1. {தேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெபம்} [PS] ஆண்டவரே, என்றென்றும் எப்போதும் நீரே எங்கள் புகலிடம். [QBR]
2. தேவனே, பர்வதங்கள் பிறக்கும்முன்பும், பூமியும் உலகமும் உருவாக்கப்படும் முன்பும் நீரே தேவன். [QBR2] தேவனே, நீர் எப்போதும் இருந்தவர், நீர் எப்போதும் இருக்கும் தேவன்!
3. நீர் உலகில் ஜனங்களைக் கொண்டுவந்தீர், [QBR2] நீர் அவர்களை மீண்டும் தூளாக மாற்றுகிறீர். [QBR]
4. ஓராயிரம் ஆண்டுகள் உமக்கு முந்திய நாளைப் போலவும் [QBR2] கடந்த இரவைப் போலவும் இருக்கும். [QBR]
5. நீர் எங்களைப் பெருக்கித் தள்ளுகிறீர். [QBR2] எங்கள் வாழ்க்கை ஒரு கனவைப் போன்றது, காலையில் நாங்கள் மறைந்து போகிறோம். [QBR] நாங்கள் புல்லைப் போன்றவர்கள். [QBR2]
6. காலையில் புல் வளரும், மாலையில் அது காய்ந்து, வாடிப்போகும். [QBR]
7. தேவனே, நீர் கோபமாயிருக்கும்போது நாங்கள் அழிக்கப்படுவோம். [QBR2] உமது கோபம் எங்களை அச்சுறுத்துகிறது! [QBR]
8. எங்கள் பாவங்கள் அனைத்தையும் நீர் அறிகிறீர். [QBR2] தேவனே, எங்கள் இரகசிய பாவங்கள் ஒவ்வொன்றையும் நீர் காண்கிறீர். [QBR]
9. உமது கோபம் எங்கள் வாழ்க்கையை முடிவுறச் செய்யும். [QBR2] காதில் இரகசியமாகச் சொல்லும் சொல்லைப்போன்று எங்கள் உயிர்கள் மறைந்துபோகும். [QBR]
10. நாங்கள் எழுபது ஆண்டுகள் வாழக்கூடும். [QBR2] பலமுடையவர்களாயின் எண்பது ஆண்டுகள் வாழலாம். [QBR] எங்கள் வாழ்க்கை கடும் உழைப்பினாலும், நோயினாலும் நிரம்பியவை. [QBR2] திடீரென, எங்கள் வாழ்க்கை முடிவுறும்! [QBR2] நாங்கள் பறந்து மறைவோம். [QBR]
11. தேவனே, உமது கோபத்தின் முழு வல்லமையையும் ஒருவரும் அறியார். [QBR2] ஆனால் தேவனே, எங்கள் பயமும், உம்மிடம் நாங்கள் கொண்டுள்ள மதிப்பும் உமது கோபத்தைப்போன்று பெரியவை. [QBR]
12. நாங்கள் உண்மையிலேயே ஞானமுடையவர்களாகும்படி [QBR2] எங்கள் வாழ்க்கை எத்தனை குறுகியது என்பதை எங்களுக்குக் கற்பியும். [QBR]
13. கர்த்தாவே, எங்களிடம் எப்போதும் திரும்பி வாரும். [QBR2] உமது பணியாட்களிடம் இரக்கமாயிரும். [QBR]
14. ஒவ்வொரு காலையிலும் உமது அன்பால் எங்களை நிரப்பும். [QBR2] நாங்கள் மகிழ்ந்து எங்கள் வாழ்க்கையில் களிகூரச் செய்யும். [QBR]
15. எங்கள் வாழ்க்கையில் மிகுந்த துன்பத்தையும் குழப்பங்களையும் தந்தீர். [QBR2] இப்போது எங்களை சந்தோஷப்படுத்தும். [QBR]
16. நீர் செய்யும் அற்புதச் செய்லகளை உமது ஊழியர்கள் காணச்செய்யும் [QBR2] உம்முடைய மகிமையை அவர்களின் பிள்ளைகள் காணச்செய்யும். [QBR]
17. எங்கள் தேவனாகிய ஆண்டவரே, எங்களிடம் தயவாயிரும். [QBR2] நாங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் செம்மைப்படுத்தும். [QBR2] தேவனே நாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் நன்மையை வழங்கு வீராக. [PE]