1. {மோசேயின் பாடல்} PS “வானங்களே, செவிகொடுங்கள், நான் பேசுவேன்;
பூமியே, என் வாய்மொழிகளைக் கேட்பாயாக. |
2. மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும்;
பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும். |
4. “அவர் கன்மலை;
அவருடைய செயல் உத்தமமானது; அவருடைய வழிகளெல்லாம் நியாயம், அவர் அநீதி இல்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர். |
5. அவர்களோ தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள், அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல;
இதுவே அவர்களுடைய காரியம்; அவர்கள் மாறுபாடும் தாறுமாறுமுள்ள சந்ததியார். |
6. விவேகமில்லாத மதிகெட்ட மக்களே,
இப்படியா யெகோவாவுக்குப் பதிலளிக்கிறீர்கள், உன்னை ஆட்கொண்ட தகப்பன் அவரல்லவா? உன்னை உண்டாக்கி உன்னை நிலைப்படுத்தினவர் அவரல்லவா? |
7. ஆரம்பநாட்களை நினை;
தலைமுறை தலைமுறையாக கடந்துபோன வருடங்களைக் கவனித்துப்பார்; உன் தகப்பனைக் கேள், அவன் உனக்கு அறிவிப்பான்; உன் மூப்பர்களைக் கேள், அவர்கள் உனக்குச் சொல்லுவார்கள். |
8. உன்னதமான தேவன் மக்களுக்குச் சொத்துக்களைப் பங்கிட்டு,
ஆதாமின் பிள்ளைகளை வெவ்வேறாகப் பிரித்த காலத்தில், இஸ்ரவேல் மக்களுடைய எண்ணிக்கைக்குத்தக்கதாக, அனைத்து மக்களின் எல்லைகளைத் திட்டம்செய்தார். |
10. “பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான வெட்டவெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார்,
அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப் போலக் காத்தருளினார். |
11. கழுகு தன் கூட்டைக் கலைத்து,
தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் இறக்கைகளை விரித்து, குஞ்சுகளை எடுத்து, அவைகளைத் தன் இறக்கைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறதுபோல, |
13. பூமியிலுள்ள உயர்ந்த இடங்களின்மேல் அவனை ஏறிவரச்செய்தார்;
வயலில் விளையும் பலனை அவனுக்குச் சாப்பிடக் கொடுத்தார்; கன்மலையிலுள்ள தேனையும் கற்பாறையிலிருந்து வடியும் எண்ணெயையும் அவன் சாப்பிடும்படி செய்தார். |
14. பசுவின் வெண்ணெயையும், ஆட்டின் பாலையும்,
பாசானில் மேயும் ஆட்டுக்குட்டிகள், ஆட்டுக்கடாக்கள், வெள்ளாட்டுக்கடாக்கள் இவைகளுடைய கொழுப்பையும், கொழுமையான கோதுமையையும், இரத்தம்போன்ற பொங்கிவழிகிற திராட்சைரசத்தையும் சாப்பிட்டாய். |
15. “யெஷூரன் * இஸ்ரவேலின் நீதிபரரை கொழுத்துப்போய் உதைத்தான்;
கொழுத்து, பருத்து, கொழுப்பு அதிகமானதால், தன்னை உண்டாக்கின தேவனைவிட்டு, தன் இரட்சிப்பின் கன்மலையை அசட்டைசெய்தான். |
16. அந்நிய தெய்வங்களால் அவருக்கு எரிச்சலை மூட்டினார்கள்;
அருவருப்பானவைகளினால் அவரைக் கோபப்படுத்தினார்கள். |
17. அவர்கள் தேவனுக்குப் பலியிடவில்லை;
