1. {#2கோராகின் குடும்பம் அளித்த ஒரு துதிப் பாடல் } [QS]எருசலேமின் பரிசுத்த மலைகளில் தேவன் தமது ஆலயத்தைக் கட்டினார். [QE]
[QS2]2. இஸ்ரவேலின் வேறெந்த இடத்தைக் காட்டிலும் சீயோனின் வாசற்கதவுகளைக் கர்த்தர் நேசிக்கிறார். [QE]
3. [QS]தேவனுடைய நகரமே, ஜனங்கள் உன்னைக் குறித்து ஆச்சரியமான காரியங்களைக் கூறுகிறார்கள். [QE]
4. [QS]தேவன் தமது எல்லா ஜனங்களின் பட்டியலையும் வைத்திருக்கிறார். [QE][QS2]அவர்களுள் சிலர் எகிப்திலும் பாபிலோனிலும் வசிக்கிறார்கள். [QE][QS2]அவர்களுள் சிலர் பெலிஸ்தியாவிலும், தீருவிலும், எத்தியோப்பியாவிலும் பிறந்தார்கள். [QE]
5. [QS]சீயோனில் பிறந்த ஒவ்வொருவரையும் தேவன் அறிகிறார். [QE][QS2]மிக உன்னதமான தேவன் அந்நகரத்தைக் கட்டினார். [QE]
6. [QS]தேவன் தமது எல்லா ஜனங்களின் பட்டியலையும் வைத்திருக்கிறார். [QE][QS2]ஒவ்வொருவனும் எங்கே பிறதான் என்பதையும் தேவன் அறிகிறார். [QE][PBR]
7. [QS]விசேஷ ஓய்வு நாட்களைக் கொண்டாடுவதற்கு தேவனுடைய ஜனங்கள் எருசலேமுக்குப் போகிறார்கள். [QE][QS2]அவர்கள் மிக மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். [QE][QS]அவர்கள் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டுமிருக்கிறார்கள். [QE][QS2]அவர்கள், “எல்லா நல்லவையும் எருசலேமிலிருந்து வருகின்றன” என்றார்கள். [QE]