1. {அவன் பேசுகிறான்} [PS] என் அன்பே! என் மணமகளே! நான் என் தோட்டத்திற்குள் நுழைந்தேன். [QBR2] நான் என் வெள்ளைப்போளங்களையும் கந்தவர்க்கங்களையும் சேகரித்தேன். [QBR] நான் எனது தேனை தேன் கூட்டோடு தின்றேன். [QBR2] நான் எனது திராட்சைரசத்தையும், பாலையும் குடித்தேன். அன்பர்களே! உண்ணுங்கள், குடியுங்கள் அன்பின் [QBR2] போதை நிறைந்தவர்களாய் இருங்கள். {அவள் பேசுகிறாள்}
2. {பெண்கள் அன்பர்களிடம் பேசுகிறார்கள்} [PS] நான் தூங்குகிறேன் [QBR2] ஆனால் என் இதயம் விழித்திருக்கிறது. [QBR] என் நேசர் தட்டுவதை நான் கேட்கிறேன். [QBR2] “எனக்காகத் திற என் இனியவளே என் அன்பே என் புறாவே, [QBR2] என் மாசற்ற அழகியே! [QBR] என் தலை பனியால் நனைந்துவிட்டது. [QBR2] என் தலைமயிர் இரவின் தூறலால் நனைந்துபோனது.” [QBR]
3. “நான் என் ஆடையைக் கழற்றிப்போட்டேன். [QBR2] நான் அதனை மீண்டும் அணிந்துக்கொள்ள விரும்பவில்லை. [QBR] நான் என் பாதங்களைக் கழுவியிருக்கிறேன். [QBR2] அது மீண்டும் அழுக்காவதை நான் விரும்பவில்லை” [QBR]
4. ஆனால் என் நேசர் தனது கையை கதவுத் துவாரத்தின்வழியாக நீட்டினார். [QBR2] நான் அவருக்காக வருத்தப்பட்டேன். [QBR]
5. என் நேசருக்காகக் கதவைத் திறக்க எழுந்தேன். [QBR2] என் கையிலிருந்து வெள்ளைப்போளமும் என் விரல்களிலிருந்து [QBR2] வெள்ளைப்போளமும் வடிந்து கதவின் கைப்பிடிமீது வழிந்தது. [QBR]
6. என் நேசருக்காகத் திறந்தேன் [QBR2] ஆனால் அவர் திரும்பிப் போய்விட்டார், அவர் இல்லை. [QBR] அவர் வந்துபோனபோது [QBR2] நான் ஏறக்குறைய மரித்தவள் போலானேன். [QBR] நான் அவரைத் தேடினேன் [QBR2] ஆனால் கண்டுப்பிடிக்க முடியவில்லை. [QBR] நான் அவரை அழைத்தேன் [QBR2] ஆனால் அவர் எனக்குப் பதில் சொல்லவில்லை. [QBR]
7. நகரக் காவலர்கள் என்னைப் பார்த்தார்கள். [QBR2] அவர்கள் என்னை அடித்துக் காயப்படுத்தினர். [QBR] அந்தச் சுவரின்மேல் நின்ற காவலர்கள் [QBR2] என் முக்காட்டை எடுத்துக்கொண்டனர். [QBR]
8. எருசலேமின் பெண்களே! நான் உங்களுக்குக் கூறுகிறேன் என் நேசரைக் [QBR2] கண்டால், நான் நேசத்தால் மெலிந்துகொண்டிருக்கிறேன் எனக் கூறுங்கள்.
9. {எருசலேமின் பெண்கள் அவளுக்குப் பதில் கூறுகிறார்கள்} [PS] அழகான பெண்ணே, [QBR2] உன் அன்பர் மற்ற நேசர்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறார்? [QBR] உன் நேசர் மற்றவர்களைவிடச் சிறந்தவரா? [QBR2] எனவேதான் நீ எங்களிடம் இந்த வாக்குறுதியைக் கேட்கிறாயா?
10. {எருசலேம் பெண்களுக்கு அவள் பதில் கூறுகிறாள்} [PS] என் நேசர் சிவப்பானவர், வெண்மையானவர். [QBR2] பத்தாயிரம் பேரிலும் தனிச் சிறப்பானவர். [QBR]
11. அவரது தலை சுத்தமான தங்கத்தைப்போன்றிருக்கும். [QBR2] அவரது தலைமுடி சுருளுடையதாயிருக்கும். [QBR2] அது காகத்தைப்போன்று கறுப்பாயிருக்கும். [QBR]
12. அவரது கண்கள் நீரோடைகளின் அருகிலுள்ள புறாவின் கண்களைப் போலிருக்கும். [QBR2] பால் நிரம்பிய குளத்திலுள்ள புறாக்களைப் போலவும், [QBR2] பதிக்கப்பட்ட நகைபோலவும் இருக்கும். [QBR]
13. அவரது கன்னங்கள் மணம்மிகுந்த வாசனைப் பூக்கள் நிறைந்த தோட்டம் போலிருக்கும். [QBR2] அவரது உதடுகள் லீலி மலர்களைப்போல் இருக்கும். [QBR2] அதிலிருந்து வெள்ளைப்போளம் வடியும். [QBR]
14. அவரது கைகள் படிகப்பச்சை நகைகளால் அலங்கரிக்கப்பட்டது போலிருக்கும். [QBR2] அவரது உடல் மென்மையான தந்தம். [QBR2] இந்திர நீல இரத்தினங்கள் இழைத்ததுபோன்று இருக்கும். [QBR]
15. அவரது கால்கள் பளிங்குத் தூண்கள் [QBR2] பொன் பீடத்தில் இருப்பதுபோல் இருக்கும். [QBR] அவர் நின்றால் [QBR2] லீபனோனில் நிற்கும் கேதுருமரம் போல் இருக்கும். [QBR]
16. ஆம், எருசலேமின் பெண்களே! [QBR2] என் நேசர் மிகவும் விரும்பத்தக்கவர். [QBR2] அவரது வாய் இனிமையுள்ள அனைத்திலும் இனிமையானது. [QBR] இப்படிப்பட்டவரே என் நேசர் [QBR2] இத்தகையவரே என் நேசர். [PE]