1. [QS]கர்த்தர் செய்த புதுகாரியங்களைப்பற்றி ஒரு புதுப்பாடலைப் பாடுங்கள்! [QE][QS2]உலகம் முழுவதும் கர்த்தரை நோக்கிப் பாடட்டும். [QE]
2. [QS]கர்த்தரை நோக்கிப் பாடுங்கள்! [QE][QS2]அவரது நாமத்தை ஸ்தோத்தரியுங்கள்! [QE][QS2]ஒவ்வொரு நாளும் அவர் நம்மை பாதுகாப்பதைப் பற்றிச் சொல்லுங்கள்! [QE]
3. [QS]தேவன் உண்மையிலேயே அற்புதமானவர் என்பதை ஜனங்களுக்குக் கூறுங்கள். [QE][QS2]தேவன் செய்கிற வியப்பிற்குரிய காரியங்களை எங்குமுள்ள ஜனங்களுக்குச் சொல்லுங்கள். [QE]
4. [QS]கர்த்தர் மேன்மையானவர், துதிகளுக்குரியவர். [QE][QS2]வேறெந்த “தெய்வங்களைக்” காட்டிலும் அவர் அஞ்சத்தக்கவர். [QE]
5. [QS]பிற தேசங்களின் “தெய்வங்கள்” எல்லாரும் வெறும் சிலைகளே. [QE][QS2]ஆனால் கர்த்தரோ வானங்களை உண்டாகினவர். [QE]
6. [QS]அவருக்கு முன்னே அழகிய மகிமை ஒளி வீசும். [QE][QS2]தேவனுடைய பரிசுத்த ஆலயத்தில் பெலனும் அழகும் விளங்கும். [QE]
7. [QS]குடும்பங்களும் தேசங்களும் [QE][QS2]கர்த்தருக்கு மகிமையும், துதியும் நிரம்பிய பாடல்களைப் பாடுவார்கள். [QE]
8. [QS]கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள். [QE][QS2]உங்கள் காணிக்கைகளோடு ஆலயத்திற்குச் செல்லுங்கள். [QE]
[QS2]9. கர்த்தருடைய அழகான ஆலயத்தில் அவரைத் தொழுதுகொள்ளுங்கள். [QE][QS]கர்த்தரைப் பூமியிலுள்ள ஒவ்வொருவரும் தொழுதுகொள்ளுங்கள். [QE]
[QS2]10. கர்த்தரே அரசரென்று தேசங்களுக்கெல்லாம் அறிவியுங்கள்! [QE][QS]அதனால் உலகம் அழிக்கப்படுவதில்லை. [QE][QS2]கர்த்தர் ஜனங்களை நியாயமாக அரசாளுவார். [QE]
11. [QS]விண்ணுலகங்களே! [QE][QS2]மகிழ்ச்சிகொள்ளுங்கள். [QE][QS]பூமியே! களிகூரு. [QE][QS2]கடலும் அதிலுள்ளவையும் களிப்பால் குரல் எழுப்பட்டும்! [QE]
12. [QS]வயல்களும் அதில் விளைந்துள்ள அனைத்தும் மகிழ்ச்சிகொள்ளட்டும்! [QE][QS2]வனத்தின் மரங்களே, பாடி மகிழுங்கள்! [QE]
13. [QS]கர்த்தர் வருகிறார் ஆதலால் மகிழ்ச்சியடையுங்கள். [QE][QS2]கர்த்தர் உலகை ஆளுகை செய்ய வந்துகொண்டிருக்கிறார். [QE][QS]நீதியோடும் நியாயத்தோடும் [QE][QS2]அவர் உலகை ஆளுகை செய்வார். [QE][PBR]