1. தேவனாகிய கர்த்தாவே, நீரே எனது மீட்பர். [QBR2] இரவும் பகலும் நான் உம்மை நோக்கி ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கிறேன். [QBR]
2. தயவாய் என் ஜெபங்களைக் கவனித்துக் கேளும். [QBR2] இரக்கத்திற்காய் வேண்டும் என் ஜெபங்களுக்குச் செவிகொடும். [QBR]
3. இந்த நோயினால் என் ஆத்துமா துயரமாயிருக்கிறது, [QBR2] நான் விரைவில் மரிப்பேன். [QBR]
4. ஏற்கெனவே ஜனங்கள் என்னை மரித்தவனைப் போன்றும் [QBR2] வாழ பெலனற்ற மனிதனைப் போன்றும் கருதி நடத்துகிறார்கள். [QBR]
5. மரித்தோரிடம் என்னைத் தேடிப்பாருங்கள். [QBR2] உங்களிடமிருந்தும் உங்கள் பாதுகாப்பிலிருந்தும் தொடர்பிழந்த நீங்கள் மறந்து போன மரித்த ஜனங்களில் ஒருவனைப் போலவும், கல்லறையில் கிடக்கும் பிணத்தைப்போலவும் நான் இருக்கிறேன். [QBR]
6. பூமியிலுள்ள அந்தத் துவாரத்தில் நீர் என்னை வைத்தீர். [QBR2] ஆம், நீர் என்னை இருண்ட இடத்தில் வைத்தீர். [QBR]
7. தேவனே, நீர் என்னிடம் கோபமாயிருந்தீர், என்னைத் தண்டித்தீர்.
8. என் நண்பர்கள் என்னை விட்டுப் பிரிந்தார்கள். [QBR2] யாரும் தொடவிரும்பாத ஒருவனைப் போன்றும் அவர்கள் என்னைவிட்டு விலகினார்கள். [QBR] நான் வீட்டில் அடைக்கப்பட்டேன், நான் வெளியே செல்ல முடியவில்லை. [QBR]
9. என் எல்லாத் துன்பங்களுக்காகவும் அழுவதால் என் கண்கள் புண்படுகின்றன. [QBR] தேவனே, உம்மிடம் தொடர்ந்து ஜெபம் செய்கிறேன்! [QBR2] ஜெபத்தில் என் கரங்களை உமக்கு நேராக உயர்த்துகிறேன். [QBR]
10. கர்த்தாவே, மரித்தவர்களுக்காக அற்புதங்கள் நிகழ்த்துவீரா? [QBR2] ஆவிகள் எழுந்து உம்மைத் துதிக்குமா? இல்லை!
11. கல்லறைகளில் இருக்கும் மரித்தோர் உமது அன்பைக் குறித்துப் பேசமுடியாது. [QBR2] மரித்தோரின் உலகத்திலுள்ளவர்கள் உமது உண்மையைக் குறித்துப் பேசமுடியாது. [QBR]
12. இருளில் கிடக்கும் மரித்தோர் நீர் செய்யும் அற்புதமான காரியங்களைப் பார்க்க முடியாது. [QBR2] மறக்கப்பட்டோரின் உலகிலுள்ள மரித்தோர் உமது நன்மையைக் குறித்துச் சொல்ல முடியாது. [QBR]
13. கர்த்தாவே, நீர் எனக்கு உதவவேண்டுமென உம்மைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்! [QBR2] ஒவ்வொரு நாளும் அதிகாலையில் நான் உம்மிடம் ஜெபம் செய்கிறேன். [QBR]
14. கர்த்தாவே, ஏன் என்னைக் கைவிட்டீர்? [QBR2] ஏன் எனக்குச் செவிகொடுக்க மறுக்கிறீர்? [QBR]
15. என் இளமைப் பருவத்திலிருந்தே நான் சோர்ந்து நோயாளியாயிருக்கிறேன். [QBR2] உமது கோபத்தால் துன்புற்றேன், நான் திக்கற்றவன். [QBR]
16. கர்த்தாவே, நீர் என்னிடம் கோபம் கொண்டிருந்தீர். [QBR2] உமது தண்டனை என்னைக் கொன்று கொண்டிருக்கிறது. [QBR]
17. வலியும் நோயும் எப்போதும் என்னை வருத்துகின்றன. [QBR2] என் வலியிலும் நோயிலும் நான் அமிழ்ந்துகொண்டிருப்பதாக உணருகிறேன். [QBR]
18. கர்த்தாவே, என் நண்பர்களையும், அன்பர்களையும், என்னை விட்டு விலகுமாறு செய்தீர். [QBR2] இருள் மட்டுமே என்னிடம் நிலைகொண்டது. [PE]