தாங்கள் அறியாதவைகளும், தங்கள் முற்பிதாக்கள் பயப்படாதவைகளும், புதுமையாகத் தோன்றிய புது தெய்வங்களுமாகிய பேய்களுக்கே பலியிட்டார்கள். |
19. “யெகோவா அதைக்கண்டு, தமது மகன்களும்,
மகள்களும் தம்மைக் கோபப்படுத்தியதால் மனச்சோர்வடைந்து, அவர்களைப் புறக்கணித்து: |
20. என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்;
அவர்களுடைய முடிவு எப்படியிருக்கும் என்று பார்ப்பேன்; அவர்கள் மகா மாறுபாடுள்ள சந்ததி; உண்மையில்லாத பிள்ளைகள். |
21. தெய்வம் அல்லாதவைகளினால் எனக்கு எரிச்சலை மூட்டி,
தங்களுடைய வீணான தீயசெயல்களினால் என்னைக் கோபப்படுத்தினார்கள்; ஆகையால் மதிக்கப்படாத மக்களினால் அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கி, மதிகெட்ட மக்களால் அவர்களைப் கோபப்படுத்துவேன். |
22. என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது,
அது தாழ்ந்த நரகம்வரை எரியும்; அது பூமியையும், அதின் பலனையும் அழித்து, மலைகளின் அஸ்திபாரங்களை வேகச்செய்யும். |
24. அவர்கள் பசியினால் வாடி,
சுட்டெரிக்கும் வெப்பத்தினாலும், கொடிய தண்டனையினாலும் இறந்துபோவார்கள்; கொடிய மிருகங்களின் பற்களையும், தரையில் ஊரும் பாம்புகளின் விஷத்தையும் அவர்களுக்குள் அனுப்புவேன். |
25. வெளியிலே பட்டயமும்,
உள்ளே பயங்கரமும், வாலிபனையும், இளம்பெண்ணையும், குழந்தையையும், நரைத்த கிழவனையும் அழிக்கும். |
26. எங்கள் கை உயர்ந்ததென்றும்,
யெகோவா இதையெல்லாம் செய்யவில்லை என்றும் அவர்களுடைய பகைவர்கள் தவறான எண்ணம்கொண்டு சொல்லுவார்கள் என்று, |
27. நான் எதிரியின் கோபத்திற்கு பயப்படாமல் இருந்தேன் என்றால்,
நான் அவர்களை மூலைக்குமூலை சிதறடித்து, மனிதர்களுக்குள் அவர்களுடைய பெயர் அழிந்துபோகச்செய்வேன் என்று சொல்லியிருப்பேன். |
30. அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும்,
யெகோவா அவர்களை ஒப்புக்கொடாமலும் இருந்தாரானால், ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்தி, இரண்டுபேர் பத்தாயிரம்பேரைத் துரத்துவது எப்படி? |
32. அவர்களுடைய திராட்சைச்செடி,
சோதோமிலும் கொமோரா நிலங்களிலும் பயிரான திராட்சைச்செடியிலும் குறைந்த தரமுள்ளதாக இருக்கிறது, அவைகளின் பழங்கள் விஷமும் அவைகளின் குலைகள் கசப்புமாக இருக்கிறது. |
34. “இது என்னிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு,
என் பொக்கிஷங்களில் இது முத்திரை போடப்பட்டு இருக்கிறதில்லையோ? |
35. பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது;
ஏற்றகாலத்தில் அவர்களுடைய கால் தள்ளாடும்; அவர்களுடைய ஆபத்துநாள் நெருங்கியிருக்கிறது; அவர்களுக்கு சம்பவிக்கும் காரியங்கள் விரைவாக வரும். |
36. யெகோவா தம்முடைய மக்களை நியாயந்தீர்த்து,
அவர்கள் பெலன் போயிற்று என்றும், அடைக்கப்பட்டவர்களாவது விடுதலை பெற்றவர்களாவது ஒருவரும் இல்லையென்றும் காணும்போது, தம்முடைய ஊழியக்காரர்கள்மேல் பரிதாபப்படுவார். |
