தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ERV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. கர்த்தர் அரசர். [QBR2] எனவே தேசங்கள் அச்சத்தால் நடுங்கட்டும். [QBR] கேருபீன் தூதர்களுக்கு மேலே தேவன் அரசராக வீற்றிருக்கிறார். [QBR2] எனவே உலகம் அச்சத்தால் நடுங்கட்டும். [QBR]
2. சீயோனில் கர்த்தர் மேன்மையானவர். [QBR2] ஜனங்கள் எல்லோருக்கும் அவர் பெரிய தலைவர். [QBR]
3. எல்லா ஜனங்களும் உமது நாமத்தைத் துதிக்கட்டும். [QBR2] தேவனுடைய நாமம் அஞ்சத்தக்கது. [QBR2] தேவன் பரிசுத்தர். [QBR]
4. வல்லமையுள்ள அரசர் நீதியை நேசிக்கிறார். [QBR2] தேவனே, நீரே நன்மையை உண்டாக்கினீர். [QBR2] யாக்கோபிற்கு (இஸ்ரவேல்) நீர் நன்மையையும் நியாயத்தையும் தந்தீர். [QBR]
5. நமது தேவனாகிய கர்த்தரைத் துதியுங்கள். [QBR2] அவரது பரிசுத்த பாதப்படியில் தொழுதுகொள்ளுங்கள். [QBR]
6. மோசேயும் ஆரோனும் அவரது ஆசாரியர்களில் இருவர். [QBR2] அவர் நாமத்தை அழைத்த மனிதர்களில் சாமுவேலும் ஒருவன். [QBR] அவர்கள் கர்த்தரிடம் ஜெபித்தபோது [QBR2] அவர் அவர்களுக்குப் பதில் தந்தார். [QBR]
7. உயர்ந்த மேகத்திலிருந்து தேவன் பேசினார். [QBR2] அவர்கள் அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தார்கள். [QBR2] தேவன் அவர்களுக்குச் சட்டத்தைக் கொடுத்தார். [QBR]
8. எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் அவர்கள் ஜெபங்களுக்குப் பதில் தந்தீர். [QBR2] ஜனங்கள் செய்யும் தீய காரியங்களுக்கு அவர்களைத் தண்டிப்பவர் என்பதையும், [QBR2] மன்னிக்கும் தேவன் நீரே என்பதையும் அவர்களுக்கு நீர் காட்டினீர். [QBR]
9. நமது தேவனாகிய கர்த்தரைத் துதியுங்கள். [QBR2] அவரது பரிசுத்த மலையை நோக்கி விழுந்து வணங்கி அவரைத் தொழுதுகொள்ளுங்கள். [QBR2] நமது தேவனாகிய கர்த்தர் உண்மையிலேயே பரிசுத்தர். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 99 / 150
சங்கீதம் 99:133
1 கர்த்தர் அரசர். எனவே தேசங்கள் அச்சத்தால் நடுங்கட்டும். கேருபீன் தூதர்களுக்கு மேலே தேவன் அரசராக வீற்றிருக்கிறார். எனவே உலகம் அச்சத்தால் நடுங்கட்டும். 2 சீயோனில் கர்த்தர் மேன்மையானவர். ஜனங்கள் எல்லோருக்கும் அவர் பெரிய தலைவர். 3 எல்லா ஜனங்களும் உமது நாமத்தைத் துதிக்கட்டும். தேவனுடைய நாமம் அஞ்சத்தக்கது. தேவன் பரிசுத்தர். 4 வல்லமையுள்ள அரசர் நீதியை நேசிக்கிறார். தேவனே, நீரே நன்மையை உண்டாக்கினீர். யாக்கோபிற்கு (இஸ்ரவேல்) நீர் நன்மையையும் நியாயத்தையும் தந்தீர். 5 நமது தேவனாகிய கர்த்தரைத் துதியுங்கள். அவரது பரிசுத்த பாதப்படியில் தொழுதுகொள்ளுங்கள். 6 மோசேயும் ஆரோனும் அவரது ஆசாரியர்களில் இருவர். அவர் நாமத்தை அழைத்த மனிதர்களில் சாமுவேலும் ஒருவன். அவர்கள் கர்த்தரிடம் ஜெபித்தபோது அவர் அவர்களுக்குப் பதில் தந்தார். 7 உயர்ந்த மேகத்திலிருந்து தேவன் பேசினார். அவர்கள் அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தார்கள். தேவன் அவர்களுக்குச் சட்டத்தைக் கொடுத்தார். 8 எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் அவர்கள் ஜெபங்களுக்குப் பதில் தந்தீர். ஜனங்கள் செய்யும் தீய காரியங்களுக்கு அவர்களைத் தண்டிப்பவர் என்பதையும், மன்னிக்கும் தேவன் நீரே என்பதையும் அவர்களுக்கு நீர் காட்டினீர். 9 நமது தேவனாகிய கர்த்தரைத் துதியுங்கள். அவரது பரிசுத்த மலையை நோக்கி விழுந்து வணங்கி அவரைத் தொழுதுகொள்ளுங்கள். நமது தேவனாகிய கர்த்தர் உண்மையிலேயே பரிசுத்தர்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 99 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References