1. {ஓய்வு நாளின் துதிப்பாடல்} [PS] மிக உன்னதமான தேவனாகிய கர்த்தரைத் துதிப்பது நல்லது. [QBR2] உமது நாமத்தைத் துதிப்பது நல்லது. [QBR]
2. காலையில் உமது அன்பைப்பற்றியும் [QBR2] இரவில் உமது நம்பிக்கையைப் பற்றியும் பாடுவது நல்லது. [QBR]
3. தேவனே பத்து நரம்பு வாத்தியங்களாலும், வீணையினாலும், தம்புருவினாலும், [QBR2] இசை மீட்டி உம்மைப் பாடுவது நல்லது. [QBR]
4. கர்த்தாவே, நீர் செய்த காரியங்களால் எங்களை உண்மையாகவே மகிழ்ச்சிப்படுத்துகிறீர். [QBR2] அக்காரியங்களைக் குறித்து நாங்கள் சந்தோஷமாகப் பாடுவோம். [QBR]
5. கர்த்தாவே, நீர் மேன்மையான காரியங்களைச் செய்தீர். [QBR2] உமது எண்ணங்களை எங்களால் புரிந்துகொள்ள முடியாது. [QBR]
6. உம்மோடு ஒப்பிடுகையில் ஜனங்கள் மூடமிருகங்களைப்போல் இருக்கிறார்கள். [QBR2] நாங்கள் எதையும் புரிந்துகொள்ள முடியாத மூடர்களைப்போல் இருக்கிறோம். [QBR]
7. களைகளைப்போல் தீயோர் வாழ்ந்து மறைகிறார்கள். [QBR2] அவர்கள் செய்யும் பயனற்ற காரியங்களே என்றென்றும் அழிக்கப்படும். [QBR]
8. ஆனால் தேவனே, நீர் என்றென்றும் மகிமைப்படுத்தப்படுவீர். [QBR]
9. கர்த்தாவே, உமது பகைவர்கள் எல்லோரும் அழிக்கப்படுவார்கள். [QBR2] தீயவை செய்யும் எல்லா ஜனங்களும் அழிக்கப்படுவார்கள். [QBR]
10. ஆனால் நீர் என்னைப் பெலனுடையவனாகச் செய்கிறீர். [QBR2] பலத்த கொம்புகளையுடைய ஆட்டைப் போலாவேன். [QBR] விசேஷ வேலைக்காக நீர் என்னைத் தேர்ந்தெடுத்தீர். [QBR2] உமது புது எண்ணெயை என்மீது ஊற்றினீர். [QBR]
11. என் பகைவர்களை என்னைச் சுற்றிலும் காண்கிறேன். [QBR2] என்னைத் தாக்க வருகிற பெருங்காளைகளைப் போல அவர்கள் காணப்படுகிறார்கள். [QBR2] அவர்கள் என்னைக் குறித்துச் சொல்பவற்றை நான் கேட்கிறேன்.
12. (12-13) செழிப்பாக வளருகின்ற பனைமரத்தைப் போல் நீதிமான் இருப்பான். [QBR2] லீபனோனின் கேதுரு மரத்தைப்போல் நல்லவன் இருப்பான். [QBR] கர்த்தருடைய ஆலயத்தில் நடப்பட்ட மரங்களைப்போல் நல்லோர் வலிமையுடன் இருப்பார்கள். [QBR2] தேவனுடைய ஆலய முற்றத்தில் அவர்கள் வலிமையோடு வளருவார்கள். [QBR]
13. வயது முதிர்ந்தபோதும் அவர்கள் தொடர்ந்து கனிகளைத் தருவார்கள். [QBR2] அவர்கள் செழுமையும், பசுமையுமான மரங்களைப்போல் இருப்பார்கள். [QBR]
14. கர்த்தர் நல்லவர் என்பதை எல்லோருக்கும் காண்பிப்பார்கள். [QBR2] அவர் என் பாறை அவர் ஒருபோதும் தீமை செய்வதில்லை. [PE]
15.