1. {எஸ்ராகியனாகிய ஏத்தானின் ஒரு மஸ்கீல்} [PS] கர்த்தருடைய அன்பைக்குறித்து என்றைக்கும் நான் பாடுவேன். [QBR2] என்றென்றுமுள்ள அவரது உண்மையைப்பற்றி நான் பாடுவேன். [QBR]
2. கர்த்தாவே, உமது அன்பு என்றென்றும் நிலைக்கும் என்று உண்மையாகவே நான் நம்புகிறேன். [QBR2] உமது உண்மை வானத்தைப்போலத் தொடர்கிறது.
3. தேவன், “நான் தேர்ந்தெடுத்த அரசனோடு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டேன். [QBR]
4. தாவீதே, உன் குடும்பம் என்றென்றும் நிலைத்திருக்கும்படிச் செய்வேன். [QBR2] என்றென்றைக்கும் உமது அரசு தொடருமாறு செய்வேன்” என்றார்.
5. கர்த்தாவே, நீர் வியக்கத்தக்க காரியங்களைச் செய்கிறீர். [QBR2] வின்ணுலகம் இதற்காக உம்மைத் துதிக்கும். [QBR] ஜனங்கள் உம்மைச் சார்ந்திருக்கமுடியும். [QBR2] பரிசுத்தரின் கூட்டம் இதைப்பற்றிப் பாடும். [QBR]
6. பரலோகத்தில் கர்த்தருக்கு நிகரானவர் எவருமில்லை. [QBR2] “தெய்வங்களில்” எவரையும் கர்த்தரோடு ஒப்பிட முடியாது. [QBR]
7. தேவன் பரிசுத்தமானவரைச் சந்திக்கிறார். [QBR2] அவருடைய தூதர்கள் அவரைச் சுற்றியிருப்பார்கள். [QBR] அவர்கள் தேவனுக்குப் பயந்து அவரை மதிப்பார்கள். [QBR2] அவரைக் கண்டு பயபக்தியோடு நிற்பார்கள். [QBR]
8. சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்மைப் போன்றோர் வேறெவருமில்லை. [QBR2] உம்மை நாங்கள் முழுமையாக நம்பமுடியும். [QBR]
9. நீர் பெருமிதத்தோடு கடலை ஆளுகிறீர். [QBR2] அதன் கோபமான அலைகளை நீர் அமைதிப்படுத்த முடியும். [QBR]
10. தேவனே, நீர் ராகாபைத் தோற்கடித்தீர். [QBR2] உமது சொந்த வல்லமைமைமிக்க கரங்களால் நீர் உமது பகைவர்களைச் சிதறடித்தீர். [QBR]
11. தேவனே, பரலோகத்திலும், பூமியிலுமுள்ள அனைத்தும் உமக்குரியவை. [QBR2] உலகையும் அதிலுள்ள அனைத்தையும் நீரே உண்டாக்கினீர். [QBR]
12. வடக்கு, தெற்கு, அனைத்தையும் நீர் படைத்தீர். [QBR2] தாபோர் மலையும் எர்மோன் மலையும் உமது நாமத்தைத் துதித்துப் பாடும். [QBR]
13. தேவனே, உமக்கு வல்லமை உண்டு! [QBR2] உமது வல்லமை மேன்மையானது! வெற்றியும் உமக்குரியதே! [QBR]
14. உண்மையிலும் நீதியிலும் உமது அரசு கட்டப்பட்டது. [QBR2] அன்பும் நம்பிக்கையும் உமது சிங்காசனத்திற்கு முன்பு நிற்கும் பணியாட்கள். [QBR]
15. தேவனே, உம்மை நேர்மையாகப் பின்பற்றுவோர் உண்மையிலேயே மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். [QBR2] அவர்கள் உமது தயவின் ஒளியில் வாழ்கிறார்கள். [QBR]
16. உமது நாமம் அவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக்கும். [QBR2] அவர்கள் உமது நன்மையைத் துதிக்கிறார்கள். [QBR]
17. நீரே அவர்களின் வியக்கத்தக்க பெலன். [QBR2] அவர்களுடைய வல்லமை உம்மிடமிருந்து வரும். [QBR]
