1. {#2கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த துதிப் பாடல். இது வேதனை தரும் ஒரு நோயைப் பற்றியது. இது எஸ்ராகியனாகிய ஏமானின் மஸ்கீல் என்னும் ஒரு பாடல். } [QS]தேவனாகிய கர்த்தாவே, நீரே எனது மீட்பர். [QE][QS2]இரவும் பகலும் நான் உம்மை நோக்கி ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கிறேன். [QE]
2. [QS]தயவாய் என் ஜெபங்களைக் கவனித்துக் கேளும். [QE][QS2]இரக்கத்திற்காய் வேண்டும் என் ஜெபங்களுக்குச் செவிகொடும். [QE]
3. [QS]இந்த நோயினால் என் ஆத்துமா துயரமாயிருக்கிறது, [QE][QS2]நான் விரைவில் மரிப்பேன். [QE]
4. [QS]ஏற்கெனவே ஜனங்கள் என்னை மரித்தவனைப் போன்றும் [QE][QS2]வாழ பெலனற்ற மனிதனைப் போன்றும் கருதி நடத்துகிறார்கள். [QE]
5. [QS]மரித்தோரிடம் என்னைத் தேடிப்பாருங்கள். [QE][QS2]உங்களிடமிருந்தும் உங்கள் பாதுகாப்பிலிருந்தும் தொடர்பிழந்த நீங்கள் மறந்து போன மரித்த ஜனங்களில் ஒருவனைப் போலவும், கல்லறையில் கிடக்கும் பிணத்தைப்போலவும் நான் இருக்கிறேன். [QE]
6. [QS]பூமியிலுள்ள அந்தத் துவாரத்தில் நீர் என்னை வைத்தீர். [QE][QS2]ஆம், நீர் என்னை இருண்ட இடத்தில் வைத்தீர். [QE]
7. [QS]தேவனே, நீர் என்னிடம் கோபமாயிருந்தீர், என்னைத் தண்டித்தீர். [QE][PBR]
8. [QS]என் நண்பர்கள் என்னை விட்டுப் பிரிந்தார்கள். [QE][QS2]யாரும் தொடவிரும்பாத ஒருவனைப் போன்றும் அவர்கள் என்னைவிட்டு விலகினார்கள். [QE][QS]நான் வீட்டில் அடைக்கப்பட்டேன், நான் வெளியே செல்ல முடியவில்லை. [QE]
9. [QS]என் எல்லாத் துன்பங்களுக்காகவும் அழுவதால் என் கண்கள் புண்படுகின்றன. [QE][QS]தேவனே, உம்மிடம் தொடர்ந்து ஜெபம் செய்கிறேன்! [QE][QS2]ஜெபத்தில் என் கரங்களை உமக்கு நேராக உயர்த்துகிறேன். [QE]
10. [QS]கர்த்தாவே, மரித்தவர்களுக்காக அற்புதங்கள் நிகழ்த்துவீரா? [QE][QS2]ஆவிகள் எழுந்து உம்மைத் துதிக்குமா? இல்லை! [QE][PBR]
11. [QS]கல்லறைகளில் இருக்கும் மரித்தோர் உமது அன்பைக் குறித்துப் பேசமுடியாது. [QE][QS2]மரித்தோரின் உலகத்திலுள்ளவர்கள் உமது உண்மையைக் குறித்துப் பேசமுடியாது. [QE]
12. [QS]இருளில் கிடக்கும் மரித்தோர் நீர் செய்யும் அற்புதமான காரியங்களைப் பார்க்க முடியாது. [QE][QS2]மறக்கப்பட்டோரின் உலகிலுள்ள மரித்தோர் உமது நன்மையைக் குறித்துச் சொல்ல முடியாது. [QE]
13. [QS]கர்த்தாவே, நீர் எனக்கு உதவவேண்டுமென உம்மைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்! [QE][QS2]ஒவ்வொரு நாளும் அதிகாலையில் நான் உம்மிடம் ஜெபம் செய்கிறேன். [QE]
14. [QS]கர்த்தாவே, ஏன் என்னைக் கைவிட்டீர்? [QE][QS2]ஏன் எனக்குச் செவிகொடுக்க மறுக்கிறீர்? [QE]
15. [QS]என் இளமைப் பருவத்திலிருந்தே நான் சோர்ந்து நோயாளியாயிருக்கிறேன். [QE][QS2]உமது கோபத்தால் துன்புற்றேன், நான் திக்கற்றவன். [QE]
16. [QS]கர்த்தாவே, நீர் என்னிடம் கோபம் கொண்டிருந்தீர். [QE][QS2]உமது தண்டனை என்னைக் கொன்று கொண்டிருக்கிறது. [QE]
17. [QS]வலியும் நோயும் எப்போதும் என்னை வருத்துகின்றன. [QE][QS2]என் வலியிலும் நோயிலும் நான் அமிழ்ந்துகொண்டிருப்பதாக உணருகிறேன். [QE]
18. [QS]கர்த்தாவே, என் நண்பர்களையும், அன்பர்களையும், என்னை விட்டு விலகுமாறு செய்தீர். [QE][QS2]இருள் மட்டுமே என்னிடம் நிலைகொண்டது. [QE]