1. {#2முத்லபேன் என்ற இசைக்கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் } [QS]என் முழு இருதயத்தோடும் நான் கர்த்தரைத் துதிப்பேன். [QE][QS2]கர்த்தாவே, நீர் செய்த எல்லா அற்புதமான காரியங்களையும் நான் எடுத்துக் கூறுவேன். [QE]
2. [QS]நீர் என்னை மிகவும் சந்தோஷப்படுத்துகிறீர். [QE][QS2]உன்னதமான தேவனே, நான் உமது நாமத்தைத் துதிப்பேன். [QE]
3. [QS]என் பகைவர்கள் உம்மிடமிருந்து ஓட முயன்றார்கள். [QE][QS2]ஆனால் அவர்கள் விழுந்து அழிந்தார்கள். [QE][PBR]
4. [QS]நீர் நல்ல நீதிபதி. உமது சிங்காசனத்தில் நீதிபதியாக அமர்ந்தீர். [QE][QS2]கர்த்தாவே, என் வழக்கைக் கேட்டீர். [QE][QS2]எனக்குரிய நீதியான முடிவை அளித்தீர். [QE]
5. [QS]பிற ஜனங்களை நீர் கண்டித்தீர் கர்த்தாவே, நீர் அந்தத் தீயோரை அழித்தீர். [QE][QS2]உயிருள்ள ஜனங்களின் பட்டியலிலிருந்து என்றென்றும் அவர்கள் பெயரை அகற்றினீர். [QE]
6. [QS]பகைவன் ஒழிக்கப்பட்டான்! [QE][QS2]கர்த்தாவே, அவர்கள் நகரங்களை அழித்தீர், அழிந்த கட்டிடங்களே இன்று உள்ளன. [QE][QS2]அத்தீயோரை நினைவுபடுத்த எதுவும் இன்று இல்லை. [QE][PBR]
7. [QS]ஆனால் கர்த்தர் என்றென்றும் அரசாளுவார். [QE][QS2]கர்த்தர் அவர் அரசை வலுவாக்குவார். [QE][QS2]உலகிற்கு நியாயத்தை வழங்க அவர் இதைச் செய்தார். [QE]
8. [QS]உலகில் உள்ள எல்லா ஜனங்களுக்கும் கர்த்தர் நியாயமான தீர்ப்பு வழங்குவார். [QE][QS2]எல்லா நாடுகளுக்கும் நீதியோடு தீர்ப்பு வழங்குவார். [QE]
9. [QS]பல குழப்பங்கள் இருப்பதால் பல ஜனங்கள் அகப்பட்டுக் காயமுற்றனர். [QE][QS2]அவர்கள் தங்கள் துன்பங்களின் பாரத்தால் நசுங்குண்டு போயினர். [QE][QS2]கர்த்தாவே, நீர் அவர்களுக்கு அடைக்கலமாயிரும். [QE][PBR]
10. [QS]உமது நாமத்தை அறிந்த ஜனங்கள் உம்மை நம்பவேண்டும். [QE][QS2]கர்த்தாவே, ஜனங்கள் உம்மிடம் வந்தால் அவர்களுக்கு உதவாது விடமாட்டீர். [QE][PBR]
11. [QS]சீயோனில் வாழும் ஜனங்களே கர்த்தரைத் துதித்துப் பாடுங்கள். [QE][QS2]கர்த்தர் செய்த பெரிய காரியங்களைப் பிற தேசங்களில் கூறுங்கள். [QE]
12. [QS]உதவிநாடிப் போனோரைக் கர்த்தர் நினைவு கூருவார். [QE][QS2]அந்த ஏழை ஜனங்கள் உதவிக்காக அவரிடம் சென்றனர். [QE][QS2]கர்த்தர் அவர்களை மறக்கவில்லை. [QE]
13. [QS]நான் தேவனிடம் இந்த ஜெபத்தைக் கூறினேன்: [QE][QS2]“கர்த்தாவே, என்னிடம் தயவாயிரும். [QE][QS2]பாரும், என் பகைவர்கள் என்னைத் தாக்குகிறார்கள். [QE][QS2]‘மரணவாசலில்’ இருந்து என்னைக் காப்பாற்றும். [QE]
14. [QS]அப்போது கர்த்தாவே, எருசலேமின் வாசல்களில் நான் உம்மைத் துதித்துப் பாடக்கூடும். [QE][QS2]என்னை நீர் காப்பாற்றியதால் நான் மிகவும் மகிழ்ச்சிகொள்வேன்.” [QE][PBR]
15. [QS]பிறரை அகப்படுத்த யூதரல்லாத ஜனங்கள் குழிகளைத் தோண்டினார்கள். [QE][QS2]அக்குழிகளில் அவர்களே வீழ்ந்தனர். [QE][QS2]பிறரை அகப்படுத்த வலைகளை விரித்தனர். அவ்வலைகளில் அவர்களே சிக்குண்டனர். [QE]
16. [QS]கர்த்தர் அத்தீயோரைப் பிடித்தார். [QE][QS2]தீயவை செய்வோரைக் கர்த்தர் தண்டிப்பாரென அந்த ஜனங்கள் அறிந்துகொண்டனர். [QE][PBR]
17. [QS]தேவனை மறக்கும் ஜனங்கள் தீயோர்கள். [QE][QS2]அந்த ஜனங்கள் மரணத்தின் இடங்களுக்குச் செல்வார்கள். [QE]
18. [QS]துன்பப்பட்ட ஜனங்களை தேவன் மறந்துவிட்டாரென சில நேரங்களில் தோன்றும். [QE][QS2]அந்த ஏழைகள் நம்பிக்கையிழக்கும் நிலை வந்ததென்று தோன்றும். [QE][QS2]ஆனால் தேவன் அவர்களை என்றென்றும் மறப்பதில்லை. [QE]
19. [QS]கர்த்தாவே, எழுந்து தேசங்களை நியாந் தீரும். [QE][QS2]தாங்கள் வல்லமை மிகுந்தோரென ஜனங்கள் தங்களை நினையாதபடி செய்யும். [QE]
20. [QS]ஜனங்களுக்குப் பாடம் கற்பியும். [QE][QS2]அவர்கள் தாங்கள் சாதாரண மனிதப் படைப்பு மட்டுமே என்றறியச் செய்யும். [QE][PBR]