1. {#0புத்தகம் 4 [BR](சங்கீதம் 90-106) }{#2தேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெபம் } [QS]ஆண்டவரே, என்றென்றும் எப்போதும் நீரே எங்கள் புகலிடம். [QE]
2. [QS]தேவனே, பர்வதங்கள் பிறக்கும்முன்பும், பூமியும் உலகமும் உருவாக்கப்படும் முன்பும் நீரே தேவன். [QE][QS2]தேவனே, நீர் எப்போதும் இருந்தவர், நீர் எப்போதும் இருக்கும் தேவன்! [QE][PBR]
3. [QS]நீர் உலகில் ஜனங்களைக் கொண்டுவந்தீர், [QE][QS2]நீர் அவர்களை மீண்டும் தூளாக மாற்றுகிறீர். [QE]
4. [QS]ஓராயிரம் ஆண்டுகள் உமக்கு முந்திய நாளைப் போலவும் [QE][QS2]கடந்த இரவைப் போலவும் இருக்கும். [QE]
5. [QS]நீர் எங்களைப் பெருக்கித் தள்ளுகிறீர். [QE][QS2]எங்கள் வாழ்க்கை ஒரு கனவைப் போன்றது, காலையில் நாங்கள் மறைந்து போகிறோம். [QE][QS]நாங்கள் புல்லைப் போன்றவர்கள். [QE]
[QS2]6. காலையில் புல் வளரும், மாலையில் அது காய்ந்து, வாடிப்போகும். [QE]
7. [QS]தேவனே, நீர் கோபமாயிருக்கும்போது நாங்கள் அழிக்கப்படுவோம். [QE][QS2]உமது கோபம் எங்களை அச்சுறுத்துகிறது! [QE]
8. [QS]எங்கள் பாவங்கள் அனைத்தையும் நீர் அறிகிறீர். [QE][QS2]தேவனே, எங்கள் இரகசிய பாவங்கள் ஒவ்வொன்றையும் நீர் காண்கிறீர். [QE]
9. [QS]உமது கோபம் எங்கள் வாழ்க்கையை முடிவுறச் செய்யும். [QE][QS2]காதில் இரகசியமாகச் சொல்லும் சொல்லைப்போன்று எங்கள் உயிர்கள் மறைந்துபோகும். [QE]
10. [QS]நாங்கள் எழுபது ஆண்டுகள் வாழக்கூடும். [QE][QS2]பலமுடையவர்களாயின் எண்பது ஆண்டுகள் வாழலாம். [QE][QS]எங்கள் வாழ்க்கை கடும் உழைப்பினாலும், நோயினாலும் நிரம்பியவை. [QE][QS2]திடீரென, எங்கள் வாழ்க்கை முடிவுறும்! [QE][QS2]நாங்கள் பறந்து மறைவோம். [QE]
11. [QS]தேவனே, உமது கோபத்தின் முழு வல்லமையையும் ஒருவரும் அறியார். [QE][QS2]ஆனால் தேவனே, எங்கள் பயமும், உம்மிடம் நாங்கள் கொண்டுள்ள மதிப்பும் உமது கோபத்தைப்போன்று பெரியவை. [QE]
12. [QS]நாங்கள் உண்மையிலேயே ஞானமுடையவர்களாகும்படி [QE][QS2]எங்கள் வாழ்க்கை எத்தனை குறுகியது என்பதை எங்களுக்குக் கற்பியும். [QE]
13. [QS]கர்த்தாவே, எங்களிடம் எப்போதும் திரும்பி வாரும். [QE][QS2]உமது பணியாட்களிடம் இரக்கமாயிரும். [QE]
14. [QS]ஒவ்வொரு காலையிலும் உமது அன்பால் எங்களை நிரப்பும். [QE][QS2]நாங்கள் மகிழ்ந்து எங்கள் வாழ்க்கையில் களிகூரச் செய்யும். [QE]
15. [QS]எங்கள் வாழ்க்கையில் மிகுந்த துன்பத்தையும் குழப்பங்களையும் தந்தீர். [QE][QS2]இப்போது எங்களை சந்தோஷப்படுத்தும். [QE]
16. [QS]நீர் செய்யும் அற்புதச் செய்லகளை உமது ஊழியர்கள் காணச்செய்யும் [QE][QS2]உம்முடைய மகிமையை அவர்களின் பிள்ளைகள் காணச்செய்யும். [QE]
17. [QS]எங்கள் தேவனாகிய ஆண்டவரே, எங்களிடம் தயவாயிரும். [QE][QS2]நாங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் செம்மைப்படுத்தும். [QE][QS2]தேவனே நாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் நன்மையை வழங்கு வீராக. [QE][PBR]