1. கர்த்தாவே, நீர் ஜனங்களைத் தண்டிக்கும் தேவன். [QBR2] நீர் வருகிறவரும் ஜனங்களுக்குத் தண்டனையைத் தருகிறவருமான தேவன். [QBR]
2. நீர் முழு பூமிக்கும் நீதிபதி. [QBR2] பெருமையுடைய ஜனங்களுக்கு, அவர்களுக்குரிய தண்டனையைக் கொடும். [QBR]
3. கர்த்தாவே, எத்தனை காலம் தீயவர்கள் கேளிக்கைகளில் திளைத்திருப்பார்கள்? [QBR]
4. எதுவரைக்கும் அக்குற்றவாளிகள் [QBR2] அவர்கள் செய்த தீய காரியங்களைப்பற்றிப் பெருமை பாராட்டுவார்கள்? [QBR]
5. கர்த்தாவே, அவர்கள் உமது ஜனங்களைத் தாக்குகிறார்கள். [QBR2] உமது ஜனங்கள் துன்புறும்படி அவர்கள் செய்கிறார்கள். [QBR]
6. அத்தீயோர் விதவைகளையும் இத்தேசத்தைப் பார்க்க வருவோரையும் கொல்கிறார்கள். [QBR2] பெற்றோரில்லாத பிள்ளைகளை அவர்கள் கொலை செய்கிறார்கள். [QBR]
7. அவர்கள் அத்தீயக் காரியங்களைச் செய்வதைக் கர்த்தர் பார்ப்பதில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள். [QBR2] நிகழ்வதை இஸ்ரவேலின் தேவன் அறியார் என்று அவர்கள் சொல்கிறார்கள்.
8. தீய ஜனங்களாகிய நீங்கள் மூடர்கள். [QBR2] நீங்கள் எப்போது உங்கள் பாடத்தைக் கற்பீர்கள்? [QBR] கொடிய ஜனங்களாகிய நீங்கள் அறிவில்லாதவர்கள்! [QBR2] நீங்கள் புரிந்துகொள்ள முயலவேண்டும். [QBR]
9. தேவன் நமது காதுகளை உண்டாகினார். [QBR2] நிச்சயமாக அவருக்கும் காதுகள் உள்ளன. [QBR] அவரால் நிகழ்வதைக் கேட்கமுடியும்! [QBR2] தேவன் நமது கண்களை உண்டாக்கினார். [QBR] நிச்சயமாக அவருக்கும் கண்கள் உள்ளன. [QBR2] அவரால் நிகழ்வதைக் காணமுடியும்! [QBR]
10. தேவன் அந்த ஜனங்களை ஒழுங்குபடுத்துவார். [QBR2] தேவன் அவர்கள் செய்ய வேண்டியவற்றை அவர்களுக்குக் கற்பிப்பார். [QBR]
11. ஜனங்கள் நினைப்பதை தேவன் அறிகிறார். [QBR2] வெளிப்படும் சிறிய அளவு காற்றைப்போன்றவர்கள் ஜனங்கள் என்பதை தேவன் அறிகிறார்.
12. கர்த்தர் ஒழுங்குபடுத்தும் மனிதன் மகிழ்ச்சியாயிருப்பான். [QBR2] சரியான வழியில் வாழ்வதற்கு தேவன் அவனுக்குக் கற்பிப்பார். [QBR]
13. தேவனே, குழப்பம் நேருகையில் அவன் அமைதியாயிருக்க நீர் அவனுக்கு உதவுவீர். [QBR2] தீயோர் கல்லறைக்குள் வைக்கப்படும்வரை அவன் அமைதியாயிருக்க நீர் அவனுக்கு உதவுவீர். [QBR]
14. கர்த்தர் அவரது ஜனங்களை விட்டு விலகுவதில்லை. [QBR2] உதவியின்றி அவரது ஜனங்களை அவர் விட்டுவிடுவதில்லை. [QBR]
15. நீதி திரும்பும், அது நியாயத்தைக் கொண்டு வரும், [QBR2] அப்போது நல்ல, உண்மையான ஜனங்கள் வாழ்வர்கள்.
16. தீயோரை எதிர்ப்பதற்கு ஒருவனும் உதவவில்லை. [QBR2] தீமை செய்வோரை எதிர்க்கும்போது ஒருவனும் எனக்குத் துணைவரவில்லை. [QBR]
17. கர்த்தர் எனக்கு உதவியிராவிட்டால் [QBR2] நான் மரணத்தினால் மௌனமாக்கப்பட்டிருப்பேன்! [QBR]
18. நான் விழத்தயாராயிருப்பதை அறிகிறேன், [QBR2] ஆனால் கர்த்தர் தம்மைப் பின்பற்றுபவனுக்கு உதவுகிறார். [QBR]
19. நான் கவலையடைந்து கலங்கியிருந்தேன். [QBR2] ஆனால் கர்த்தாவே, நீர் எனக்கு ஆறுதல் கூறி எனக்கு மகிழ்ச்சியளித்தீர்.
20. தேவனே, நீர் அநீதியுள்ள நீதிபதிகளுக்கு உதவுவதில்லை. [QBR2] ஜனங்களின் வாழ்க்கை கடினமாவதற்கு அத்தீய நீதிபதிகள் சட்டங்களைப் பயன்படுத்துகிறார்கள். [QBR]
21. அந்நீதிபதிகள் நல்லோரைத் தாக்குகிறார்கள். [QBR2] களங்கமற்ற ஜனங்களைக் குற்றவாளிகள் எனக் கூறி, அவர்களைக் கொல்கிறார்கள். [QBR]
22. ஆனால் உயரமான பர்வதங்களில் கர்த்தர் எனக்குப் பாதுகாப்பிடம். [QBR2] என் கன்மலையான தேவன் என் பாதுகாப்பிடம். [QBR]
23. அத்தீய நீதிபதிகள் செய்த தீய காரியங்களுக்காக தேவன் அவர்களைத் தண்டிப்பார். [QBR2] அவர்கள் பாவம் செய்ததால் தேவன் அவர்களை அழிப்பார். [QBR2] எங்கள் தேவனாகிய கர்த்தர் அத்தீய நீதிபதிகளை அழிப்பார். [PE]