18. கர்த்தாவே, நீரே எமது பாதுகாவலர். [QBR2] இஸ்ரவேலின் பரிசுத்தமானவரே எங்கள் ராஜா. [QBR]
19. உம்மைப் பின்பற்றுவோருக்குத் தரிசனம் தந்த நீர், “கூட்டத்திலிருந்து ஒரு இளைஞனை நான் தேர்ந்தெடுத்தேன். [QBR2] அந்த இளைஞனை முக்கியமானவனாக்கினேன். அந்த இளம் வீரனை ஆற்றலுடையவனாக்கினேன். [QBR]
20. நான் எனது பணியாளாகிய தாவீதைக் கண்டெடுத்தேன். [QBR2] விசேஷமான எண்ணெயால் அவனை அபிஷேகம் செய்தேன். [QBR]
21. என் வலது கரத்தால் தாவீதைத் தாங்கினேன். [QBR2] எனது வல்லமையால், அவனை வலிமையுள்ளவனாக்கினேன். [QBR]
22. தேர்ந்தெடுத்த அந்த அரசனைப் பகைவன் தோற்கடிக்க முடியாமற்போயிற்று. [QBR2] தீயோர் அவனைத் தோற்கடிக்க இயலவில்லை. [QBR]
23. அவனது பகைவர்களை நான் அழித்தேன். [QBR2] நான் தேர்ந்தெடுத்த அரசனைப் பகைத்தவர்களை நான் தோற்கடித்தேன். [QBR]
24. நான் தேர்ந்தெடுத்த அரசனை எப்போதும் நேசித்து அவனைத் தாங்குவேன். [QBR2] அவனை எப்போதும் ஆற்றல் பெறச்செய்வேன். [QBR]
25. நான் தேர்ந்தெடுத்த அரசனைக் கடலுக்கு அதிகாரியாக வைத்தேன். [QBR2] அவன் ஆறுகளைக் கட்டுப்படுத்துவான். [QBR]
26. அவன் என்னை நோக்கி, ‘நீரே என் தந்தை. [QBR2] நீர் என் தேவன், என் பாறை, என் மீட்பர்’ என்பான். [QBR]
27. நான் அவனை என் முதற்பேறான மகனாக்குவேன். [QBR2] அவன் பூமியின் முதன்மையான அரசனாக இருப்பான். [QBR]
28. நான் தேர்ந்தெடுத்த அரசனை என் அன்பு என்றென்றும் பாதுகாக்கும். [QBR2] அவனோடு நான் செய்த உடன்படிக்கை ஒருபோதும் மாறாது. [QBR]
29. அவன் குடும்பம் என்றென்றும் தொடரும், [QBR2] அவன் அரசு வானங்களிருக்கும்வரை நிலைக்கும். [QBR]
30. அவனது சந்ததியினர் என் சட்டத்தைப் பின்பற்றாது விலகும்போதும், [QBR2] அவர்கள் என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாது மீறும்போதும் நான் அவர்களைத் தண்டிப்பேன். [QBR]
31. நான் தேர்ந்தெடுத்த அரசனின் சந்ததியினர் எனது சட்டங்களை மீறி, [QBR2] என் கட்டளைகளை உதாசீனப்படுத்தினால், [QBR]
32. அப்போது நான் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பேன். [QBR]
33. ஆனால் அந்த ஜனங்களிடமிருந்து என் அன்பை விலக்கமாட்டேன். [QBR2] நான் அவர்களிடம் எப்போதும் நேர்மையாக இருப்பேன். [QBR]
34. நான் தாவீதோடு செய்த உடன்படிக்கையை மீறமாட்டேன். [QBR2] நான் எனது உடன்படிக்கையை மாற்றமாட்டேன். [QBR]
35. எனது பரிசுத்தத்தினால் நான் அவனுக்கு ஒரு வாக்குறுதி அளித்தேன். [QBR2] நான் தாவீதிடம் பொய் கூறமாட்டேன்! [QBR]
36. தாவீதின் குடும்பம் என்றென்றும் நிலைத்திருக்கும். [QBR2] சூரியன் இருக்கும்வரை அவன் அரசு நிலைக்கும். [QBR]
37. சந்திரன் இருக்கும்வரை என்றென்றும் அது தொடரும். [QBR2] வானங்கள் அந்த உடன்படிக்கைக்கு சான்று. [QBR2] அந்த உடன்படிக்கையை நம்பலாம்” என்றீர்.
