1. [QS]வாருங்கள், நாம் கர்த்தரைத் துதிப்போம்! [QE][QS2]நம்மைக் காப்பாற்றுகின்ற பாறையை நோக்கி துதிகளை உரக்கக் கூறுவோம். [QE]
2. [QS]கர்த்தருக்கு நன்றி கூறும் பாடல்களைப் பாடுவோம். [QE][QS2]அவருக்கு மகிழ்ச்சியான துதி பாடல்களைப் பாடுவோம். [QE]
3. [QS]ஏனெனில் கர்த்தர் மேன்மையான தேவன்! [QE][QS2]பிற “தெய்வங்களை” எல்லாம் ஆளுகின்ற பேரரசர் ஆவார். [QE]
4. [QS]ஆழமான குகைகளும் உயரமான பர்வதங்களும் கர்த்தருக்கு உரியவை. [QE]
5. [QS]சமுத்திரம் அவருடையது. அவரே அதைப் படைத்தார். [QE][QS2]தேவன் உலர்ந்த நிலத்தைத் தமது சொந்த கைகளால் உண்டாக்கினார். [QE]
6. [QS]வாருங்கள், நாம் தாழ்ந்து குனிந்து அவரைத் தொழுதுகொள்வோம். [QE][QS2]நம்மை உண்டாக்கின தேவனை நாம் துதிப்போம். [QE]
7. [QS]அவரே நமது தேவன்! [QE][QS2]நாம் அவரது ஜனங்கள். [QE][QS2]அவரது சத்தத்திற்கு நாம் செவிகொடுத்தால் இன்று நாம் அவரது ஆடுகளாயிருப்போம். [QE]
[QS2]8. தேவன்: “பாலைவனத்தில் மேரிபாவில் செய்தது போலவும், மாசாவில் செய்தது போலவும் அடம்பிடிக்காதீர்கள்” என்று கூறினார். [QE]
9. [QS]உங்கள் முற்பிதாக்கள் என்னை சோதித்தார்கள். [QE][QS2]அவர்கள் என்னை சோதித்தபோது நான் செய்யக்கூடியவற்றைக் கண்டார்கள். [QE]
10. [QS]நாற்பது ஆண்டுகள் அந்த ஜனங்களிடம் நான் பொறுமையாக இருந்தேன். [QE][QS2]அவர்கள் உண்மையில்லாதவர்கள் என நான் அறிவேன். [QE][QS2]அந்த ஜனங்கள் என் போதனைகளைப் பின்பற்ற மறுத்தார்கள். [QE]
11. [QS]எனவே நான் கோபமடைந்தேன், [QE][QS2]எனது இளைப்பாறுதலின் தேசத்தில் அவர்கள் நுழைவதில்லை என ஆணையிட்டேன். [QE][PBR]