1. {கித்தீத் என்ற இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்குத் தந்த தாவீதின் சங்கீதம்} [PS] எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது நாமம் பூமியின் எல்லா இடத்திலும் மிகுந்த அற்புதமானது! [QBR2] விண்ணுலகிலும் உமது நாமம் உமக்குத் துதிகளைக் கொண்டு வருகிறது.
2. பிள்ளைகள், குழந்தைகள் வாயிலுமிருந்து உம்மைத் துதிக்கும் பாடல்கள் வெளிப்படும். [QBR2] உம் பகைவரை அமைதிப்படுத்த இவ்வல்லமையான பாடல்களைக் கொடுத்தீர்.
3. கர்த்தாவே, உமது கைகளால் நீர் செய்த வானங்களை நான் கண்டேன். [QBR2] நீர் படைத்த நிலாவையும், நட்சத்திரங்களையும் நான் கண்டு ஆச்சரியமடைந்தேன். [QBR]
4. ஏன் மனிதர்கள் உமக்கு முக்கியமாயினர்? [QBR2] ஏன் அவர்களை நீர் நினைவுகூருகிறீர்? [QBR2] ஏன் அவர்களைக் கவனிக்கிறீர்?
5. ஆனால் மனிதர்கள் உமக்கு முக்கியமாயினர்! [QBR2] அவர்களை ஏறக்குறைய தேவர்களைப் போலவே உண்டாக்கினீர். [QBR2] மனிதரை மகிமையாலும், மேன்மையாலும் முடிசூட்டினீர். [QBR]
6. நீர் உண்டாக்கின எல்லாவற்றிற்கும் அவர்களை அதிகாரிகளாக வைத்தீர். [QBR]
7. ஆடுகள்,பசுக்கள், காட்டு மிருகங்கள் அனைத்தையும் மனிதர்கள் ஆண்டனர். [QBR]
8. வானத்துப் பறவைகளையும் [QBR2] சமுத்திரத்தில் நீந்தும் மீன்களையும் அவர்கள் ஆண்டனர். [QBR]
9. எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது நாமம் உலகத்தில் எங்கும் மிகவும் மிகவும் அற்புதமானது! [PE]