1. {#2கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த ஒரு துதிப் பாடல் } [QS]கர்த்தாவே, உமது தேசத்தின்மேல் தயவாயிரும். [QE][QS]யாக்கோபின் ஜனங்கள் ஒரு அந்நிய தேசத்தில் அடிமைகளாக இருக்கிறார்கள். [QE][QS2]அடிமைப்பட்டவர்களை மீண்டும் அவர்கள் தேசத்திற்கு அழைத்து வாரும். [QE]
2. [QS]கர்த்தாவே, உமது ஜனங்களை மன்னியும்! [QE][QS2]அவர்கள் பாவங்களை போக்கிவிடும்! [QE][PBR]
3. [QS]கர்த்தாவே, சினமாயிருப்பதை நீர் நிறுத்தும். [QE][QS2]கடுங்கோபமாக இராதேயும். [QE]
4. [QS]எங்கள் தேவனும் இரட்சகருமானவரே, [QE][QS2]எங்களிடம் கோபமாயிருப்பதை விட்டு விட்டு எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும். [QE]
5. [QS]நீர் என்றென்றும் கோபங்கொள்வீரோ? [QE]
6. [QS]தயவுகூரும், எங்களை மீண்டும் வாழச் செய்யும். [QE][QS2]உமது ஜனங்களை சந்தோஷப்படுத்தும். [QE]
7. [QS]கர்த்தாவே, எங்களைக் காப்பாற்றும். [QE][QS2]நீர் எங்களை நேசிப்பதை எங்களுக்குக் காட்டும். [QE][PBR]
8. [QS]தேவனாகிய கர்த்தர் கூறியதை நான் கேட்டேன். [QE][QS2]அவரது ஜனங்களுக்கும், உண்மையான சீடர்களுக்கும் சமாதானம் உண்டாகுமென்று கர்த்தர் கூறினார். [QE][QS2]எனவே மூடத்தனமான வாழ்க்கை முறைக்கு அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்லக் கூடாது. [QE]
9. [QS]தேவன் தம்மைப் பின்பற்றுவோரை விரைவில் மீட்பார். [QE][QS2]நமது தேசத்தில் நாம் பெருமையோடு விரைவில் வாழுவோம். [QE]
10. [QS]தேவனுடைய உண்மையான அன்பு அவரை பின்பற்றுவோரை வந்தைடையும். [QE][QS2]நன்மையும் சமாதானமும் முத்தமிட்டு அவர்களை வாழ்த்தும். [QE]
11. [QS]பூமியின் ஜனங்கள் தேவனிடம் நேர்மையானவர்களாயிருப்பார்கள். [QE][QS2]பரலோகத்தின் தேவனும் அவர்களுக்கு நல்லவராக இருப்பார். [QE]
12. [QS]கர்த்தர் நமக்குப் பல நல்ல பொருள்களைத் தருவார். [QE][QS2]நிலம் பல நல்ல பயிர்களை விளைவிக்கும். [QE]
13. [QS]நன்மை தேவனுக்கு முன்பாகச் செல்லும். [QE][QS2]அது அவருக்கு வழியை ஆயத்தப்படுத்தும். [QE]