிப்போட்டு, [QE][QS]அவர்களை வழியில்லாத வனாந்திரத்திலே அலையச்செய்கிறார். [QE]
25. [QS]அவர்கள் வெளிச்சமில்லாத இருளிலே தடவித்திரிகிறார்கள்; [QE][QS]வெறித்தவர்களைப்போல அவர்களைத் தடுமாறி அலையவைக்கிறார். [QE]