38. ஆனால் தேவனே, நீர் தேர்ந்தெடுத்த அரசனிடம் கோபங்கொண்டு, [QBR2] அவனைத் தன்னந்தனியாகவிட்டீர். [QBR]
39. நீர் உமது உடன்படிக்கையைத் தள்ளினீர். [QBR2] நீர் அரசனின் கிரீடத்தைத் தரையிலே வீசினீர். [QBR]
40. அரசனின் நகரத்தின் சுவர்களை நீர் கீழே வீழ்த்தினீர். [QBR2] அவனது கோட்டைகளையெல்லாம் அழித்தீர். [QBR]
41. கடந்து செல்லும் ஜனங்கள் அவனிடமிருந்த பொருட்களைத் திருடினார்கள். [QBR2] அவனது அயலார் அவனைக் கண்டு நகைத்தனர். [QBR]
42. நீர் அரசனின் பகைவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தீர். [QBR2] அவனது பகைவர்கள் போரில் அவனை வெற்றிக்கொள்ள அனுமதித்தீர். [QBR]
43. தேவனே, அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள உதவினீர். [QBR2] உமது அரசன் யுத்தத்தில் வெல்ல நீர் உதவவில்லை. [QBR]
44. நீர் அவனை வெல்ல விடவில்லை. [QBR2] நீர் அவனது சிங்காசனத்தை தரையில் வீசினீர். [QBR]
45. நீர் அவனது ஆயுளைக் குறைத்தீர். [QBR2] நீர் அவனை அவமானப்படுத்தினீர்.
46. கர்த்தாவே, இது எத்தனை காலம் தொடரும்? [QBR2] எதுவரைக்கும் நீர் எங்களை உதாசீனப்படுத்துவீர்? [QBR2] என்றென்றும் உமது கோபம் நெருப்பைப் போல் எரியுமா? [QBR]
47. என் ஆயுள் எத்தனை குறுகியது என்பதை நினைவுகூரும். [QBR2] குறைந்த காலங்கள் வாழ்ந்து, மடியும்படி நீர் எங்களைப் படைத்தீர். [QBR]
48. ஒருவனும் வாழ்ந்து, பின் மடியாமல் இருப்பதில்லை. [QBR2] ஒருவனும் கல்லறைக்குத் தப்புவதில்லை.
49. தேவனே, கடந்த காலத்தில் நீர் காட்டிய அன்பு எங்கே? [QBR2] நீர் தாவீதின் குடும்பத்திற்கு நேர்மையாக இருப்பதாக அவனுக்கு வாக்குப்பண்ணினீர். [QBR]
50. (50-51) ஆண்டவரே, உமது பணியாளை எவ்வாறு ஜனங்கள் அவமானப்படுத்தினார்கள் என்பதைத் தயவாய் நினைவு கூரும். [QBR2] கர்த்தாவே, உமது பகைவரின் எல்லா அவமானச் சொற்களுக்கும் நான் செவிகொடுக்க நேரிட்டது. [QBR2] நீர் தேர்ந்தெடுத்த அரசனை அந்த ஜனங்கள் அவமானப்படுத்தினார்கள்.
51. கர்த்தருக்கே என்றென்றும் ஸ்தோத்திரம்! [QBR2] ஆமென், ஆமென்! [PE]
52.