1. {#1எருசலேம் பெண்கள் அவளிடம் பேசுகிறார்கள் } [QS]அழகான பெண்ணே [QE][QS2]உன் நேசர் எங்கே போனார்? [QE][QS]உன் நேசர் எந்த வழியாகப் போனார்? [QE][QS2]எங்களிடம் சொல். அவரைத் தேட உனக்கு உதவி செய்வோம். [QE]
2. {#1அவள் எருசலேம் பெண்களுக்கு பதிலளிக்கிறாள் } [QS]என் நேசர் கந்தவர்க்கப் பூக்களுக்காக தோட்டத்தில் மேய [QE][QS2]லீலி மலர்களைக் கொய்ய தன் தோட்டத்திற்குப் போனார். [QE]
3. [QS]நான் அவருக்குரியவள். அவர் எனக்குரியவர். [QE][QS2]அவர் லீலிகளை மேய்பவர். [QE]
4. {#1அவன் அவளிடம் பேசுகிறான் } [QS]என் அன்பே நீ திர்சாவைப்போன்று அழகானவள். [QE][QS2]எருசலேமைப்போன்று இனிமையானவள். [QE][QS2]நீ கம்பீரமான நகரங்களைப் போன்றவள். [QE]
5. [QS]என்னைப் பாராதே உன் கண்கள் என்னை வென்றுவிட்டன. [QE][QS2]உன் கூந்தல் கீலேயாத் மலைச் சரிவில் நடனமாடும் [QE][QS2]வெள்ளாட்டு மந்தையைப் போல் அசைந்துகொண்டிருக்கிறது. [QE]
6. [QS]உன் பற்கள் வெள்ளைப் பெண் ஆட்டுக் குட்டிகள் குளித்து கரையேறுவது போலுள்ளன. [QE][QS2]அவை இரட்டைக் குட்டிகள் போட்டு, [QE][QS2]எந்தக் குட்டியையும் இழக்காத ஆட்டினைப் போலுள்ளது. [QE]
7. [QS]உனது கன்னங்கள் முக்காட்டின் நடுவே வெட்டிவைக்கப்பட்ட [QE][QS2]மாதளம் பழங்களைப் போன்றுள்ளன. [QE][PBR]
8. [QS]அறுபது ராணிகள் இருக்கலாம் [QE][QS2]எண்பது மறுமனையாட்டிகள் இருக்கலாம். [QE][QS2]எண்ண முடியாத அளவிற்கு இளம் பெண்கள் இருக்கலாம். [QE]
9. [QS]ஆனால் எனக்காக ஒரே ஒரு பெண்ணே இருக்கிறாள். [QE][QS2]எனது புறாவே நீயே எனது பரிபூரணமானவள். [QE][QS]அவளே தன் தாய்க்கு மிகவும் பிரியமான மகள். [QE][QS2]அவளே தன்னைப் பெற்றவளால் மிகவும் நேசிக்கப்படுபவள். [QE][QS]இளம் பெண்கள் அவளைப் பார்த்து பாராட்டுகிறார்கள். [QE][QS2]ராணிகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் பாராட்டுகிறார்கள். [QE]
10. {#1பெண்கள் அவளைப் பாராட்டுகிறார்கள் } [QS]யார் இந்த இளம் பெண்? [QE][QS2]விடியலின் வானம் போல் பிரகாசிக்கிறாள். [QE][QS]நிலவைப் போல் அழகாக இருக்கிறாள். [QE][QS2]சூரியனைப்போல் ஒளி வீசுகிறாள். [QE][QS]வானத்தில் உள்ள படைகளைப்போல் [QE][QS2]கம்பீரமாக விளங்குகிறாள். [QE]
11. {#1அவன் அவளிடம் பேசுகிறான் } [QS]பள்ளத்தாக்குகளில் பழுத்த கனிகளையும், [QE][QS2]திராட்சைத் தோட்டத்தில் தோன்றிய துளிர்களையும் [QE][QS2]மதளஞ்செடிகளால் மலர்ந்த பூக்களையும் காண, [QE][QS2]நான் வாதுமைத் தோட்டத்திற்குப் போனேன். [QE]
12. [QS]நான் உணர்ந்துகொள்வதற்கு முன்பே, [QE][QS2]என் ஆத்துமா என்னை அரசர்களின் இரதங்களுக்குள் அமரச்செய்கிறது. [QE]
13. {#1எருசலேம் பெண்கள் அவளை அழைக்கிறார்கள் } [QS]திரும்பிவா சூலமித்தியே திரும்பிவா, [QE][QS2]திரும்பி வா, திரும்பிவா அப்பொழுதுதான் உன்னைப் பார்க்கமுடியும் [QE][QS]சூலமித்தியை நீங்கள் ஏன் பார்க்கிறீர்கள்? [QE][QS2]அவள் மகானனம் நடனம் ஆடுகிறாள். [QE]