1. கர்த்தர் அரசர். [QBR2] அவர் மகத்துவத்தையும் வல்லமையையும் ஆடையைப்போல் அணிந்திருக்கிறார். [QBR] அவர் ஆயத்தமாயிருப்பதால் உலகம் பாதுகாப்பாய் உள்ளது, [QBR2] அது அசைக்கப்படுவதில்லை. [QBR]
2. தேவனே, உமது அரசு என்றென்றும் தொடருகிறது. [QBR2] தேவனே, நீர் என்றென்றைக்கும் வாழ்கிறீர்! [QBR]
3. கர்த்தாவே, ஆறுகளின் ஒலி மிகுந்த இரைச்சலுடையது. [QBR2] மோதும் அலைகள் இரைச்சலெழுப்புகின்றன. [QBR]
4. கடலின் மோதும் அலைகள் ஒலிமிகுந்து வல்லமை மிகுந்தவையாக உள்ளன. [QBR2] ஆனால் மேலேயுள்ள கர்த்தர் இன்னும் மிகுந்த வல்லமையுள்ளவர். [QBR]
5. கர்த்தாவே, உமது சட்டங்கள் என்றென்றும் தொடரும். [QBR2] உமது பரிசுத்த ஆலயம் வெகு காலம் நிலைநிற்கும். [PE]