2. “இஸ்ரவேலர்கள் எனக்குக் காணிக்கையைக் கொண்டுவரும்படி அவர்களுக்குச் சொல்லு; மனப்பூர்வமாக உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடம் எனக்குக் காணிக்கையை வாங்கிக்கொள்.
|
5. சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத்தோலும், மெல்லிய தோலும் * ஒரு கடல் பிராணி தோல் , சீத்திம் மரமும்,
|
9. நான் உனக்குக் காண்பிக்கும் ஆசரிப்புக்கூடாரத்தின் மாதிரியின்படியும், அதனுடைய எல்லாப்பொருட்களின் மாதிரியின்படியும் அதைச் செய்யுங்கள். PS
|
10. {உடன்படிக்கையின் பெட்டி} PS “சீத்திம் மரத்தால் ஒரு பெட்டியைச் செய்யுங்கள்; அதின் நீளம் இரண்டரை முழமும் † 45 அங்குலம் நீளம், 27 அங்குலம் அகலம், 27 அங்குலம் உயரம் , அதின் அகலம் ஒன்றரை முழமும், அதின் உயரம் ஒன்றரை முழமுமாக இருக்கட்டும்.
|
11. அதை எங்கும் சுத்தப்பொன் தகட்டால் மூடு; நீ அதனுடைய உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் அதனால் மூடி, அதின்மேல் சுற்றிலும் பொன்னினால் விளிம்பு உண்டாக்கி,
|
12. அதற்கு நான்கு பொன் வளையங்களைச் செய்து, அவைகளை அதின் நான்கு மூலைகளிலும் போட்டு, ஒரு பக்கத்தில் இரண்டு வளையங்களும், மறுபக்கத்தில் இரண்டு வளையங்களும் இருக்கும்படித் தைத்து,
|
14. அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களிலிருக்கும் வளையங்களிலே பாய்ச்சு.
|
17. “சுத்தப்பொன்னினாலே கிருபாசனத்தைச் செய்; அது இரண்டரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாக ‡ 45 அங்குலம் நீளம், 27 அங்குலம் அகலம் இருக்கட்டும்.
|
18. பொன்னினால் இரண்டு கேருபீன்களைச் செய்; பொன்னைத் தகடாக அடித்து, அவைகளைச் செய்து, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் வைக்கவேண்டும்.
|
19. ஒருபக்கத்து ஓரத்தில் ஒரு கேருபீனையும் மறுபக்கத்து ஓரத்தில் மற்றக் கேருபீனையும் செய்து வை; அந்தக் கேருபீன்கள் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடு இருக்கும்படி ஒரேவேலையாக, அவைகளைச் செய்யவேண்டும்.
|
20. அந்தக் கேருபீன்கள் தங்களுடைய இறக்கைகளை உயர விரித்து, தங்களுடைய இறக்கைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும் ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளுமாக இருக்கட்டும்; கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்குகிறவைகளாக இருப்பதாக.
|
21. கிருபாசனத்தைப் பெட்டியின்மீது வைத்து, பெட்டிக்குள்ளே நான் உனக்குக் கொடுக்கும் உடன்படிக்கையின் கட்டளைகளை வைப்பாயாக.
|
22. அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; கிருபாசனத்தின்மீதிலும் சாட்சிப்பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலுமிருந்து நான் இஸ்ரவேலர்களுக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடு சொல்லுவேன். PS
|
23. {பரிசுத்த அப்பத்தின் மேஜை} PS “சீத்திம் மரத்தால் ஒரு மேஜையையும் செய்; அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமாக § 36 அங்குலம் நீளம் 18 அங்குலம், அகலம் 27 அங்குலம். இருக்கட்டும்.
|
25. சுற்றிலும் அதற்கு நான்கு விரலளவு * 3 அங்குலம் உள்ள சட்டத்தையும், அதின் சட்டத்திற்குச் சுற்றிலும் பொன்னினால் விளிம்பையும் உண்டாக்கி,
|
26. அதற்கு நான்கு பொன்வளையங்களைச் செய்து, அவைகளை அதின் நான்கு கால்களுக்கு இருக்கும் நான்கு மூலைகளிலும் நீ தைக்கவேண்டும்.
|
27. அந்த வளையங்கள் மேஜையைச் சுமக்கும் தண்டுகளுக்கு இடங்கள் உண்டாயிருக்கும்படி, சட்டத்தின் அருகே இருக்கவேண்டும்.
|
28. அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தினால் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடு; அவைகளால் மேஜை சுமக்கப்படவேண்டும்.
|
29. அதற்குரிய தட்டுகளையும், தூபக்கரண்டிகளையும், கிண்ணங்களையும், பானபலிக்கான கிண்ணங்களையும் செய்யக்கடவாய்; அவைகளைப் சுத்தப்பொன்னினால் செய்.
|
30. மேஜையின்மேல் எப்போதும் என்னுடைய சந்நிதியில் சமுகத்தப்பங்களை வைக்கவேண்டும். விளக்குத்தண்டு (யாத்திராகமம் 37:17-22) PEPS
|
31. “சுத்தப்பொன்னினால் ஒரு குத்துவிளக்கை உண்டாக்கு; அது பொன்னினால் அடிப்பு வேலையாகச் செய்யப்படவேண்டும்; அதின் தண்டும், கிளைகளும், மொக்குகளும், பழங்களும், பூக்களும் பொன்னினால் செய்யப்படவேண்டும்.
|
32. ஆறு கிளைகள் அதின் பக்கங்களில் விடவேண்டும்; குத்துவிளக்கின் மூன்று கிளைகள் அதின் ஒரு பக்கத்திலும், குத்துவிளக்கின் மூன்று கிளைகள் அதின் மறுபக்கத்திலும் விடவேண்டும்.
|
33. ஒவ்வொரு கிளையிலே வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான மூன்று மொக்குகளும், ஒரு பழமும், ஒரு பூவும் இருப்பதாக; குத்துவிளக்கிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளிலும் அப்படியே இருக்கவேண்டும்.
|
34. விளக்குத்தண்டிலோ, வாதுமைக் கொட்டைக்கு ஒப்பான நான்கு மொக்குகளும், பழங்களும், பூக்களும் இருப்பதாக.
|
35. அதிலிருந்து புறப்படும் இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், வேறு இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், மற்ற இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும் இருக்கட்டும்; விளக்குத்தண்டிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும்.
|
36. அவைகளின் பழங்களும் அவைகளின் கிளைகளும் பொன்னினால் உண்டானவைகளாக இருக்கட்டும்; அவையெல்லாம் தகடாக அடித்த சுத்தப்பொன்னால் செய்யப்பட்ட ஒரே வேலையாக இருக்கவேண்டும்.
|
39. அதையும், அதற்குரிய பணிப்பொருட்கள் யாவையும் ஒரு தாலந்து † 35 கிலோ சுத்தப்பொன்னினால் செய்யவேண்டும்.
|