1. [QS]கர்த்தர் ஆளுகிறார், பூமி மகிழும். [QE][QS2]தூரத்துத் தேசங்கள் எல்லாம் மகிழ்கின்றன. [QE]
2. [QS]அடர்ந்த இருண்ட மேகங்கள் கர்த்தரைச் சூழும். [QE][QS2]நன்மையும் நீதியும் அவர் அரசை வலிமையாக்கும். [QE]
3. [QS]கர்த்தருக்கு முன்னே ஒரு அக்கினி செல்கிறது, [QE][QS2]அது பகைவரை அழிக்கிறது. [QE]
4. [QS]வானத்தில் அவரது மின்னல் மின்னுகிறது. [QE][QS2]ஜனங்கள் அதைக் கண்டு அஞ்சுகிறார்கள். [QE]
5. [QS]கர்த்தருக்கு முன்பு மலைகள் மெழுகு போல உருகும். [QE][QS2]பூமியின் ஆண்டவருக்கு முன்பாக அவை உருகும். [QE]
6. [QS]வானங்களே, அவரது நம்மையைக் கூறுங்கள்! [QE][QS2]ஒவ்வொருவரும் தேவனுடைய மகிமையைக் காணட்டும்! [QE][PBR]
7. [QS]ஜனங்கள் அவர்களது விக்கிரகங்களை தொழுதுகொள்கிறார்கள். [QE][QS2]அவர்கள் தங்கள் “தெய்வங்களைப்” பற்றிப் பெருமைப்படுகிறார்கள். [QE][QS]ஆனால் அந்த ஜனங்கள் வெட்கமடைவார்கள். [QE][QS2]அவர்கள் “தெய்வங்கள்” குனிந்து வணங்கி கர்த்தரைத் தொழுதுகொள்வார்கள். [QE]
8. [QS]சீயோனே, செவிக்கொடுத்து மகிழ்வாயாக! [QE][QS2]யூதாவின் நகரங்களே, மகிழ்ச்சிக்கொள்ளுங்கள்! [QE][QS2]ஏனெனில் கர்த்தர் ஞானமுள்ள முடிவுகளை எடுக்கிறார். [QE]
9. [QS]மகா உன்னதமான தேவனே, மெய்யாகவே நீரே பூமியின் அரசர். [QE][QS2]பிற தெய்வங்களைக் காட்டிலும் நீர் மகத்துவமுள்ளவர். [QE]
10. [QS]கர்த்தரை நேசிக்கும் ஜனங்கள் தீமையை வெறுப்பார்கள். [QE][QS2]எனவே தேவன் தம்மைப் பின்பற்றுவோரைக் காப்பாற்றுகிறார். [QE][QS2]தீயோரிடமிருந்து தேவன் தம்மைப் பின்பற்றுவோரைக் காப்பாற்றுகிறார். [QE]
11. [QS]நல்லோர் மீது ஒளியும், மகிழ்ச்சியும் பிரகாசிக்கும். [QE]
12. [QS]நல்லோரே, கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருங்கள்! [QE][QS2]அவரது பரிசுத்த நாமத்தை பெருமைப்படுத்துங்கள்! [QE]