1. {#2கித்தீத் என்னும் இசைக்கருவியை வாசிக்கும் இராகத் தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல்களுள் ஒன்று } [QS]நமது பெலனாகிய தேவனைப் பாடி மகிழ்ச்சியாயிருங்கள். [QE][QS2]இஸ்ரவேலரின் தேவனை நோக்கி மகிழ்ச்சியால் ஆர்ப்பரியுங்கள். [QE]
2. [QS]இசையைத் தொடங்குங்கள், தம்புராவை வாசியுங்கள். [QE][QS2]வீணையையும் சுரமண்டலத்தையும் இசையுங்கள். [QE]
3. [QS]மாதப்பிறப்பு நாளில் எக்காளம் ஊதுங்கள். [QE][QS2]முழு நிலவின் நாளில் எக்காளம் ஊதுங்கள். [QE][QS2]அப்போது நம் விடுமுறை ஆரம்பமாகிறது. [QE]
4. [QS]அது இஸ்ரவேலருக்கு சட்டமாக வகுக்கப்பட்டிருந்தது. [QE][QS2]தேவன் அக்கட்டளையை யாக்கோபிற்குக் கொடுத்தார். [QE]
5. [QS]தேவன் யோசேப்பை[* யோசேப்பு இங்கு இது யோசேப்பின் குடும்பம் என்று அர்த்தம், இவர்கள் இஸ்ரவேல் ஜனங்கள். ] எகிப்திலிருந்து அழைத்துச் சென்றபோது அவனோடு இந்த உடன்படிக்கையைச் செய்தார். [QE][QS2]எகிப்தில், எங்களால் புரிந்துகொள்ள முடியாத மொழியை நாங்கள் கேட்டோம். [QE]
6. [QS]தேவன், “உனது தோள்களிலிருந்து பாரத்தை இறக்கியிருக்கிறேன். [QE][QS2]உன்னிடமிருந்து பணியாட்களின் கூடையை விழப்பண்ணினேன். [QE]
7. [QS]நீங்கள் தொல்லைகளில் சிக்குண்டிருந்தீர்கள். [QE][QS2]நீங்கள் உதவிக்காகக் கூப்பிட்டீர்கள், நான் உங்களை விடுவித்தேன். [QE][QS]புயல் மேகங்களில் மறைந்திருந்து உங்களுக்குப் பதிலளித்தேன். [QE][QS2]மேரிபாவின் தண்ணீரண்டையில் நான் உங்களை சோதித்தேன்.” [QE][PBR]
8. [QS]“எனது ஜனங்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். [QE][QS2]அப்போது என் உடன்படிக்கையை உங்களுக்குத் தருவேன். [QE][QS2]இஸ்ரவேலே, நான் சொல்வதை தயவாய்க்கேள்! [QE]
9. [QS]வேற்றுநாட்டார் தொழுதுகொள்ளும் பொய் தெய்வங்களை [QE][QS2]நீ தொழுதுகொள்ளாதே. [QE]
10. [QS]கர்த்தராகிய நானே உன் தேவன். [QE][QS2]நான் உன்னை எகிப்திலிருந்து வரவழைத்தேன். [QE][QS]இஸ்ரவேலே, உன் வாயைத் திற, [QE][QS2]நான் உன்னைப் போஷிப்பேன். [QE][PBR]
11. [QS]“ஆனால் என் ஜனங்கள் எனக்குச் செவிசாய்க்கவில்லை. [QE][QS2]இஸ்ரவேல் எனக்குக் கீழ்ப்படியவில்லை. [QE]
12. [QS]எனவே அவர்கள் செய்ய விரும்பியதைச் செய்யுமாறு அனுமதித்தேன். [QE][QS2]இஸ்ரவேலர் அவர்கள் விரும்பியவற்றையெல்லாம் செய்தார்கள். [QE]
13. [QS]என் ஜனங்கள் நான் கூறுவதைக் கேட்டு, [QE][QS2]என் விருப்பப்படியே வாழ்ந்தால், [QE]
14. [QS]அப்போது நான் அவர்கள் பகைவர்களைத் தோற்கடிப்பேன். [QE][QS2]இஸ்ரவேலருக்குத் தொல்லை தரும் ஜனங்களைத் தண்டிப்பேன். [QE]
15. [QS]கர்த்தருடைய பகைவர்கள் அச்சத்தால் நடுங்குவார்கள். [QE][QS2]அவர்கள் என்றென்றைக்கும் தண்டிக்கப்படுவார்கள். [QE]
16. [QS]தேவன் அவரது ஜனங்களுக்குச் சிறந்த கோதுமையை கொடுப்பார். [QE][QS2]அவர்கள் திருப்தியடையும்வரை கன்மலையானவர் அவரது ஜனங்களுக்குத் தேனைக் கொடுப்பார்”. [QE]