1. {#1அவன் பேசுகிறான் } [QS]என் அன்பே! என் மணமகளே! நான் என் தோட்டத்திற்குள் நுழைந்தேன். [QE][QS2]நான் என் வெள்ளைப்போளங்களையும் கந்தவர்க்கங்களையும் சேகரித்தேன். [QE][QS]நான் எனது தேனை தேன் கூட்டோடு தின்றேன். [QE][QS2]நான் எனது திராட்சைரசத்தையும், பாலையும் குடித்தேன். [QE]
2. {#1பெண்கள் அன்பர்களிடம் பேசுகிறார்கள் } [QS]அன்பர்களே! உண்ணுங்கள், குடியுங்கள் அன்பின் [QE][QS2]போதை நிறைந்தவர்களாய் இருங்கள். [QE]{#1அவள் பேசுகிறாள் } [QS]நான் தூங்குகிறேன் [QE][QS2]ஆனால் என் இதயம் விழித்திருக்கிறது. [QE][QS]என் நேசர் தட்டுவதை நான் கேட்கிறேன். [QE][QS2]“எனக்காகத் திற என் இனியவளே என் அன்பே என் புறாவே, [QE][QS2]என் மாசற்ற அழகியே! [QE][QS]என் தலை பனியால் நனைந்துவிட்டது. [QE][QS2]என் தலைமயிர் இரவின் தூறலால் நனைந்துபோனது.” [QE]
3. [QS]“நான் என் ஆடையைக் கழற்றிப்போட்டேன். [QE][QS2]நான் அதனை மீண்டும் அணிந்துக்கொள்ள விரும்பவில்லை. [QE][QS]நான் என் பாதங்களைக் கழுவியிருக்கிறேன். [QE][QS2]அது மீண்டும் அழுக்காவதை நான் விரும்பவில்லை” [QE]
4. [QS]ஆனால் என் நேசர் தனது கையை கதவுத் துவாரத்தின்வழியாக நீட்டினார். [QE][QS2]நான் அவருக்காக வருத்தப்பட்டேன். [QE]
5. [QS]என் நேசருக்காகக் கதவைத் திறக்க எழுந்தேன். [QE][QS2]என் கையிலிருந்து வெள்ளைப்போளமும் என் விரல்களிலிருந்து [QE][QS2]வெள்ளைப்போளமும் வடிந்து கதவின் கைப்பிடிமீது வழிந்தது. [QE]
6. [QS]என் நேசருக்காகத் திறந்தேன் [QE][QS2]ஆனால் அவர் திரும்பிப் போய்விட்டார், அவர் இல்லை. [QE][QS]அவர் வந்துபோனபோது [QE][QS2]நான் ஏறக்குறைய மரித்தவள் போலானேன். [QE][QS]நான் அவரைத் தேடினேன் [QE][QS2]ஆனால் கண்டுப்பிடிக்க முடியவில்லை. [QE][QS]நான் அவரை அழைத்தேன் [QE][QS2]ஆனால் அவர் எனக்குப் பதில் சொல்லவில்லை. [QE]
7. [QS]நகரக் காவலர்கள் என்னைப் பார்த்தார்கள். [QE][QS2]அவர்கள் என்னை அடித்துக் காயப்படுத்தினர். [QE][QS]அந்தச் சுவரின்மேல் நின்ற காவலர்கள் [QE][QS2]என் முக்காட்டை எடுத்துக்கொண்டனர். [QE]
8. [QS]எருசலேமின் பெண்களே! நான் உங்களுக்குக் கூறுகிறேன் என் நேசரைக் [QE][QS2]கண்டால், நான் நேசத்தால் மெலிந்துகொண்டிருக்கிறேன் எனக் கூறுங்கள். [QE]
9. {#1எருசலேமின் பெண்கள் அவளுக்குப் பதில் கூறுகிறார்கள் } [QS]அழகான பெண்ணே, [QE][QS2]உன் அன்பர் மற்ற நேசர்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறார்? [QE][QS]உன் நேசர் மற்றவர்களைவிடச் சிறந்தவரா? [QE][QS2]எனவேதான் நீ எங்களிடம் இந்த வாக்குறுதியைக் கேட்கிறாயா? [QE]
10. {#1எருசலேம் பெண்களுக்கு அவள் பதில் கூறுகிறாள் } [QS]என் நேசர் சிவப்பானவர், வெண்மையானவர். [QE][QS2]பத்தாயிரம் பேரிலும் தனிச் சிறப்பானவர். [QE]
11. [QS]அவரது தலை சுத்தமான தங்கத்தைப்போன்றிருக்கும். [QE][QS2]அவரது தலைமுடி சுருளுடையதாயிருக்கும். [QE][QS2]அது காகத்தைப்போன்று கறுப்பாயிருக்கும். [QE]
12. [QS]அவரது கண்கள் நீரோடைகளின் அருகிலுள்ள புறாவின் கண்களைப் போலிருக்கும். [QE][QS2]பால் நிரம்பிய குளத்திலுள்ள புறாக்களைப் போலவும், [QE][QS2]பதிக்கப்பட்ட நகைபோலவும் இருக்கும். [QE]
13. [QS]அவரது கன்னங்கள் மணம்மிகுந்த வாசனைப் பூக்கள் நிறைந்த தோட்டம் போலிருக்கும். [QE][QS2]அவரது உதடுகள் லீலி மலர்களைப்போல் இருக்கும். [QE][QS2]அதிலிருந்து வெள்ளைப்போளம் வடியும். [QE]
14. [QS]அவரது கைகள் படிகப்பச்சை நகைகளால் அலங்கரிக்கப்பட்டது போலிருக்கும். [QE][QS2]அவரது உடல் மென்மையான தந்தம். [QE][QS2]இந்திர நீல இரத்தினங்கள் இழைத்ததுபோன்று இருக்கும். [QE]
15. [QS]அவரது கால்கள் பளிங்குத் தூண்கள் [QE][QS2]பொன் பீடத்தில் இருப்பதுபோல் இருக்கும். [QE][QS]அவர் நின்றால் [QE][QS2]லீபனோனில் நிற்கும் கேதுருமரம் போல் இருக்கும். [QE]
16. [QS]ஆம், எருசலேமின் பெண்களே! [QE][QS2]என் நேசர் மிகவும் விரும்பத்தக்கவர். [QE][QS2]அவரது வாய் இனிமையுள்ள அனைத்திலும் இனிமையானது. [QE][QS]இப்படிப்பட்டவரே என் நேசர் [QE][QS2]இத்தகையவரே என் நேசர். [QE][PBR]