37. அப்பொழுது அவர்: அவர்கள் பலியிட்ட பலிகளின் கொழுப்பைச் சாப்பிட்டு,
பானபலிகளின் திராட்சைரசத்தைக் குடித்த அவர்களுடைய தெய்வங்களும் அவர்கள் நம்பின கன்மலையும் எங்கே? |
39. “நான் நானே அவர்,
என்னுடன் வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்; நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; நான் காயப்படுத்துகிறேன், நான் குணமாக்குகிறேன்; என் கைக்குத் தப்புவிப்பவர் இல்லை. |
41. மின்னும் என் பட்டயத்தை நான் கூர்மையாக்கி,
என் கையானது நியாயத்தைப் பிடித்துக்கொள்ளுமானால், என் எதிரிகளிடத்தில் பழிவாங்கி, என்னைப் பகைக்கிறவர்களுக்குப் பதில்கொடுப்பேன். |
42. கொலைசெய்யப்பட்டும், சிறைப்பட்டும் போனவர்களுடைய இரத்தத்தாலே என் அம்புகளை வெறிகொள்ளச்செய்வேன்;
என் பட்டயம் தலைவர்கள் முதற்கொண்டு சகல எதிரிகளின் மாம்சத்தையும் அழிக்கும். |
43. “மக்களே, அவருடைய மக்களுடன் மகிழ்ச்சியாயிருங்கள்; அவர் தமது ஊழியக்காரர்களின் இரத்தத்திற்குப் பழிவாங்கி,
தம்முடைய எதிரிகளுக்குப் பதில்கொடுத்து, தமது தேசத்தின்மேலும் தமது மக்களின்மேலும் கிருபையுள்ளவராக இருப்பார்”. PEPS |
44. மோசேயும் நூனின் மகனாகிய யோசுவாவும் வந்து, இந்தப் பாட்டின் வார்த்தைகளையெல்லாம் மக்கள் கேட்கத்தக்கதாகச் சொன்னார்கள்.
|
46. அவர்களை நோக்கி: “இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் உங்கள் பிள்ளைகள் செய்யும்படி கவனமாயிருக்க, நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்கும்படி, நான் இன்று உங்களுக்குச் சாட்சியாக ஒப்புவிக்கிற வார்த்தைகளையெல்லாம் உங்கள் மனதிலே வையுங்கள்.
|
47. இது உங்களுக்கு பயனற்ற காரியம் அல்லவே; இது உங்கள் உயிராயிருக்கிறது, நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ள யோர்தானைக் கடந்துபோய்ச் சேரும் தேசத்தில் இதினால் உங்கள் நாட்களை நீடிக்கச்செய்வீர்கள்” என்றான். PS
|
49. “நீ எரிகோவுக்கு எதிரேயுள்ள மோவாப் தேசத்திலுள்ள இந்த அபாரீம் என்னும் மலைகளிலிருக்கிற நேபோ மலையில் ஏறி, நான் இஸ்ரவேல் சந்ததியாருக்கு சொந்தமாகக் கொடுக்கும் கானான் தேசத்தைப் பார்;
|
50. நீங்கள் சீன் வனாந்திரத்திலுள்ள காதேசிலே மேரிபாவின் தண்ணீரின் அருகில் இஸ்ரவேல் மக்களுக்குள்ளே என்னைப் பரிசுத்தம்செய்யாமல், அவர்கள் நடுவே என் கட்டளைகளை மீறினதினாலே,
|
51. உன் சகோதரனாகிய ஆரோன், ஓர் என்னும் மலையிலே மரணமடைந்து, தன் முன்னோர்களிடத்தில் சேர்க்கப்பட்டதுபோல நீயும் ஏறப்போகிற மலையிலே மரணமடைந்து, உன் முன்னோர்களிடத்தில் சேர்க்கப்படுவாய்.
|
52. நான் இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுக்கப்போகிற எதிரேயுள்ள தேசத்தை நீ பார்ப்பாய்; ஆனாலும் அதற்குள் நீ நுழைவதில்லை” என்றார். PE
|