1. {#2ஓய்வு நாளின் துதிப்பாடல் } [QS]மிக உன்னதமான தேவனாகிய கர்த்தரைத் துதிப்பது நல்லது. [QE][QS2]உமது நாமத்தைத் துதிப்பது நல்லது. [QE]
2. [QS]காலையில் உமது அன்பைப்பற்றியும் [QE][QS2]இரவில் உமது நம்பிக்கையைப் பற்றியும் பாடுவது நல்லது. [QE]
3. [QS]தேவனே பத்து நரம்பு வாத்தியங்களாலும், வீணையினாலும், தம்புருவினாலும், [QE][QS2]இசை மீட்டி உம்மைப் பாடுவது நல்லது. [QE]
4. [QS]கர்த்தாவே, நீர் செய்த காரியங்களால் எங்களை உண்மையாகவே மகிழ்ச்சிப்படுத்துகிறீர். [QE][QS2]அக்காரியங்களைக் குறித்து நாங்கள் சந்தோஷமாகப் பாடுவோம். [QE]
5. [QS]கர்த்தாவே, நீர் மேன்மையான காரியங்களைச் செய்தீர். [QE][QS2]உமது எண்ணங்களை எங்களால் புரிந்துகொள்ள முடியாது. [QE]
6. [QS]உம்மோடு ஒப்பிடுகையில் ஜனங்கள் மூடமிருகங்களைப்போல் இருக்கிறார்கள். [QE][QS2]நாங்கள் எதையும் புரிந்துகொள்ள முடியாத மூடர்களைப்போல் இருக்கிறோம். [QE]
7. [QS]களைகளைப்போல் தீயோர் வாழ்ந்து மறைகிறார்கள். [QE][QS2]அவர்கள் செய்யும் பயனற்ற காரியங்களே என்றென்றும் அழிக்கப்படும். [QE]
8. [QS]ஆனால் தேவனே, நீர் என்றென்றும் மகிமைப்படுத்தப்படுவீர். [QE]
9. [QS]கர்த்தாவே, உமது பகைவர்கள் எல்லோரும் அழிக்கப்படுவார்கள். [QE][QS2]தீயவை செய்யும் எல்லா ஜனங்களும் அழிக்கப்படுவார்கள். [QE]
10. [QS]ஆனால் நீர் என்னைப் பெலனுடையவனாகச் செய்கிறீர். [QE][QS2]பலத்த கொம்புகளையுடைய ஆட்டைப் போலாவேன். [QE][QS]விசேஷ வேலைக்காக நீர் என்னைத் தேர்ந்தெடுத்தீர். [QE][QS2]உமது புது எண்ணெயை என்மீது ஊற்றினீர். [QE]
11. [QS]என் பகைவர்களை என்னைச் சுற்றிலும் காண்கிறேன். [QE][QS2]என்னைத் தாக்க வருகிற பெருங்காளைகளைப் போல அவர்கள் காணப்படுகிறார்கள். [QE][QS2]அவர்கள் என்னைக் குறித்துச் சொல்பவற்றை நான் கேட்கிறேன். [QE][PBR]
12. [QS](12-13)செழிப்பாக வளருகின்ற பனைமரத்தைப் போல் நீதிமான் இருப்பான். [QE][QS2]லீபனோனின் கேதுரு மரத்தைப்போல் நல்லவன் இருப்பான். [QE][QS]கர்த்தருடைய ஆலயத்தில் நடப்பட்ட மரங்களைப்போல் நல்லோர் வலிமையுடன் இருப்பார்கள். [QE][QS2]தேவனுடைய ஆலய முற்றத்தில் அவர்கள் வலிமையோடு வளருவார்கள். [QE]
13.
14. [QS]வயது முதிர்ந்தபோதும் அவர்கள் தொடர்ந்து கனிகளைத் தருவார்கள். [QE][QS2]அவர்கள் செழுமையும், பசுமையுமான மரங்களைப்போல் இருப்பார்கள். [QE]
15. [QS]கர்த்தர் நல்லவர் என்பதை எல்லோருக்கும் காண்பிப்பார்கள். [QE][QS2]அவர் என் பாறை அவர் ஒருபோதும் தீமை செய்வதில்லை. [QE][PBR]