தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
உபாகமம்
1. {சகோதரனின் மனைவியைத் திருமணம் செய்தல்} [PS] “மனிதர்களுக்குள்ளே வழக்கு இருந்தால், அவர்கள் நியாயம் விசாரிக்கப்பட நீதிமன்றத்திற்கு வந்தால், நியாயாதிபதிகள் நீதிமானை நீதிமான் என்றும் குற்றவாளியைக் குற்றவாளி என்றும் நியாயம் தீர்க்கவேண்டும்.
2. குற்றவாளி அடிக்கப்பட தண்டனை பெற்றால், நியாயாதிபதி அவனைக் கீழே படுக்கச்செய்து, அவன் குற்றத்திற்குத்தக்கதாகத் தனக்கு முன்பாகக் கணக்கின்படி அவனை அடிப்பிக்கக்கடவன்.
3. அவனை நாற்பது அடிகள்வரைக்கும் அடிக்கலாம்; அவனை அதிலும் அதிகமாக அடிக்கிறதினால் உன் சகோதரன் உன் கண்களுக்கு முன்பாக அற்பமானவனாக காணப்படுவான்; ஆதலால் அவனை அதிகமாக அடிக்கவேண்டாம்.
4. “போரடிக்கிற மாட்டை வாய் கட்டாதே.
5. “சகோதரர்கள் ஒன்றாகக் குடியிருக்கும்போது, அவர்களில் ஒருவன் வாரிசு இல்லாமல் இறந்தால், இறந்தவனுடைய மனைவி வெளியிலிருக்கிற அந்நியனுக்கு மனைவியாகக்கூடாது; அவளுடைய கணவனின் சகோதரன் அவளைத் தனக்கு மனைவியாகக் கொண்டு, அவளிடத்தில் சேர்ந்து, கணவனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்.
6. இறந்த சகோதரனுடைய பெயர் இஸ்ரவேலில் மறைந்துபோகாதிருக்க, அவன் பெயரை அவள் பெறும் தலைமகனுக்கு வைக்கவேண்டும்.
7. அவன் தன் சகோதரனுடைய மனைவியைத் திருமணம்செய்ய விருப்பமில்லாதிருந்தால், அவன் சகோதரனுடைய மனைவி வாசலில் கூடிய மூப்பர்களிடத்திற்குப் போய், என் கணவனுடைய சகோதரன் தன் சகோதரனுடைய பெயரை இஸ்ரவேலில் நிலைக்கச்செய்யமாட்டேன் என்கிறான்; கணவனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்ய அவன் விருப்பமில்லாதிருக்கிறான் என்று சொல்வாளாக.
8. அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர்கள் அவனை அழைத்து அவனுடன் பேசியும், அவன் அவளைத் திருமணம் செய்துகொள்ள எனக்குச் சம்மதமில்லை என்று பிடிவாதமாகச் சொன்னால்,
9. அவன் சகோதரனுடைய மனைவி மூப்பரின் கண்களுக்கு முன்பாக அவனிடத்தில் வந்து, அவன் காலிலிருக்கிற காலணியைக் கழற்றி, அவன் முகத்திலே துப்பி, தன் சகோதரன் வீட்டைக்கட்டாதவனுக்கு இப்படியே செய்யப்படவேண்டும் என்று சொல்லவேண்டும்.
10. இஸ்ரவேலில் அப்படிப்பட்டவன் வீடு, காலணி கழற்றிப்போடப்பட்டவன் வீடு என்னப்படும்.
11. “இரண்டு கணவன்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக்கொண்டிருக்கும்போது, ஒருவனுடைய மனைவி தன் கணவனை அடிக்கிறவன் கைக்கு அவனைத் தப்புவிக்க வந்து, தன் கையை நீட்டி, அடிக்கிறவனுடைய உயிர்நாடியைப் பிடித்ததுண்டானால்.,
12. அவளுடைய கையை வெட்டுவாயாக; உன் கண் அவளுக்கு இரங்கவேண்டாம்.
13. “உன் பையிலே பெரிதும் சிறிதுமான பலவித நிறைகற்களை வைத்திருக்கவேண்டாம்.
14. உன் வீட்டில் பெரிதும் சிறிதுமான பலவித படிகளையும் வைத்திருக்கவேண்டாம்.
15. உன் தேவனாகிய யெகோவா உனக்குக்கொடுக்கும் தேசத்தில் உன் நாட்கள் நீடித்திருப்பதற்காக, குறையற்ற சரியான நிறைகல்லும், குறையற்ற சரியான படியும் உன்னிடத்தில் இருக்கவேண்டும்.
16. இதுபோன்ற அநியாயத்தைச் செய்கிறவன் எவனும் உன் தேவனாகிய யெகோவாவுக்கு அருவருப்பானவன்.
17. “எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே, அமலேக்கு தேவனுக்குப் பயப்படாமல் உனக்கு எதிராக வந்து,
18. நீ இளைத்து சோர்ந்திருக்கும்போது, பின்வருகிற உன் முகாமிலுள்ள பலவீனரையெல்லாம் வெட்டினான் என்பதை நினைத்திரு.
19. உன் தேவனாகிய யெகோவா நீ சொந்தமாக்கிக்கொள்ள உனக்குக் கொடுக்கும் தேசத்தின் சுற்றுப்புறத்தாராகிய உன்னுடைய எதிரிகளையெல்லாம் உன் தேவனாகிய யெகோவா விலக்கி, உன்னை இளைப்பாறச்செய்யும்போது, நீ அமலேக்கியர்களின் பெயர் வானத்தின்கீழ் இராமல் அழித்துப்போடுவாயாக; இதை மறக்கவேண்டாம். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 34 Chapters, Current Chapter 25 of Total Chapters 34
