1. {#2ஒரு துதிப்பாடல் } [QS]புதிய வியக்கத்தக்க காரியங்களைச் செய்ததால் [QE][QS2]கர்த்தருக்கு புதுப்பாட்டைப் பாடுங்கள். [QE][QS]அவரது பரிசுத்த வலது கை [QE][QS2]மீண்டும் அவருக்கு வெற்றியைத் தரும். [QE]
2. [QS]கர்த்தர் தமது மீட்பின் வல்லமையை தேசங்களுக்குக் காட்டினார். [QE][QS2]கர்த்தர் அவர்களுக்குத் தமது நன்மையைக் காட்டினார். [QE]
3. [QS]இஸ்ரவேலரிடம் தேவன் காட்டிய உண்மையை அவரைப் பின்பற்றுவோர் நினைவு கூர்ந்தனர். [QE][QS2]தூர தேசத்து ஜனங்கள் நம் தேவனுடைய மீட்பின் வல்லமையைக் கண்டனர். [QE]
4. [QS]பூமியிலுள்ள ஒவ்வொருவரும் கர்த்தரை நோக்கிக் களிப்போடு சத்தமிடுங்கள். [QE][QS2]துதிப்பாடல்களைப் பாடத் தொடங்குங்கள். [QE]
5. [QS]சுரமண்டலங்களே, கர்த்தரைத் துதியுங்கள். [QE][QS2]சுரமண்டலங்களின் இசையே, அவரைத் துதியுங்கள். [QE]
6. [QS]எக்காளங்களையும் மற்றும் கொம்புகளையும் ஊதுங்கள். [QE][QS2]எங்கள் அரசராகிய கர்த்தரைக் களிப்போடு ஆர்ப்பரியுங்கள். [QE]
7. [QS]கடலும், பூமியும் [QE][QS2]அவற்றிலுள்ளவை யாவும் உரக்கப் பாடட்டும். [QE]
8. [QS]ஆறுகளே, கைகளைத் தட்டுங்கள். [QE][QS2]எல்லா மலைகளும் இணைந்து பாடுங்கள்! [QE]
9. [QS]கர்த்தர் உலகை ஆளுகை செய்ய வருவதால் அவருக்கு முன்பாகப் பாடுங்கள். [QE][QS2]அவர் உலகை நியாயமாக ஆளுகை செய்வார். [QE][QS2]அவர் ஜனங்களை நன்மையோடு அரசாள்வார். [QE][PBR]