1. {#1அவள் பேசுகிறாள் } [QS]இரவில் என் படுக்கைமேல் [QE][QS2]நான் நேசருக்காகக் காத்திருக்கிறேன். [QE][QS]நான் அவருக்காக எதிர்பார்த்திருந்தேன். [QE][QS2]ஆனால் என்னால் அவரைக் கண்டு பிடிக்க இயலவில்லை. [QE]
2. [QS]இப்போது எழுந்திருந்து [QE][QS2]நான் நகரைச் சுற்றி வருவேன். [QE][QS]அங்குள்ள வீதிகளிலும் சந்துக்கங்களிலும் [QE][QS2]என் நேசரைத் தேடுவேன். [QE][QS]நான் அவருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன். [QE][QS2]ஆனால் என்னால் அவரைக் காணமுடியவில்லை. [QE]
3. [QS]நகர காவலர்கள் என்னைக் கண்டார்கள். [QE][QS2]நான் அவர்களிடம், “எனது நேசரைக் கண்டீர்களா?” எனக்கேட்டேன். [QE]
4. [QS]காவலர்கள் என்னைவிட்டுப் போனதும், [QE][QS2]நான் என் நேசரைக் கண்டுபிடித்தேன். [QE][QS]அவரைப் பற்றிக் கொண்டேன். [QE][QS2]என் தாய் வீட்டில் என்னைப் பெற்றெடுத்த, என் தாயின் அறைக்கு அவரை நான் அழைத்துச் செல்லும்வரை நான் அவரைப் போகவிடவில்லை. [QE]
5. {#1அவள் பெண்களோடு பேசுகிறாள் } [QS]எருசலேமின் பெண்களே, நான் தயாராகும்வரை, [QE][QS2]என் அன்பை விழிக்கச் செய்து எழுப்பாமலிருக்க மான்களின் மீதும் மான்குட்டிகளின் மீதும் வாக்குறுதி கொடுங்கள். [QE]
6. {#1அவனும் அவனது மணப்பெண்ணும் } [QS][+ பெரும் ஜனங்கள் கூட்டத்தோடு] [QE][QS2]வனாந்தரத்திலிருந்து வருகின்ற அந்தப் பெண் யார்? [QE][QS]மேகங்களின் கூட்டத்தைப்போல வெள்ளைப் போளத்திலும், [QE][QS2]சாம்பிராணியிலும், சகல நறுமணத்திலும், [QE][QS2]வரும் புகைபோல அவர்களுக்குப் பின்னால் புழுதி எழும்புகிறது. [QE][PBR]
7. [QS]பார், சாலொமோனின் இந்தப் பல்லக்கு இஸ்ரவேலின் பலம்வாய்ந்த [QE][QS2]60 வீரர்கள் அதனைச் சுற்றிப் பாதுகாத்து நிற்கிறார்கள். [QE]
8. [QS]அவர்கள் அனைவரும் போர்ப் பயிற்சி பெற்றவர்கள். [QE][QS2]அவர்களின் இடுப்பில் வாள்கள் உள்ளன. [QE][QS2]இரவில் எந்த ஆபத்துக்கும் தயாராக உள்ளனர். [QE][PBR]
9. [QS]சாலொமோன் அரசன் தனக்காக ஒரு பல்லக்கு செய்திருக்கிறான். [QE][QS2]அதற்கான மரம் லீபனோனில் இருந்து கொண்டுவரப்பட்டது. [QE]
10. [QS]அதன் தூண்கள் வெள்ளியால் ஆனது. [QE][QS2]அதன் இருக்கை நீலங்கலந்த சிவப்பு நிறமான துணியால் மூடப்பட்டிருந்தது. [QE][QS2]எருசலேமின் பெண்கள் அதன் உட்பகுதியை மிகப் பிரியத்தோடு அன்பால் அலங்கரித்திருக்கிறார்கள். [QE][PBR]
11. [QS]சீயோனின் பெண்களே! வெளியே வாருங்கள். [QE][QS2]சாலொமோன் அரசனைப் பாருங்கள். [QE][QS]திருமண நாளில் அவனது தலைமேல் அவன் தாய் அணிவித்த கிரீடத்தை பாருங்கள். [QE][QS2]அந்த நாளில் அவன் மிகுந்த சந்தோஷமாய் இருந்தான். [QE]