உபாகமம் 25:46
1. {சகோதரனின் மனைவியைத் திருமணம் செய்தல்} PS “மனிதர்களுக்குள்ளே வழக்கு இருந்தால், அவர்கள் நியாயம் விசாரிக்கப்பட நீதிமன்றத்திற்கு வந்தால், நியாயாதிபதிகள் நீதிமானை நீதிமான் என்றும் குற்றவாளியைக் குற்றவாளி என்றும் நியாயம் தீர்க்கவேண்டும்.
2. குற்றவாளி அடிக்கப்பட தண்டனை பெற்றால், நியாயாதிபதி அவனைக் கீழே படுக்கச்செய்து, அவன் குற்றத்திற்குத்தக்கதாகத் தனக்கு முன்பாகக் கணக்கின்படி அவனை அடிப்பிக்கக்கடவன்.
3. அவனை நாற்பது அடிகள்வரைக்கும் அடிக்கலாம்; அவனை அதிலும் அதிகமாக அடிக்கிறதினால் உன் சகோதரன் உன் கண்களுக்கு முன்பாக அற்பமானவனாக காணப்படுவான்; ஆதலால் அவனை அதிகமாக அடிக்கவேண்டாம்.
4. “போரடிக்கிற மாட்டை வாய் கட்டாதே.
5. “சகோதரர்கள் ஒன்றாகக் குடியிருக்கும்போது, அவர்களில் ஒருவன் வாரிசு இல்லாமல் இறந்தால், இறந்தவனுடைய மனைவி வெளியிலிருக்கிற அந்நியனுக்கு மனைவியாகக்கூடாது; அவளுடைய கணவனின் சகோதரன் அவளைத் தனக்கு மனைவியாகக் கொண்டு, அவளிடத்தில் சேர்ந்து, கணவனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்.
6. இறந்த சகோதரனுடைய பெயர் இஸ்ரவேலில் மறைந்துபோகாதிருக்க, அவன் பெயரை அவள் பெறும் தலைமகனுக்கு வைக்கவேண்டும்.
7. அவன் தன் சகோதரனுடைய மனைவியைத் திருமணம்செய்ய விருப்பமில்லாதிருந்தால், அவன் சகோதரனுடைய மனைவி வாசலில் கூடிய மூப்பர்களிடத்திற்குப் போய், என் கணவனுடைய சகோதரன் தன் சகோதரனுடைய பெயரை இஸ்ரவேலில் நிலைக்கச்செய்யமாட்டேன் என்கிறான்; கணவனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்ய அவன் விருப்பமில்லாதிருக்கிறான் என்று சொல்வாளாக.
8. அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர்கள் அவனை அழைத்து அவனுடன் பேசியும், அவன் அவளைத் திருமணம் செய்துகொள்ள எனக்குச் சம்மதமில்லை என்று பிடிவாதமாகச் சொன்னால்,
9. அவன் சகோதரனுடைய மனைவி மூப்பரின் கண்களுக்கு முன்பாக அவனிடத்தில் வந்து, அவன் காலிலிருக்கிற காலணியைக் கழற்றி, அவன் முகத்திலே துப்பி, தன் சகோதரன் வீட்டைக்கட்டாதவனுக்கு இப்படியே செய்யப்படவேண்டும் என்று சொல்லவேண்டும்.
10. இஸ்ரவேலில் அப்படிப்பட்டவன் வீடு, காலணி கழற்றிப்போடப்பட்டவன் வீடு என்னப்படும்.
11. “இரண்டு கணவன்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக்கொண்டிருக்கும்போது, ஒருவனுடைய மனைவி தன் கணவனை அடிக்கிறவன் கைக்கு அவனைத் தப்புவிக்க வந்து, தன் கையை நீட்டி, அடிக்கிறவனுடைய உயிர்நாடியைப் பிடித்ததுண்டானால்.,
12. அவளுடைய கையை வெட்டுவாயாக; உன் கண் அவளுக்கு இரங்கவேண்டாம்.
13. “உன் பையிலே பெரிதும் சிறிதுமான பலவித நிறைகற்களை வைத்திருக்கவேண்டாம்.
14. உன் வீட்டில் பெரிதும் சிறிதுமான பலவித படிகளையும் வைத்திருக்கவேண்டாம்.
15. உன் தேவனாகிய யெகோவா உனக்குக்கொடுக்கும் தேசத்தில் உன் நாட்கள் நீடித்திருப்பதற்காக, குறையற்ற சரியான நிறைகல்லும், குறையற்ற சரியான படியும் உன்னிடத்தில் இருக்கவேண்டும்.
16. இதுபோன்ற அநியாயத்தைச் செய்கிறவன் எவனும் உன் தேவனாகிய யெகோவாவுக்கு அருவருப்பானவன்.
17. “எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே, அமலேக்கு தேவனுக்குப் பயப்படாமல் உனக்கு எதிராக வந்து,
18. நீ இளைத்து சோர்ந்திருக்கும்போது, பின்வருகிற உன் முகாமிலுள்ள பலவீனரையெல்லாம் வெட்டினான் என்பதை நினைத்திரு.
19. உன் தேவனாகிய யெகோவா நீ சொந்தமாக்கிக்கொள்ள உனக்குக் கொடுக்கும் தேசத்தின் சுற்றுப்புறத்தாராகிய உன்னுடைய எதிரிகளையெல்லாம் உன் தேவனாகிய யெகோவா விலக்கி, உன்னை இளைப்பாறச்செய்யும்போது, நீ அமலேக்கியர்களின் பெயர் வானத்தின்கீழ் இராமல் அழித்துப்போடுவாயாக; இதை மறக்கவேண்டாம். PE
Total 34 Chapters, Current Chapter 25 of Total Chapters 34
×

Alert

×

tamil Letters Keypad References