1. {#2எஸ்ராகியனாகிய ஏத்தானின் ஒரு மஸ்கீல் } [QS]கர்த்தருடைய அன்பைக்குறித்து என்றைக்கும் நான் பாடுவேன். [QE][QS2]என்றென்றுமுள்ள அவரது உண்மையைப்பற்றி நான் பாடுவேன். [QE]
2. [QS]கர்த்தாவே, உமது அன்பு என்றென்றும் நிலைக்கும் என்று உண்மையாகவே நான் நம்புகிறேன். [QE][QS2]உமது உண்மை வானத்தைப்போலத் தொடர்கிறது. [QE][PBR]
3. [QS]தேவன், “நான் தேர்ந்தெடுத்த அரசனோடு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டேன். [QE]
4. [QS]தாவீதே, உன் குடும்பம் என்றென்றும் நிலைத்திருக்கும்படிச் செய்வேன். [QE][QS2]என்றென்றைக்கும் உமது அரசு தொடருமாறு செய்வேன்” என்றார். [QE][PBR]
5. [QS]கர்த்தாவே, நீர் வியக்கத்தக்க காரியங்களைச் செய்கிறீர். [QE][QS2]வின்ணுலகம் இதற்காக உம்மைத் துதிக்கும். [QE][QS]ஜனங்கள் உம்மைச் சார்ந்திருக்கமுடியும். [QE][QS2]பரிசுத்தரின் கூட்டம் இதைப்பற்றிப் பாடும். [QE]
6. [QS]பரலோகத்தில் கர்த்தருக்கு நிகரானவர் எவருமில்லை. [QE][QS2]“தெய்வங்களில்” எவரையும் கர்த்தரோடு ஒப்பிட முடியாது. [QE]
7. [QS]தேவன் பரிசுத்தமானவரைச் சந்திக்கிறார். [QE][QS2]அவருடைய தூதர்கள் அவரைச் சுற்றியிருப்பார்கள். [QE][QS]அவர்கள் தேவனுக்குப் பயந்து அவரை மதிப்பார்கள். [QE][QS2]அவரைக் கண்டு பயபக்தியோடு நிற்பார்கள். [QE]
8. [QS]சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்மைப் போன்றோர் வேறெவருமில்லை. [QE][QS2]உம்மை நாங்கள் முழுமையாக நம்பமுடியும். [QE]
9. [QS]நீர் பெருமிதத்தோடு கடலை ஆளுகிறீர். [QE][QS2]அதன் கோபமான அலைகளை நீர் அமைதிப்படுத்த முடியும். [QE]
10. [QS]தேவனே, நீர் ராகாபைத் தோற்கடித்தீர். [QE][QS2]உமது சொந்த வல்லமைமைமிக்க கரங்களால் நீர் உமது பகைவர்களைச் சிதறடித்தீர். [QE]
11. [QS]தேவனே, பரலோகத்திலும், பூமியிலுமுள்ள அனைத்தும் உமக்குரியவை. [QE][QS2]உலகையும் அதிலுள்ள அனைத்தையும் நீரே உண்டாக்கினீர். [QE]
12. [QS]வடக்கு, தெற்கு, அனைத்தையும் நீர் படைத்தீர். [QE][QS2]தாபோர் மலையும் எர்மோன் மலையும் உமது நாமத்தைத் துதித்துப் பாடும். [QE]
13. [QS]தேவனே, உமக்கு வல்லமை உண்டு! [QE][QS2]உமது வல்லமை மேன்மையானது! வெற்றியும் உமக்குரியதே! [QE]
14. [QS]உண்மையிலும் நீதியிலும் உமது அரசு கட்டப்பட்டது. [QE][QS2]அன்பும் நம்பிக்கையும் உமது சிங்காசனத்திற்கு முன்பு நிற்கும் பணியாட்கள். [QE]
15. [QS]தேவனே, உம்மை நேர்மையாகப் பின்பற்றுவோர் உண்மையிலேயே மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். [QE][QS2]அவர்கள் உமது தயவின் ஒளியில் வாழ்கிறார்கள். [QE]
