1. {#2தாவீதின் விண்ணப்பம் } [QS]நான் ஒரு ஏழை, உதவியற்ற மனிதன். [QE][QS2]கர்த்தாவே, தயவாய் எனக்குச் செவிகொடுத்து என் ஜெபத்திற்குப் பதில் தாரும். [QE]
2. [QS]கர்த்தாவே, நான் உம்மைப் பின்பற்றுபவன். [QE][QS2]தயவாய் என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்! நான் உமது பணியாள். [QE][QS]நீரே என் தேவன். நான் உம்மை நம்புகிறேன். [QE][QS2]எனவே என்னைக் காப்பாற்றும். [QE]
3. [QS]என் ஆண்டவரே, என்னிடம் தயவாயிரும். [QE][QS2]நாள் முழுவதும் நான் உம்மிடம் ஜெபித்துக்கொண்டிருக்கிறேன். [QE]
4. [QS]ஆண்டவரே, உமது கைகளில் என் ஜீவனை வைக்கிறேன். [QE][QS2]என்னை மகிழ்ச்சியாக்கும். நான் உமது பணியாள். [QE]
5. [QS]ஆண்டவரே, நீர் நல்லவர், கிருபையுள்ளவர். [QE][QS2]உமது ஜனங்கள் உதவிக்காக உம்மைக் கூப்பிடுவார்கள். [QE][QS2]நீர் உண்மையாகவே அந்த ஜனங்களை நேசிக்கிறீர். [QE]
6. [QS]கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேளும். [QE][QS2]இரக்கத்திற்கான ஜெபத்திற்குச் செவிகொடும். [QE]
7. [QS]கர்த்தாவே, தொல்லைமிக்க காலத்தில் நான் உம்மிடம் ஜெபித்துக்கொண்டிருக்கிறேன். [QE][QS2]நீர் பதிலளிப்பீர் என்பதை நான் அறிவேன். [QE]
8. [QS]தேவனே, உம்மைப் போன்றோர் வேறெவருமில்லை. [QE][QS2]நீர் செய்தவற்றை வேறெவரும் செய்ய முடியாது. [QE]
9. [QS]ஆண்டவரே, நீர் ஒவ்வொருவரையும் உண்டாக்கினீர். [QE][QS2]அவர்கள் எல்லோரும் வந்து உம்மை தொழுதுகொள்வார்கள் என்றும், அவர்கள் எல்லோரும் உமது நாமத்தை பெருமைப்படுத்துவார்கள் என்றும் நான் நம்புகிறேன். [QE]
10. [QS]தேவனே, நீர் மேன்மையானவர்! [QE][QS2]நீர் அற்புதமான காரியங்களைச் செய்கிறீர். [QE][QS2]நீரே, நீர் மட்டுமே தேவன்! [QE]
11. [QS]கர்த்தாவே, உமது வழிகளை எனக்குப் போதியும். [QE][QS2]நான் வாழ்ந்து உமது சத்தியங்களுக்குக் கீழ்ப்படிவேன். [QE][QS]உமது நாமத்தைத் தொழுது கொள்வதையே [QE][QS2]என் வாழ்க்கையின் மிக முக்கியமான காரியமாகக்கொள்ள எனக்கு உதவும். [QE]
12. [QS]என் ஆண்டவராகிய தேவனே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிக்கிறேன். [QE][QS2]உமது நாமத்தை என்றென்றும் துதிப்பேன். [QE]
13. [QS]தேவனே, என்னிடம் மிகுந்த அன்பு காட்டுகிறீர். [QE][QS2]கீழே மரணத்தின் இடத்திலிருந்து என்னைக் காப்பாற்றும். [QE]
14. [QS]தேவனே, பெருமைமிக்க மனிதர்கள் என்னைத் தாக்குகிறார்கள். [QE][QS2]கொடிய மனிதர்களின் கூட்டம் என்னைக் கொல்லமுயல்கிறது. [QE][QS2]அம்மனிதர்கள் உம்மை மதிப்பதில்லை. [QE]
15. [QS]ஆண்டவரே, நீர் தயவும் இரக்கமும் உள்ள தேவன். [QE][QS2]நீர் பொறுமையுடையவர், உண்மையும் அன்பும் நிறைந்தவர். [QE]
16. [QS]தேவனே, நீர் எனக்குச் செவிகொடுப்பதை எனக்குக் காண்பித்து, என்மீது தயவாயிரும். [QE][QS2]நான் உமது பணியாள். [QE][QS]எனக்குப் பெலனைத் தாரும். [QE][QS2]நான் உமது பணியாள். [QE][QS]என்னைக் காப்பாற்றும். [QE]
17. [QS]தேவனே, நீர் எனக்கு உதவுவீர் என்பதற்கு ஒரு அடையாளத்தைத் தாரும். [QE][QS2]என் பகைவர்கள் அந்த அடையாளத்தைக் கண்டு, ஏமாற்றம்கொள்வார்கள். [QE][QS2]நீர் என் ஜெபத்தைக் கேட்டு எனக்கு உதவுவீர் என்பதை அது காட்டும். [QE]