1. {ராணுவப்பிரிவுகள்} PS தங்கள் எண்ணிக்கையின்படி இருக்கிற இஸ்ரவேலர்களுக்கு வம்சங்களின் தலைவர்களும், ஆயிரம் பேர்களுக்கு தலைவர்களும், நூறு பேர்களுக்கு அதிபதிகளும் தலைவர்களும், இவர்களுடைய தலைவர்களும் வைக்கப்பட்டிருந்தார்கள்; இவர்கள் வருடத்தில் உண்டான மாதங்களிலெல்லாம் மாதத்திற்கு மாதம் ராஜாவிற்குப் பணிவிடை செய்வதற்கு பிரிக்கப்பட்ட வரிசைகளின்படியெல்லாம் மாறிமாறி வருவார்கள்; ஒவ்வொரு வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள்.
|
2. முதலாவது மாதத்திற்கு முதல் வகுப்பின்மேல் சப்தியேலின் மகன் யஷொபெயாம் இருந்தான்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள்.
|
4. இரண்டாவது மாதத்தின் வகுப்பின்மேல் அகோகியனான தோதாயி இருந்தான்; அவனுடைய வகுப்பிலே மிக்லோத் தகுதியில் இரண்டாவதாக இருந்தான்; அவனுடைய வகுப்பிலே இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள்.
|
5. மூன்றாவது மாதத்தின் மூன்றாம் தளபதி யோய்தாவின் மகனாகிய பெனாயா என்னும் ஆசாரியனும் தலைவனுமானவன்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள்.
|
6. இந்தப் பெனாயா அந்த முப்பது பலசாலிகளில் ஒருவனும் அந்த முப்பது பேர்களின் தலைவனுமாக இருந்தான்; அவனுடைய வகுப்பை அவனுடைய மகனாகிய அமிசபாத் விசாரித்தான்.
|
7. நான்காவது மாதத்தின் நான்காம் தளபதி யோவாபின் சகோதரனாகிய ஆசகேலும், அவனுக்குப்பின்பு அவனுடைய மகன் செப்தியாவுமே; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள்.
|
8. ஐந்தாவது மாதத்தின் ஐந்தாம் தளபதி இஸ்ராகியனான சம்கூத் என்பவன்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள்.
|
9. ஆறாவது மாதத்தின் ஆறாம் தளபதி இக்கேசின் மகன் ஈரா என்னும் தெக்கோவியன்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள்.
|
10. ஏழாவது மாதத்தின் ஏழாம் தளபதி எப்பிராயீம் மகன்களில் ஒருவனாகிய ஏலேஸ் என்னும் பெலோனியன்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள்.
|
11. எட்டாவது மாதத்தின் எட்டாம் தளபதி சேராகியர்களில் ஒருவனாகிய சிப்பெக்காய் என்னும் ஊசாத்தியன்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள்.
|
12. ஒன்பதாவது மாதத்தின் ஒன்பதாம் தளபதி பென்யமீனர்களில் அபியேசர் என்னும் ஆனதோத்தான்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள்.
|
13. பத்தாவது மாதத்தின் பத்தாம் தளபதி சேராகியர்களில் ஒருவனாகிய மகராயி என்னும் நெத்தோபாத்தியன்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள்.
|
14. பதினோராவது மாதத்தின் பதினோராம் தளபதி எப்பிராயீம் கோத்திரத்தில் பெனாயா என்னும் பிரத்தோனியன்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள்.
|
15. பன்னிரண்டாவது மாதத்தின் பன்னிரண்டாம் தளபதி ஒத்னியேல் சந்ததியான எல்தாயி என்னும் நெத்தோபாத்தியன்; அவனுடைய வகுப்பில் இருபத்து நான்காயிரம்பேர் இருந்தார்கள். PS
|
16. {கோத்திரத்தின் அலுவலர்கள்} PS இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவர்கள்: ரூபன் கோத்திரத்திற்குத் தலைவன் சிக்ரியின் மகன் எலியேசர்; சிமியோன் கோத்திரத்திற்கு மாக்காவின் மகன் செப்பத்தியா.