16. [QS]உமது நாமம் அவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக்கும். [QE][QS2]அவர்கள் உமது நன்மையைத் துதிக்கிறார்கள். [QE]
17. [QS]நீரே அவர்களின் வியக்கத்தக்க பெலன். [QE][QS2]அவர்களுடைய வல்லமை உம்மிடமிருந்து வரும். [QE]
18. [QS]கர்த்தாவே, நீரே எமது பாதுகாவலர். [QE][QS2]இஸ்ரவேலின் பரிசுத்தமானவரே எங்கள் ராஜா. [QE]
19. [QS]உம்மைப் பின்பற்றுவோருக்குத் தரிசனம் தந்த நீர், “கூட்டத்திலிருந்து ஒரு இளைஞனை நான் தேர்ந்தெடுத்தேன். [QE][QS2]அந்த இளைஞனை முக்கியமானவனாக்கினேன். அந்த இளம் வீரனை ஆற்றலுடையவனாக்கினேன். [QE]
20. [QS]நான் எனது பணியாளாகிய தாவீதைக் கண்டெடுத்தேன். [QE][QS2]விசேஷமான எண்ணெயால் அவனை அபிஷேகம் செய்தேன். [QE]
21. [QS]என் வலது கரத்தால் தாவீதைத் தாங்கினேன். [QE][QS2]எனது வல்லமையால், அவனை வலிமையுள்ளவனாக்கினேன். [QE]
22. [QS]தேர்ந்தெடுத்த அந்த அரசனைப் பகைவன் தோற்கடிக்க முடியாமற்போயிற்று. [QE][QS2]தீயோர் அவனைத் தோற்கடிக்க இயலவில்லை. [QE]
23. [QS]அவனது பகைவர்களை நான் அழித்தேன். [QE][QS2]நான் தேர்ந்தெடுத்த அரசனைப் பகைத்தவர்களை நான் தோற்கடித்தேன். [QE]
24. [QS]நான் தேர்ந்தெடுத்த அரசனை எப்போதும் நேசித்து அவனைத் தாங்குவேன். [QE][QS2]அவனை எப்போதும் ஆற்றல் பெறச்செய்வேன். [QE]
25. [QS]நான் தேர்ந்தெடுத்த அரசனைக் கடலுக்கு அதிகாரியாக வைத்தேன். [QE][QS2]அவன் ஆறுகளைக் கட்டுப்படுத்துவான். [QE]
26. [QS]அவன் என்னை நோக்கி, ‘நீரே என் தந்தை. [QE][QS2]நீர் என் தேவன், என் பாறை, என் மீட்பர்’ என்பான். [QE]
27. [QS]நான் அவனை என் முதற்பேறான மகனாக்குவேன். [QE][QS2]அவன் பூமியின் முதன்மையான அரசனாக இருப்பான். [QE]
28. [QS]நான் தேர்ந்தெடுத்த அரசனை என் அன்பு என்றென்றும் பாதுகாக்கும். [QE][QS2]அவனோடு நான் செய்த உடன்படிக்கை ஒருபோதும் மாறாது. [QE]
29. [QS]அவன் குடும்பம் என்றென்றும் தொடரும், [QE][QS2]அவன் அரசு வானங்களிருக்கும்வரை நிலைக்கும். [QE]
30. [QS]அவனது சந்ததியினர் என் சட்டத்தைப் பின்பற்றாது விலகும்போதும், [QE][QS2]அவர்கள் என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாது மீறும்போதும் நான் அவர்களைத் தண்டிப்பேன். [QE]
31. [QS]நான் தேர்ந்தெடுத்த அரசனின் சந்ததியினர் எனது சட்டங்களை மீறி, [QE][QS2]என் கட்டளைகளை உதாசீனப்படுத்தினால், [QE]
32. [QS]அப்போது நான் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பேன். [QE]
33. [QS]ஆனால் அந்த ஜனங்களிடமிருந்து என் அன்பை விலக்கமாட்டேன். [QE][QS2]நான் அவர்களிடம் எப்போதும் நேர்மையாக இருப்பேன். [QE]
34. [QS]நான் தாவீதோடு செய்த உடன்படிக்கையை மீறமாட்டேன். [QE][QS2]நான் எனது உடன்படிக்கையை மாற்றமாட்டேன். [QE]
