2. தேவனே, உமது பகைவர்கள் உமக்கெதிராகத் திட்டங்கள் வகுக்கிறார்கள். உமது பகைவர்கள் உடனே தாக்குதல் ஆரம்பிக்கக்கூடும்.
|
3. உமது ஜனங்களுக்கு எதிராக அவர்கள் இரகசிய திட்டஙகளை வகுக்கிறார்கள். நீர் நேசிக்கும் ஜனங்களுக்கு எதிராக உமது பகைவர்கள் திட்டங்களை கலந்து ஆலோசிக்கிறார்கள்.
|
4. பகைவர்கள் இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்: "வாருங்கள், நாம் பகைவர்களை முற்றிலும் அழிப்போம். பின்பு ஒருநாளும் ஒருவனும் ‘இஸ்ரவேல்’ என்னும் பெயரை நினைவு கூரமாட்டான்."
|
5. தேவனே, அந்த ஜனங்கள் எல்லோரும் உமக்கும் நீர் எங்களோடு செய்த உமது உடன்படிக்கைக்கும் எதிராகப் போராட ஒருமித்துக் கூடினார்கள்.
|
8. அசீரியரும்கூட அந்த ஜனங்களோடு சேர்ந்தார்கள். லோத்தின் சந்ததியினர் மிகுந்த வல்லமை பெறும்படிச் செய்தார்கள்.
|
9. தேவனே, மீதியானியரைத் தோற்கடித்ததைப் போலவும் கீசோன் நதியருகே சிசெரா மற்றும் யாபீன் ஜனங்களைத் தோற்கடித்ததைப்போலவும் பகைவனைத் தோற்கடியும்.
|
11. தேவனே, பகைவனின் தலைவர்களைத் தோற்கடியும். ஓரேபுக்கும் சேபுக்கும் செய்தபடியே செய்யும். சேபாவுக்கும் சல்முனாவுக்கும் செய்தபடியே செய்யும்.
|
13. தேவனே, அந்த ஜனங்களைக் காற்றில் பறக்கும் பதராகப் பண்ணும். காற்றுப் பறக்கடிக்கும் புல்லைப்போல் அந்த ஜனங்களைச் சிதறடியும்.
|
15. தேவனே, புயலில் அலைக்கழிக்கப்படும் துகளைப்போல அந்த ஜனங்களை துரத்திவிடும். அவர்களை அசையும், அவர்களைப் பெருங்காற்றைப்போல நின்று பறக்கடியும்.
|
16. தேவனே அவர்கள் உண்மையிலேயே சோர்வுடையவர்கள் என்பதை அந்த ஜனங்கள் அறியும்படி அவர்களுக்குப் போதியும். அப்போது அவர்கள் உமது நாமத்தை தொழுதுகொள்ள விரும்புவார்கள்!
|
17. தேவனே, அந்த ஜனங்களை அச்சுறுத்தி, அவர்கள் என்றென்றும் வெட்கமடையச் செய்யும். அவர்களை இழிவுப்படுத்தி, அழித்துப்போடும்.
|
18. அப்போது நீரே தேவனென்று அவர்கள் அறிவார்கள். உமது நாமம் யேகோவா என்பதையும் அவர்கள் அறிவார்கள். மிக உன்னதமான தேனாகிய நீர் உலகம் முழுவதற்கும் தேவன் என்பதையும் அவர்கள் அறிவார்கள்.
|