|
19. செபுலோன் கோத்திரத்திற்கு ஒப்தியாவின் மகன் இஸ்மாயா: நப்தலி கோத்திரத்திற்கு அஸ்ரியேலின் மகன் எரிமோத்.
|
20. எப்பிராயீம் கோத்திரத்திற்கு அசசியாவின் மகன் ஓசெயா; மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்கு பெதாயாவின் மகன் யோவேல்.
|
21. கீலேயாத்திலுள்ள மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்கு சகரியாவின் மகன் இத்தோ; பென்யமீனுக்கு அப்னேரின் மகன் யாசியேல்.
|
22. தாண் கோத்திரத்திற்கு எரோகாமின் மகன் அசாரியேல்; இவர்கள் இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவர்களாக இருந்தார்கள்.
|
23. இஸ்ரவேலை வானத்தின் நட்சத்திரங்கள்போல பெருகச்செய்வேன் என்று யெகோவா சொல்லியிருந்ததால், தாவீது இருபது வயதுமுதல் அதற்குக் கீழுள்ளவர்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கவில்லை.
|
24. செருயாவின் மகன் யோவாப் எண்ணத்துவங்கியும் முடிக்காமற்போனான்; அதற்காக இஸ்ரவேலின்மேல் கடுங்கோபம் வந்தது; ஆதலால் அந்த எண்ணிக்கை தாவீது ராஜாவின் நாளாகமக் கணக்கிலே எழுதப்படவில்லை. PS
|
25. {ராஜாக்களுடைய மேற்பார்வையாளர்கள்} PS ராஜாவுடைய பொக்கிஷங்களின்மேல் ஆதியேலின் மகன் அஸ்மாவேத்தும், பட்டணங்களிலும் கிராமங்களிலும் பாதுகாப்பான கோபுரங்களிலும் நிலத்தின் வருமான கருவூலங்களின்மேல் உசியாவின் மகன் யோனத்தானும்,
|
27. திராட்சைத்தோட்டங்களின்மேல் ராமாத்தியனான சீமேயும், திராட்சைத்தோட்டங்களின் பலனாகிய திராட்சைரசம் வைக்கும் இடங்களின்மேல் சிப்மியனாகிய சப்தியும்,
|
28. பள்ளத்தாக்குகளிலுள்ள ஒலிவமரங்களின்மேலும் முசுக்கட்டை மரங்களின்மேலும் கெதேரியனான பாகாலானானும், எண்ணெய் கிடங்குகளின்மேல் யோவாசும்,
|
29. சாரோனில் மேய்கிற மாடுகளின்மேல் சாரோனியனான சித்ராயும், பள்ளத்தாக்குகளிலுள்ள மாடுகளின்மேல் அத்லாயின் மகன் சாப்பாத்தும்,
|
31. ஆடுகளின்மேல் ஆகாரியனான யாசிசும் விசாரிப்புக்காரர்களாக இருந்தார்கள்; இவர்கள் எல்லோரும் தாவீது ராஜாவின் பொருட்களுக்கு விசாரிப்புக்காரர்களாக இருந்தார்கள்.
|
32. தாவீதின் சிறிய தகப்பனாகிய யோனத்தான் என்னும் புத்தியும் படிப்புமுள்ள மனிதன் ஆலோசனைக்காரனாக இருந்தான்; அக்மோனியின் மகன் யெகியேல் ராஜாவின் மகன்களோடு இருந்தான்.
|
34. பெனாயாவின் மகன் யோய்தாவும் அபியத்தாரும் அகித்தோப்பேலுக்கு உதவியாக இருந்தார்கள்; யோவாப் ராஜாவின் படைத்தலைவனாக இருந்தான். PE
|