35. [QS]எனது பரிசுத்தத்தினால் நான் அவனுக்கு ஒரு வாக்குறுதி அளித்தேன். [QE][QS2]நான் தாவீதிடம் பொய் கூறமாட்டேன்! [QE]
36. [QS]தாவீதின் குடும்பம் என்றென்றும் நிலைத்திருக்கும். [QE][QS2]சூரியன் இருக்கும்வரை அவன் அரசு நிலைக்கும். [QE]
37. [QS]சந்திரன் இருக்கும்வரை என்றென்றும் அது தொடரும். [QE][QS2]வானங்கள் அந்த உடன்படிக்கைக்கு சான்று. [QE][QS2]அந்த உடன்படிக்கையை நம்பலாம்” என்றீர். [QE][PBR]
38. [QS]ஆனால் தேவனே, நீர் தேர்ந்தெடுத்த அரசனிடம் கோபங்கொண்டு, [QE][QS2]அவனைத் தன்னந்தனியாகவிட்டீர். [QE]
39. [QS]நீர் உமது உடன்படிக்கையைத் தள்ளினீர். [QE][QS2]நீர் அரசனின் கிரீடத்தைத் தரையிலே வீசினீர். [QE]
40. [QS]அரசனின் நகரத்தின் சுவர்களை நீர் கீழே வீழ்த்தினீர். [QE][QS2]அவனது கோட்டைகளையெல்லாம் அழித்தீர். [QE]
41. [QS]கடந்து செல்லும் ஜனங்கள் அவனிடமிருந்த பொருட்களைத் திருடினார்கள். [QE][QS2]அவனது அயலார் அவனைக் கண்டு நகைத்தனர். [QE]
42. [QS]நீர் அரசனின் பகைவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தீர். [QE][QS2]அவனது பகைவர்கள் போரில் அவனை வெற்றிக்கொள்ள அனுமதித்தீர். [QE]
43. [QS]தேவனே, அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள உதவினீர். [QE][QS2]உமது அரசன் யுத்தத்தில் வெல்ல நீர் உதவவில்லை. [QE]
44. [QS]நீர் அவனை வெல்ல விடவில்லை. [QE][QS2]நீர் அவனது சிங்காசனத்தை தரையில் வீசினீர். [QE]
45. [QS]நீர் அவனது ஆயுளைக் குறைத்தீர். [QE][QS2]நீர் அவனை அவமானப்படுத்தினீர். [QE][PBR]
46. [QS]கர்த்தாவே, இது எத்தனை காலம் தொடரும்? [QE][QS2]எதுவரைக்கும் நீர் எங்களை உதாசீனப்படுத்துவீர்? [QE][QS2]என்றென்றும் உமது கோபம் நெருப்பைப் போல் எரியுமா? [QE]
47. [QS]என் ஆயுள் எத்தனை குறுகியது என்பதை நினைவுகூரும். [QE][QS2]குறைந்த காலங்கள் வாழ்ந்து, மடியும்படி நீர் எங்களைப் படைத்தீர். [QE]
48. [QS]ஒருவனும் வாழ்ந்து, பின் மடியாமல் இருப்பதில்லை. [QE][QS2]ஒருவனும் கல்லறைக்குத் தப்புவதில்லை. [QE][PBR]
49. [QS]தேவனே, கடந்த காலத்தில் நீர் காட்டிய அன்பு எங்கே? [QE][QS2]நீர் தாவீதின் குடும்பத்திற்கு நேர்மையாக இருப்பதாக அவனுக்கு வாக்குப்பண்ணினீர். [QE]
50. [QS](50-51)ஆண்டவரே, உமது பணியாளை எவ்வாறு ஜனங்கள் அவமானப்படுத்தினார்கள் என்பதைத் தயவாய் நினைவு கூரும். [QE][QS2]கர்த்தாவே, உமது பகைவரின் எல்லா அவமானச் சொற்களுக்கும் நான் செவிகொடுக்க நேரிட்டது. [QE][QS2]நீர் தேர்ந்தெடுத்த அரசனை அந்த ஜனங்கள் அவமானப்படுத்தினார்கள். [QE][PBR]
51.
52. [QS]கர்த்தருக்கே என்றென்றும் ஸ்தோத்திரம்! [QE][QS2]ஆமென், ஆமென்! [QE][PBR]